வெள்ளி, 31 டிசம்பர், 2021

யாங்கோன்[Yangon] தேவதை!!!

யாங்கோன்[ரங்கூன்] மியான்மர்[பர்மா] நாட்டின் மிகப் பெரிய நகரம். அந்த நகரத்தில் உள்ள மிகப் பெரிய ஒரு காய்கறிகள்&பழங்கள்&சமைத்த உணவுகள் அங்காடியைப் பற்றித்தான் இப்போது தெரிந்துகொள்ள...

"யோவ், பர்மா அங்காடியைப் பத்தித் தெரிஞ்சிட்டு, விமானம் ஏறிப் போய்க் காய்கறியும் பழமும் மற்றதும் வாங்கிட்டு வரவா போறோம்? தேவதையைப் பத்திச் சொல்லய்யா" என்று இடைமறிக்கும் உங்களின் மனப் பதற்றத்தை உணர முடிகிறது. 

சொல்கிறேன்[அவசரப்பட்டு, 'காணொலி'க்குத் தாவிவிடாதீர்கள். தேவதையை ஒரு முறை பார்த்துவிட்டால் மீண்டுவந்து வாசிப்பைத் தொடர்வது இயலாமல் போகலாம்].

'அவள் சிக்கென்று இருந்தாள்' என்று நம் கதாசிரியர்கள் வர்ணிப்பது பலருக்கும் தெரியும். அது கதைகளில் மட்டுமல்ல, எதார்த்த வாழ்க்கையிலும் 100% 'சிக்' உடம்புக்காரியாக இந்தத் தேவதை வலம் வருவதை இந்தக் காணொலியில் காணலாம்.

இவள் பர்மா நாட்டுப் பைங்கிளி. பர்மிய மொழி உச்சரிப்பில் இவள் பேசுகிற ஆங்கிலம், ஆங்கிலேயனுக்கும் பர்மாக்காரனுக்கு புரியுமா தெரியவில்லை. நம்மவர்க்குப் புரிவது சந்தேகம்தான்.

அங்காடிப் பகுதிகளில் உலா வந்து மழலைக் குரலில் ஏதேதோ சொல்லி நம் செவிகளில் தேன் பாய்ச்சுகிறாள்.  

ஊன்றிக் கவனித்தால் புரியக்கூடும். கள்ளம் கபடமற்ற இவளின் முக அழகை ரசிப்பதில் முழு நேரமும் கழிவதால், பேச்சைக் கவனிப்பது சாத்தியப்படாது.

முகம் காட்டி நடக்கிறாள்; முதுகு காட்டியும் நடந்து செல்கிறாள். எதைக் காட்டியும் காண்போரைக் கவரும் எண்ணமெல்லாம் இவளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சூதுவாதற்ற ஒரு பதின்பருவக் குழந்தையாகத்தான் தெரிகிறாள்.

இவளுடையது அன்ன நடையல்ல; தரை பார்த்து நடக்கும் நம்ம ஊர்ப் பெண்ணின் நாண நடையுமல்ல; நிமிர்ந்த நடை.

இவளின் நடை தளர் நடையல்ல; தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் நளின நடை.

பேசும்போதெல்லாம் சிரிக்கிறாள்; பேசி முடித்த பிறகும் சிரிக்கிறாள். சிரித்து இன்புறுத்துவதற்கென்றே பிறந்தவளோ என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

"பிரம்மன், இந்தத் தேவதையைப் படைத்து, மேலுதட்டில் ஒரு திருஷ்டிப் பொட்டும் இட்டு, பூந்தேரில் ஏற்றிவந்து, பர்மாவின் 'யாங்கோன்' தெருவில் இறக்கி விட்டுவிட்டுப் போனானோ!" என்று வியந்து மகிழ்ந்தேன்.

நன்றியும் நவின்றேன்.

காணொலி:

புதன், 29 டிசம்பர், 2021

விரல்களை வீங்க வைத்த 'வயாகரா'!!![சிரிப்புக் கதை]

'ஜேம்ஸ்', சிகாகோ மருத்துவமனையில் டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தார்.

தனக்கான முறை வந்ததும் பார்த்தார்.

தேவையான பரிசோதனைகள் முடிந்ததும் "உங்க உடம்பில் பிரச்சினை ஏதுமில்லை. நீங்க போகலாம்" என்றார் மருத்துவர்.

ஜேம்ஸ் தயங்கியபடி நிற்க, மருத்துவர் மீண்டும், "நீங்க போகலாம்” என்று வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னார். 

ஜேம்ஸ் மருத்துவருக்கு மிக அருகில் சென்று, "எனக்கு வயாகரா வேண்டும்” என்றார். 

மருத்துவர் 1 வயாகரா 100mg எழுதினார். 

"இது போதாது டாக்டர்.” -ஜேம்ஸ்.

"ஒன்றுக்கு மேல் எழுத முடியாது." -டாக்டர்.

ஜேம்ஸ் விடுவதாக இல்லை. “மூன்று கேர்ள் ஃபிரண்ட்ஸைச் சந்திக்க போகிறேன். எனக்கு மூன்று மாத்திரைக்கு எழுதிக் கொடுங்கள்" என்றார்[ஒரு சந்தேகம்: மருத்துவர் சீட்டு எழுதித் தந்தால் மட்டும்தான் வயாகரா வாங்க முடியுமா? உலக நடப்பு என்னவோ?].

டாக்டர் மூன்று மாத்திரைகளை எழுதினார். 

சில நாட்கள் கழிந்தன.

முதல் ஆளாக மருத்துவமனை சென்று அதே மருத்துவரைப் பார்த்தார் ஜார்ஜ்.

"என்ன பிரச்சினை?" என்றார் மருத்துவர்.

"என்னோட மூனு கேர்ள் ஃபிரண்ட்ஸ் என்னைச் சந்திக்கிறதா இருந்த அந்த நாள் வந்தது. காலையில் ஒரு மாத்திரை போட்டுகிட்டு ஒருத்திக்குப் போன் பண்ணினேன். ஒரு மணி நேரத்துக்கு மேலா காத்திருந்தும் அவள் வரல. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இன்னொரு மாத்திரை விழுங்கிட்டு மற்றொருத்திக்குத் தகவல் சொன்னேன். அவளும் வரல. காத்திருந்து சலிச்சிப் போய், மூனாவதா ஒரு மாத்திரை எடுத்துட்டு இன்னொருத்தியிடமும், உடனே புறப்பட்டு வா"ன்னு சொன்னேன். அவள் "அடுத்த வாரம் வர்றேன்"னு சொல்லிப் போனை வைச்சுட்டா" என்று குரலில் சோகம் கொப்பளிக்கச் சொன்னான் ஜார்ஜ்.

அவனை உற்றுப் பார்த்த மருத்துவர், "அவங்க ஏமாத்தினதுக்கும் உன் கை விரல் வீக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார்.

சற்றே தயங்கிய ஜார்ஜ், "அது வந்து... வந்து... வந்து..." -சொல்ல நினைத்ததைச் சொல்ல இயலாமல் முகத்தில் அசடு வழிய நின்றுகொண்டிருந்தான்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவன் தயக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர், லேசான புன்னகையுடன், "கட்டிய பெண்டாட்டியை நம்பலாம். இனியும் கேர்ள் ஃபிரண்ட்ஸை நம்பி உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம்" என்று புத்திமதி சொன்னதோடு, விரல் வீக்கத்துக்கான மாத்திரையும் எழுதிக் கொடுத்தனுப்பினார்.

குறிப்பு: கதையின் முடிவு புரிந்ததா? புரியலேன்னா இழப்பு ஏதும் இல்லை. முக்கிய வேலை எதுவும் இருந்தா பாருங்க! ஹி... ஹி... ஹி!!!

==========================================================================ஆதாரம்: 

https://nakkheeran.in/360-news/life/20-years-viagra-gives-pleasure-and-gets-life-2