செவ்வாய், 20 செப்டம்பர், 2022

"இனி, பாலுறவுப் பதிவுகள் எழுதுவதில்லை"... 'பசி'பரமசிவம் சபதம்!!!

Pennsylvaniaவில் வாழ்ந்த 38 வயதான டோனியா க்ரௌட்[Tonya Krout], 6 வயதுக் குழந்தையை மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அதிகபட்சமாக 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக, கிளிண்டன் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தப் பாலியல் கொடூரம் 2010-15 காலக்கட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது என்கிறார் இவளுக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல்  சாலிஸ்பரி[J. Michael Salisbury].https://www.abc27.com/pennsylvania/pennsylvania-woman-sentenced-for-repeatedly-raping-young-boy/


இப்படியொரு கெட்ட செய்தியைப் படித்தபோது, கீழ்க்காணும் வகையிலான பல சந்தேகங்கள் என்னுள் எழுந்தன.

6 வயதுக் குழந்தையின் ஆணுறுப்பு, பெண்களின் சுண்டுவிரல் தடிமன் இருக்கலாம். நீளம் 2 அங்குலம்[?] என்று கொள்ளலாம்.

இந்த வயதில் விந்து உற்பத்திக்கான வாய்ப்பும் இல்லை.

சிறுநீர்ப்பையில் நீர் நிறையும்போது விறைப்பு நிலையை அடைதல் சாத்தியம். மற்றபடி,

பெண்ணைப் பார்த்து உணர்ச்சி வசப்படுதலோ, அதன் காரணமாக உறுப்பு எழுச்சி பெறுதலோ இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம்.

ஆக, "ஆண் பிள்ளைகளைப் பொருத்தவரை உடலுறவுக்குச் சிறிதும் தகுதி பெறாத வயதுதானே இது? அப்புறம் எப்படி மேற்கண்ட 6 வயதுச் சிறுவனை 38 வயதுப் பெண்மணி பலாத்காரம் செய்திருக்க முடியும்?" -இது எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி.

ஆனால், இதனோடு தொடர்புடைய வேறொரு தகவலுக்காகத் தேடுபோறியில் தேடியபோது.....

#A four-and-a-half-year-old boy has been accused of sexually assaulting a classmate within the premises of a prominent private school in the national capital, Hindustan Times reported.

According to the report, the girl complained to her mother that the boy used his finger and a sharpened pencil to sexually assault her in the school’s washroom#https://www.thequint.com/news/india/4-year-old-booked-for-raping-classmate


என்னும் அதிர்ச்சிதரும் செய்தி என் அடிநெஞ்சைக் கலங்கடித்தது.

'அது' விசயத்தில் நான் ஒரு 'தற்குறி' என்பது சந்தேகமறப் புரிந்தது.

இனி, இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான பதிவுகளை எழுதுவதில்லை என்று என் தாயின் தலையில்[சுவரில் தொங்கும் நிழற்படம்] அடித்துச் சத்தியம் செய்தேன்! 

ஹி... ஹி... ஹி!!!

===========================================================================

https://www.msn.com/en-in/news/crime/woman-sentenced-to-maximum-of-60-years-for-raping-6-year-old-boy/ar-AA11YD9S?ocid=msedgdhp&pc=U531&cvid=999fadc076124bfe901c951bc409a585


திங்கள், 19 செப்டம்பர், 2022

அம்மணக் குண்டி மனிதருக்கு ஆடை கட்டிவிட்டவர் கடவுளா?!?!

மனிதர்கள் விலங்குகளாக இருந்தவரை நிர்வாணமாகத்தான் திரிந்தார்கள்.

ஆறாவது அறிவான சிந்திக்கும்  அறிவு வாய்த்த பின்னர்தான் இலைதழைகளைத் தைத்து உடுக்கும் பழக்கம் உருவானது.


அப்புறம், நார்களால் பின்னப்பட்ட ஆடைகளையும், பின்னர் நூலாடைகளையும் உடுத்தத் தொடங்கினார்கள்.


ஆடைத் தயாரிப்பு குறித்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே விதம் விதமான அழகழகான வண்ண வண்ண ஆடைகள் உருவாகக் காரணமாய் அமைந்தது.


பெண்களைப் பொருத்தவரை அழகுக்கு அழகு சேர்க்கவும் ஆடை பயன்பட்டது.


செல்வந்தர்கள் ஆடம்பரத்திற்காக அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்தினார்கள்.


துறவிகள் பிறரிடமிருந்து தம்மை வித்தியாசப்படுத்துவதற்காகக் காவி உடை தரித்தார்கள்.


மிகையான வெப்பத்தாலும் குளிராலும் உடம்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆடையை வடிவமைத்தார்கள்.


கோடைக் காலங்களில் ஆடையைக் குறைத்து உடுத்துவதையும், கடும் குளிர்காலங்களில் உடல் முழுவதையும் போர்த்துவதையும் வழக்கமாக்கினார்கள்.


ஆக,


மனிதர்களின் வாழும் சூழ்நிலை, பருவநிலை, மனநிலை ஆகியவற்றைப் பொருத்து ஆடை உடுத்துவதில் வேறுபாடுகள் உருவாயின என்பதே உண்மை.


மற்றபடி, ஆண் என்பவன் எப்படியும் ஆடை உடுத்துத் திரியலாம்[சில நாடுகளில் விதிவிலக்கான சிலர் இருக்கக்கூடும்] பெண் எனப்படுபவள் வீட்டை விட்டு வெளியே வந்தால் உடல் முழுக்கப் போர்த்துக்கொள்ளுதல் வேண்டும்[ஆபாசம் இல்லாமல் ஆடை உடுத்துவதை வலியுறுத்துவதில் தவறே இல்லை] என்று கடவுள் சொன்னதாகச் சில மதம் சார்ந்தவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.


ஆடை உடுத்துவதில் அதீதக் கட்டுப்பாடு விதித்துப் பெண்களை இழிவுபடுத்துவதில் முதல்நிலை பெற்ற நாடாக விளங்குவது ஆப்கானிஸ்தான். இதைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது ஈரான் நாடு. தொடர்புடைய செய்தி.....


#ஹிஜாப் சரியாக அணியாததால். தலை முடி வெளியே தெரிந்ததாகக் கூறி, போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்குச் சென்ற இளம்பெண் 'மாஷா அமினி' உயிரிழந்த

சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு

ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.


மாஷாவின்

சொந்த

ஊரான சஹிஸ்

நகரில் நேற்று

திரண்ட

நூற்றுக்கணக்கான

பெண்கள், தாங்கள்

அணிந்திருந்த

ஹிஜாப்பை

கழற்றி எறிந்தும்,

ஹிஜாப்களை 

எரித்தும், தலை

முடியை வெட்டியும் போராட்டத்தில்

ஈடுபட்டனர்.


மேலும், ஈரான் அதிபர்

இப்ராகிம் ரைசிக்கு

எதிராக ஆர்பாட்டத்தில்

ஈடுபட்ட பெண்கள்

'சர்வாதிகாரிக்கு

மரணம்' என்ற

முழக்கத்தையும்

எழுப்பினர்#

ஈரான் நாட்டுப் பெண்களின்

போராட்டம் வெற்றி பெறுதல்

வேண்டும் என்பது

நம் விருப்பம். ஏனைய நாட்டுப்

பெண்களும் இவர்களுக்கு

ஆதரவாகப்

போராட்டம் நடத்துவது

வரவேற்கத்தக்கது.

======================================================================


https://www.dailythanthi.com/

News/World/iran-protesting-women-

take-off-hijabs-

after-22-year-old-arrested-for-

dress-code-violation-dies-795238