அந்தரங்கச் சுகங்களைத் தேடி மனம் அலைவதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான முயற்சிகளால் சாத்தியப்படலாம். ஆனால்.....
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
செவ்வாய், 28 அக்டோபர், 2025
தேடிப்போவதும் தேடாமலே வருவதும்!!
அந்தச் சுகங்களுக்கான வாய்ப்புகள் தாமாகத் தேடிவந்தால், மனதைக் கட்டுப்படுத்துவது மிக மிக மிகக் கடினம்! பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் குப்புறக் கவிழ்ந்தது இம்மாதிரியான சூழல்களில் முழுக் கட்டுப்பாட்டையும் இழந்தததால்தான்!!
எடுத்துக்காட்டு: 'விசுவாமித்திரன் - மேனகா' புராணக் கதை.
திங்கள், 27 அக்டோபர், 2025
‘மோடி’யே இந்தப் பிரபஞ்சத்தின் குரு! பிரார்த்தித்துப் பயன் பெறுங்கள்!!
‘விஸ்வகுரு’ என்னும் சொல்லுக்கு.....
விஸ்வகுரு[சமஸ்கிருதம் विश्व गुरु] என்பது இரண்டு சொற்களைக் கொண்டுள்ளது: /விஸ்வ>[எல்லை கண்டறியாத அளவுக்கு விரிந்து பரந்து கிடத்தல்] 'பிரபஞ்சம்'> ); குரு> 'ஆசிரியர்'/ என்று விளக்கமளிக்கிறது விக்கிப்பீடியா[https://en.wikipedia.org/wiki/Vishvaguru].
அதாவது, பிரபஞ்சத்திலுள்ள ஒட்டுமொத்த உயிர்களுக்கு, குறிப்பாக, ஆறறிவு மனிதர்களுக்குக் குருவாக இருப்பவர்தான் ‘விஸ்வகுரு’ ஆவார்.
அந்தவொரு குருதான் நம் மோடிஜி. சொல்பவர்[“மோடியே என் விஸ்வகுரு”* ஏ.சி.சண்முகம் என்னும் பிரபலக் கல்வி நிறுவன முதலாளி.
இவர் ஆகச் சிறந்த அறிவாளியும்கூட என்பதால். இவர் சொல்வதை முழுமையாக நம்புவதோடு, பிரபஞ்சக் குருவான நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுங்கள்[வாய்ப்பை நழுவவிடாதீர்].
தரிசிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை எனின், அவ்வப்போது மானசீகமாக அவரை வழிபட்டுப் பயனடையுங்கள்.
‘ஏ.சி.ச.’வுக்கு நம் நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


