ஞாயிறு, 15 மே, 2022

'புடின்' ரத்தக் குளியலும் 'உக்ரைன்' போர் நிறுத்தமும்!!

விளாடிமிர் புடினுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிவரும் நிலையில், அது என்ன வகையான புற்றுநோய் என்பது குறித்தும் தெரியவந்துள்ளதாக https://news.lankasri.com தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது மாதத்தைத் தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலையில் கோளாறு இருப்பதை அவரின் சமீபத்திய வெளித் தோற்றங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

தகவலின்படி, புடின் வயிற்றுப் புற்றுநோய், 'நடுக்கவாத நோய்'[பார்கின்சன்] ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது[18 மாதங்களுக்கு முன்னரே அவருக்கு இந்த நோய்கள் தொற்றியிருக்கின்றன].

சமீபத்தில் மட்டும் 35 முறை புற்றுநோய் மருத்துவரிடம் சென்று அவர் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார். மான் கொம்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரத்தத்தில் புடின் குளிப்பதாகக் கூறப்படுகிறது.

இது ஒருவகையான சிகிச்சையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது போன்ற குளியல் இருதய அமைப்பை மேம்படுத்துவதாகவும் சருமத்தைப் புதுப்பிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

***இந்தக் கெட்ட செய்திக்கிடையே, ரஷ்ய நாட்டு வீரர்கள் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான [அமைதிப்] பணிகளைத் தொடங்கியிருப்பதாக, சற்று முன்னர்[காலை 6.35 மணி] 'பாலிமர்' தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது போர் நிறுத்தத்திற்கான முன்னோட்டமாக இருப்பின் பெரிதும் வரவேற்கத்தக்கது.

புடின் நல்லவரோ கெட்டவரோ, அரசியல் சூழல் அவரைப் போர் தொடங்கத் தூண்டியிருக்கலாம். உக்ரைன் தாக்குதலை நிறுத்துவதோடு, மன உறுதியுடன் போராடிப் புற்றுநோயிலிருந்து அவர் முற்றிலுமாய் விடுபடுதல் வேண்டும் என்பது நம் மனப்பூர்வமான விருப்பம்.

வாழ்க புடின்! வளர்க 'ரஷ்ய-உக்ரைன்' நட்பும் உலக அமைதியும்!!

https://news.lankasri.com/article/putin-bath-deer-antelers-blood-cancer-disease-1651547497

சனி, 14 மே, 2022

பெரியார், 100% அதே பெரியாராக மீண்டும் வருவார்!?

அண்டவெளியிலுள்ள[பூமி உட்பட] பொருள்களிலோ உயிர்களிலோ ஒன்றைப் போல் இன்னொன்று இருந்ததில்லை; இருந்துகொண்டிருக்கவுமில்லை' என்று விஞ்ஞானிகள் சொல்வதாக ஆய்வியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொருள்களும் உயிர்களும் உருவாவதற்கு மூலக்கூறாக விளங்குகிற கோடி கோடி கோடானுகோடியோ கோடி 'அணுத்திரள்'களிலும் ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை என்கிறார்கள்.

புதிது புதிதாக அணுக்களும் பொருள்களும் உயிர்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதாவது, பழையன கழிந்து புதியன புகுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

தோன்றிக்கொண்டிருக்கிற எந்த ஒன்றும், தோன்றி மறைந்த இன்னொன்றைப் போல இல்லை என்பது மிகப் பெரிய விந்தை.

இந்த விந்தை தன்னிச்சையாய் நிகழ்கிறதா அல்லது நிகழ்த்தப்படுகிறதா?

நிகழ்கிறது எனின் இது இயற்கை. நிகழ்த்தப்படுகிறது எனின் இது கடவுள்[கடவுள் தோன்றியது எப்படி? படைப்பாற்றல் அவருக்கு எப்படி வாய்த்தது என்பன போன்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை பகர்ந்தவர் எவருமிலர்] எனப்படுபவரின் சாகசமாக இருக்கக்கூடும்.

ஒன்றைப் போல இன்னொன்று உருவாதல் என்னும் நிகழ்வு, கடந்த காலங்களில் இல்லை[?]; நிகழ்காலத்திலும் இல்லை.

இந்நாள்வரை இல்லை என்றாலும், எதிர்காலத்திலேனும் ஒன்று போல்  இன்னொன்று [தன்னிச்சையாகத்] தோன்றுமா? அல்லது, கடவுள் எனப்படுபடுபவர் தோற்றுவிப்பாரா?

எடுத்துக்காட்டாக.....

ஒரு திருவள்ளுவரைப் போல் இன்னொரு திருவள்ளுவரும் பெரியாரைப் போல் இன்னொரு பெரியாரும் தோன்றுவார்களா, தோற்றுவிக்கப்படுவார்களா?

அறிஞர் 'பசி'பரமசிவம் போல்[ஹி...ஹி...ஹி!!!] அச்சு அசலாக இன்னொரு அறிஞர் இம்மண்ணில் பிறக்கும் அதிசயம் நிகழுமா?!

எப்போது?