திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அமெரிக்கப் பெண்ணிடம் அடி உதை வாங்கிய தடிச்சாமியார்!!!

இவன் பேர் மணிகண்டன்; நாமக்கல்காரன்[பக்கத்தூர்]; சோம்பேறி.

உழைக்காம பிழைக்க என்னடா வழின்னு யோசிச்சான்; சாமியாராயிட்டான்.

உள்ளூரில் இந்த வேடம் எடுபடாதுன்னு, திருவண்ணாமலைக்குப் போய், இவன மாதிரி சாமியார்கள் இருக்கிற குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்தான்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பொண்ணு இதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாகத் தங்கியிருந்தது.

அந்தப் பொண்ணை நோட்டம் விட்ட இவன், எப்படியாவது பணிய வைச்சிக் காரியத்தை முடிச்சிட்டா, அந்தப் பொண்ணையே கல்யாணமும் பண்ணிட்டு அமெரிக்கா போயி சொகுசா வாழலாம்னு மனக்கோட்டை கட்டினான்.

அன்றைய தினத்தில், கையில் ஒரு அரிவாளையும் தங்கத் தாலியையும் எடுத்துட்டு, அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயி, அரிவாளைக் காட்டிப் பயமுறுத்திப் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணினான்.

அந்த அமெரிக்கப் பொண்ணு நம்ம பொண்ணுக மாதிரி பயந்தாங்கொள்ளி அல்ல. தைரியமா இந்தப் போலிச்சாமியாரை எதிர்த்துப் போராடிச்சி. அடி உதைன்னு இவனை நிலைகுலைய வெச்சதோட, இவன்கிட்ட இருந்த அரிவாளைப் பிடுங்கி வெட்டிச்சி. இவன் தலையில் காயம். அமெரிக்கப் பொண்ணுக்கும் காயம்.

இவங்க ரெண்டுபேரும் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து மக்கள் அங்கே திரண்டாங்க. சாமியார் தடியனுக்குத் தர்ம அடி குடுத்துக் கட்டிப் போட்டாங்க. காவல்துறைக்குத் தகவல் தர அவங்க இவனைக் கைது செய்துட்டாங்க.

அந்த அமெரிக்கப் பொண்ணுக்குத் தற்காப்புக் கலை தெரியும்னு காவல்துறைக்காரங்க சொல்லியிருக்காங்க[24.08.2020 தினத்தந்தி நாளிதழ்] https://www.dailythanthi.com/Districts/tiruvannamalai

எது எப்படியோ, எங்க ஊர் மானம் அந்தரத்தில் ஊர் உலகமெல்லாம் சுத்தி வருது!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

“அந்த முருகன் எங்கே போனான்?!”

‘தமிழர்களின் கடவுள் நீங்கள் நினைக்கிற மாதிரி இருந்ததில்லை. தமிழர்கள் இயற்கையைத்தான் கடவுள் என்றார்கள். இயற்கை என்றால் அழகு. அழகு என்றால் முருகு. முருகு ‘முருகன்’ ஆயிற்று என்றார் திரு.வி.கலியாண சுந்தர முதலியார்.

சரி, அந்த முருகன் எங்கே போய்விட்டான்? 

இப்போது இருக்கிற முருகன் அந்த முருகன் அல்ல. ஆரியப்புராணப்படி, சிவபெருமான் மகன் சுப்ரமணியன் என்று கற்பனை செய்யப்பட்டவன்.

இன்னொருவர், சிவன் தமிழர் கடவுள் என்கிறார். ‘அவன் அன்பின் உருவம்’ என்று விளக்கமும் தருகிறார்.

இன்றிருக்கும் சிவன் அன்பு சிவனா?

அன்பே உருவான சிவன் கையில் வேலாயுதம் சூலாயுதம் எல்லாம் ஏன்? 

இப்படிக் கேள்வி எல்லாம் கேட்டால், ஆரியரின் கைங்கரியம் என்கிறீர்கள். 

அப்புறம் ஏன் அவர்கள் கற்பித்த சாமிகளையெல்லாம் கும்பிடுகிறீர்கள் என்று கேட்டால் யாரும் கவலைப்படுவதில்லை.

சரித்திரச் சான்றுகளின்படிப் பார்த்தால், புத்தர்தான் அறிவைக்கொண்டு ஆராய்ந்து சொன்னவர். சுய அறிவுடன் சிந்தித்ததால்தான் அவர் பெரிய நாத்திகர் ஆனார்.

புத்தர் அறிவுவாதி; ஆராய்ச்சிவாதி. அதனால்தான் அவரின் கொள்கைகளை மக்கள் அறியவிடாமல் அழித்துவிட்டார்கள்; அவர் ஆற்றிய தொண்டுகளையெல்லாம் மூடி மறைத்துவிட்டார்கள்.’
                                            *                                *                            *
“அந்த முருகன் எங்கே போனான்?” என்று கேள்வி எழுப்பியதும், அதன் தொடர்ச்சியாகத் தமிழர்தம் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைச் சொன்னதும் நான்[‘பசி’பரமசிவம்] அல்ல. 

எல்லாம் பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் சொன்னவை.
=====================================================================
நன்றி: திருமழபாடி முனைவர் அ.ஆறுமுகம்[நூல்:‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’] அவர்களுக்கு.