செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஒரே நாடு! ஒரே ஜாதி!!

ப.ஜ.க.வின் இந்திய ஒருமைப்பாட்டுத் தத்துவம் பின்வருமாறு.....

ஒரே நாடு: இந்தியா                                                                             

ஒரே இனம்: ‘இந்தி’யர்


ஒரே மொழி: இந்தி


ஒரே மதம்: இந்து[த்துவா]


ஒரே கலாச்சாரம்: வடவர் நாகரிகம்

                                                      
ஒரே கட்சி ஆட்சி: ப.ஜ.க


ஒரே ரேசன் கார்டு: ப.ஜ.க. கட்டுப்பாட்டில்     

ஒரே தேர்வு: இந்தி அல்லது சமஸ்கிருதத்தில்

மேற்கண்ட ப.ஜ.க.வினரின் கனவு நனவாக்கப்படும்போது, கீழ்க்காணும் ‘ஒரே ஜாதி’ என்னும் எம் ஆசையும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

எங்கள் ஜாதிதான் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஜாதியாகும். இதை ‘ஒரே இந்தியாவின் ஒரே ஜாதி’யாக நடுவணரசு அங்கீகரிக்க வேண்டும். பிற ஜாதியார் அனைவரும் எங்கள் ஜாதியில் இணைதல் வேண்டும்(ஒன்றிய அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம்.

அங்கீகரிக்கப்படும்போது எங்கள் ஜாதி எது என்பதை நீங்கள் அறியலாம்

எச்சரிக்கை!.....மதங்கள் அழியாதவரை ஜாதிகளும் அழியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.   
=================================================================================          

திங்கள், 16 செப்டம்பர், 2019

நன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!!!

“இந்தி மட்டுமே இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்தும்” என்று அதிபுத்திசாலி அமைச்சர் அமித்ஷா சொல்லிவைக்க, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கர்னாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா போன்றோரும் கடும் கண்டணம் தெரிவித்துவரும் இன்றைய சூழலில்.....

தனக்கு அமைச்சர்[முன்னாள்] பதவி தந்ததை எண்ணி இன்றளவும் மோடிக்கு நன்றி பாராட்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், “தமிழ் மிகப் பழைமையான மொழி என்று தமிழைப் பாராட்டியவர் மோடி. தமிழின் மீது பற்றுக்கொண்ட ஒரே இந்தியப் பிரதமர். இதை நினைந்து பார்க்கத் தவறிவிட்டான் தமிழன். இவன் நன்றி கெட்டவன்” என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார்[இன்றைய{16.09.2019} ஊடகச் செய்தி].
பொன்னார் க்கான பட முடிவு
எந்தவொரு பிரச்சினை ஆனாலும் புரியாமல் பேசிச் சமாளிப்பதில் இவருக்கு இணையானவர் எவரும் இல்லை எனலாம்.

‘இந்தியே இந்தியாவை அடையாளப்படுத்தும்’ என்று சொன்னவர் அமித்ஷா. ஏராளமான கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பவரும் அவரே. தமிழின் மீது அவர் பற்றுக்கொண்டவர் என்பதற்கு ஆதாரம் இருப்பின் அதை வெளியிடுதல் வேண்டும். அதற்கு மாறாக, தமிழ் குறித்தான மோடியின் புகழுரைகளை மேற்கோள் காட்டி.....

“தமிழன் நன்றி இல்லாதவன்” என்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது?!

மோடி நம் மொழியைப் பாராட்டினார்[அமித்ஷாவின் பேச்சு குறித்து இவர் இன்னும் வாய்திறக்கவில்லை] என்பதற்காக, அமித்ஷா செய்த குற்றத்தை நாம் மறந்துவிட வேண்டும் என்கிறாரா பொன்னார்?

ஒரு மொழியை வெறுமனே பாராட்டுவது வேறு; அதன் தகுதியை மேம்படுத்துவது வேறு என்பதுகூடப் புரியாதவரா இந்த மேனாள் அமைச்சர்?!

“இந்தி இந்தியாவின் அடையாள மொழி என்றார் அமித்ஷா. அவர் சொன்னது தவறு. இந்தியாவை அடையாளப்படுத்துவது இந்தி அல்ல; பழம் பெருமை வாய்ந்த தமிழ்தான்” என்று மோட்டி அறிவித்திருந்தால்......

அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நாளெல்லாம், “மோடி வாழ்க! ... மோடி வாழ்கவே!!” என்று முழக்கமிட்டுக்கொண்டே இருக்கலாம்.

இனியேனும் கொஞ்சம்...கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்துப் பேசுவதற்குப் பயிற்சி மேற்கொள்ளுவாரா பொன், ராதாகிருஷ்ணன்?
=================================================================================