திங்கள், 5 டிசம்பர், 2022

‘இது’ விசயத்தில் இஸ்லாமுக்கு இந்துமதம் தேவலாம்!!!

குஜராத் சட்டப்பேரவைக்கான 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்க உள்ள நிலையில்...

“தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு சீட் தரும் எந்தக் கட்சியும் இஸ்லாமிற்கு எதிரானது” என அகமதாபாத் ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் ஷபீர் அகமது சித்திக் கூறியுள்ளார். https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=819699

இவர் தொடர்ந்து வெளியிட்ட கருத்துகளும்[சிவப்பு வண்ணம்] அவற்றிற்கான நம் விமர்சனங்களும்[நீல வண்ணம்] கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இமாம்: இஸ்லாமில் பெண்களுக்கு என்று ஒரு ‘அந்தஸ்து’ உள்ளது.

நாம்: அந்தஸ்தா, அடிமைச் சாசனமா?

இமாம்: பெண்கள் பொதுமக்கள் மத்தியில் வருவதை இஸ்லாமில் நியாயப்படுத்தியிருந்தால், அவர்கள் மசூதிக்குள் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

நாம்: நியாயப்படுத்தியவர்கள் யார்? உங்களைப் போன்ற ஆண்கள். இதை எக்காலத்தும் நீங்கள் நம்புகிற கடவுளான அல்லா[ஹ்] அனுமதிக்கமாட்டார்.

இமாம்: தேர்தலில் பெண்களுக்கு சீட் தரும் எந்தக் கட்சியும் இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரானது.

நாம்: இஸ்லாம் சார்ந்த எந்தவொரு பெண்ணாவது இதைச் சொல்லியிருக்கிறாரா? இல்லை. காரணம், உங்களுடன் தொழுகையில் கலந்துகொள்ளவும், உங்ளைப்போலவே வெளியே{முழு உடம்பையும் மறைக்கும் ‘பர்தா’[புர்கா, Purdah]வுடன்தான்] நடமாடவும், பெண்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து கலந்துரையாடவும் அனுமதிக்கப்படாத அடிமைகள் அவர்கள். கருத்துச் சொல்ல ஏது உரிமை?}

இமாம்: ஏன் உங்களிடம் ஆண் வேட்பாளர்கள் இல்லையா? பெண்களுக்கு சீட் தருவது எங்கள் மதத்தை பலவீனப்படுத்தும்.

நாம்: உண்மைதான். சீட் கொடுத்தால் வீட்டைவிட்டு வெளியேறி, பதவிகள் பெற்று, உங்களுக்கு எதிராகவே கருத்துத் தெரிவிப்பார்கள். விளைவு.....

உங்களின் செயல்பாடுகளால் ‘அது’ பலவீனப்படுவதை எவராலும் தடுக்க இயலாது. நீங்கள் ‘எங்கள் மதம்’ என்று சொல்வது மதத்தின் பெயரால் நீங்கள் பெற்றுள்ள ஆதிக்கத்தை[அது]. மதத்துக்கும் உங்கள் பேச்சுக்கும் சம்பந்தமில்லை.

* * * * *

***‘இந்துமதம்’ என்பது ஏராள மூடநம்பிக்கைகளின் புகலிடம்தான்; பெண்களை இழிவுபடுத்திய மதம்தான். ஆனாலும், இஸ்லாம் அளவுக்குப் அவர்களை அது அடிமைப்படுத்தவில்லை என்பது எவரும் மறுக்க இயலாத உண்மை!

இந்தப் பதிவு, பெண்ணினம் போற்றப்படுதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டதே தவிர, இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் உள்நோக்கம் இதில் சிறிதுமில்லை என்பது அறியத்தக்கது.

================================================================

சனி, 3 டிசம்பர், 2022

கன்னியின் கழுத்தில் சுட்டு, வன்புணர்வு செய்து, கொன்று தின்ற காமக் கிறுக்கன்!!!

அவர் பெயர் ‘சாகாவா’; ஜப்பான்காரர்.

அவர் பாரிஸில் படித்துக்கொண்டிருந்தபோது, ’ரெனி ஹர்ட்வெல்ட்’ என்னும் பெயருடைய பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தார். என்ன காரணம் சொல்லி அழைத்துவந்தாரோ தெரியவில்லை.

தன் வீட்டிற்கு வந்த அந்தப் பெண்ணைக் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டார்; பாலியல் பலாதாரம் செய்தார்; கொலை செய்தார். 

அப்புறம் நடந்ததுதான் விவரிப்புக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சித் தகவல். அது…..

கொல்லப்பட்ட பெண்ணின் உடலுறுப்புகளில் சிலவற்றைத் தின்றாராம்[அழகான குமரிப் பெண்களின் மாமிசம் வெகு சுவையாக இருக்கும் என்று நினத்திருப்பாரோ?].

சடலத்தை ஒரு பூங்காப் பக்கம் அப்புறப்படுத்த முயன்றபோது, பாரீஸ் போலீசிடம் மாட்டிக்கொண்டார்; தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அடுத்து நிகழ்ந்தது மேற்கண்டதைவிடவும் அதிர்ச்சிதரும் நிகழ்ச்சி.

கொஞ்ச நாட்கள் மனநல மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குத் தகுதியற்றவர்[பைத்தியம்?] என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளிக்க, 1984இல் சொந்த நாடானா ஜப்பானுக்கு அனுப்பப் பட்டார்.

அங்கு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பிரெஞ்சு அதிகாரிகளிடமிருந்து போதிய ஆதாரக் கோப்புகளைப் பெற முடியாததால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

அவர் தன் 73ஆம் வயதில் நிமோனியாவால் இறந்தார்.

இதன் பிறகு நடந்தது மேலும் பல மடங்கு அதிர்ச்சி தரும் அதிசய நிகழ்வாகும்.

‘இவரின் வாழ்க்கை நிகழ்வை மையக் கருவாக வைத்து, ஜப்பானிய நாவலாசிரியர் ஜூரோ காரா’ என்பவர் எழுதிய  "லெட்டர் ஃப்ரம் சாகவா-குன்" என்னும் நூல் 1982இல் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க இலக்கியப் பரிசை வென்றது’ என்பதே அது!

* * * * *

மேற்கண்டது நேற்றைய ஊடக[zee news]ச் செய்தி.

மனித வாழ்க்கை பெரும் விபரீதங்கள் கொண்டதாக மாறிவருகிறது என்ப தற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

இந்தப் பொல்லாத உலகில் இதையும் மிஞ்சுகிற விபரிதங்கள் நிறையவே நடக்கக்கூடும். பாவம் வருங்காலச் சந்ததியர்!!!