ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

இந்தியா, ‘இந்து ராஷ்டிரா’ ஆகுமா?! எப்போது?

முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததற்காகப்[“From calling Hyderabad’s old city, which has a significant Muslim population, ‘mini Pakistan’, to saying Rohingya Muslims are terrorists and should be shot.....”]‘பாரதிய ஜனதா கட்சி’யிலிருந்து கடந்த ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங், தற்போது நாட்டை ‘அகண்ட இந்து ராஷ்டிரா’(பிரிக்கப்படாத[?]வாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்[ராம் நவமி ஷோபா யாத்திரையின்போது ஆற்றிய உரையில்] என்பது செய்தி.

‘இந்து ராஷ்டிரா’ அமைவது மிகவும் அவசியம் என்பதற்கான காரணங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.

[தெலுங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங்]

அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

*இந்தியாவில் 100 கோடி இந்துக்கள் உள்ளனர்[துல்லியமான கணக்கெடுப்பு அவசியம்].

*இன்று உலகில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் 150க்கும் மேல்.

*இந்தியாவிலிருந்து பிரிந்த ஒவ்வொரு பகுதியும் இஸ்லாம் நாடாக மாறியுள்ளது[பாகிஸ்தான், வங்காள தேசம்].

ராஜா சிங், இந்தியா ‘இந்து ராஷ்டிரா’வாகப் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்குத் தந்துள்ள மேற்கண்ட ஆதாரங்கள் வலுவானவையே[‘பிரிக்கப்படாத இந்து ராஷ்ட்ரா’ என்று குறிப்பிட்டிருப்பதைத் தவிர].

எனவே, இந்த நாட்டின் பெயரை ‘இந்து ராஷ்டிரா’ என்று மாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக இந்திய அரசு மேற்கொள்ளலாம்[விரும்பினால்].

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன.

எந்தெந்த மாநில மக்கள் தங்களை ‘இந்துக்கள்’ என்று அடையாளப்படுத்துவதோடு, அமையவிருக்கும் ‘இந்து ராஷ்ட்ரா’வில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை வாக்கெடுப்புகளின் மூலம் உறுதிப்படுத்துதல் வேண்டும்.

விரும்பாத மாநிலத்தவரை எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்று புறக்கணித்துவிட்டு, இந்துக்களுக்கானவை என்று அடையாளப்படுத்தப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து, ‘இந்து ராஷ்டிரா’ என்னும் பெயர் மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.

இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம், எதிர்கால ‘இந்து ராஷ்டிரா’[இந்தியா] ‘வளரும் நாடுகள்’ பட்டியலிலிருந்து விடுபட்டு, முன்னேறிய நாடுகளின் வரிசையில் இடம்பெறுவதோடு, வெகு விரைவில் அந்தப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றும் என்று நம்பலாம்.

வாழ்க இந்து ராஷ்டிரா! வாழ்க இந்துக்கள்!! இந்துக்கள் அல்லாத[‘இந்து ராஷ்ட்ரா’வில் இணையாத] மாநில மக்களும் வாழ்க!!!

                                               *   *   *   *   *

***ராஜா சிங்கை இந்திய அரசு கைது செய்துள்ளது என்பது செய்தி. அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுமா?[ஹி... ஹி... ஹி!!!]

அறிந்துகொள்ளக் கட்டுக்கடங்காத ஆவலுடன் காத்திருக்கிறோம்!

https://www.msn.com/en-in/news/other/telangana-mla-raja-singh-suspended-from-bjp-for-hate-speech-pitches-hindu-rashtra-at-ram-navami-rally/ar-AA19jnyn?ocid=msedgdhp&pc=U531&cvid=4231772ed64a4d87890965ed5488f0ad&ei=14

வெள்ளி, 31 மார்ச், 2023

காமம் வசீகரமானது! மிக வலிமையானது!!

வெகு சாமானியனான நான்  51 நூல்களை[அச்சு வடிவில் 5 + அமேசான் கிண்டிலில் 46]ப் படைத்துச் சாதனை[???] புரிந்தவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சாதனை நிகழ்த்தியது விற்பனையில் அல்ல என்பதை நீங்கள் அறிந்திட வாய்ப்பில்லை. ஹி...ஹி...ஹி!!![மாதந்தோறும் ஒரு சிறு தொகையை அமேசான் என் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது என்பது ஆறுதல் தரும் நிகழ்வு].

இதைக் குறிப்பிடுவதன் நோக்கம் ‘தற்புகழ்ச்சி’ அல்ல. வேறென்ன?

நான் எழுதியவற்றுள், காம உணர்வைக் கருப்பொருளாகக் கொண்ட நூல்களே[‘காமம் பொல்லாதது!!!’, ‘காமம் கற்பீர்’, ‘யோனிப் பொருத்தம்’, ‘உடலுறவில் உச்சம்...’, ‘சதையும் கதையும்.....’] அதிக அளவில் வாசிக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான்.

[வாசிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு எனக்கான பங்குத் தொகை வழங்கப்படுகிறது. விற்பனை மிகக் மிகக் குறைந்த அளவில்தான்].  

இதற்கு, இயற்கையிலேயே காமம் வசீகரமானது என்பது காரணமாக இருக்கலாம்.

பயனுள்ள வேறு பல கருப்பொருள்கள் குறித்து நான் எழுதிய நூல்கள் தரமானவை அல்ல என்பதும் காரணமாக இருக்கக்கூடும்.

இதை நான் எழுதுவது  எனக்கான இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்வது மட்டுமல்ல, காமம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் மிக ஆழமானது என்பதை, மறைந்த[30 ஆண்டுகளுக்கு முன்பு] ‘ஓஷோ’, தம்முடைய நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை அறிந்திடச் செய்வதுதான்.

//நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு, ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’. அதற்குப் பிறகு என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால், என்னை விமர்சிப்பவர்கள் மற்றவற்றைப் படித்தார்களா என்பது சந்தேகம்தான். 


குறிப்பாக, இந்தியாவில் எல்லாரும் படித்தது ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற புத்தகத்தைத்தான். அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள்; எதிர்த்தார்கள். இன்னும் அதைப் பற்றிக் கட்டுரைகளும், மறுப்பு நூல்களும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 


மகாத்மாக்கள் அதை மறுத்துக்கொண்டே வருகிறார்கள். மற்றப் புத்தகங்களைப் பார்க்கவும் இல்லை; குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைத்தான் எழுதியது போல.


காமத்திலிருந்து அதி பிரக்ஞைக்குச் செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்; கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. 


என் புத்தகம், முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லாச் சன்னியாசிகளும் அதைப் படித்துவிட்டார்கள்//.



====================================================================================