சனி, 17 பிப்ரவரி, 2024

கூடுதல் கல்வியறிவு மூடநம்பிக்கைகளைக் குறைக்குமா?

உலகில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. அதன்படி கனடாவில் 59.96% படித்தவர்கள். 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

லக்சம்பர்க் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அமெரிக்க, பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் 6 & 8ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.

இந்தப் பந்தயத்தில் தென் கொரியாகூட அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, கல்வித் தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

இஸ்ரேல் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அயர்லாந்தை முந்திக்கொண்டு பிரிட்டன் 8ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா?

உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பெறவில்லை.

அதாவது, இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசியப் புள்ளியல் கழகம் கல்வி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களின் கல்வித் தகுதி மிகவும் பின்தங்கி இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.இந்தியாவில் உள்ள 7

இவை ஒருபுறம் இருக்க, அதிகக் கல்வி அறிவு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மட்டுமன்றி உலக அளவிலும் கேரளா முன்னிலை வகிப்பது[தமிழ்நாடு 2ஆவது இடம்?] குறிப்பிடத்தக்கது. அதன்படி, அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 39% பேர் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது அறியத்தக்கது.


* * * * *

***அதிகம் படித்தவர்கள் இடம்பெற்றுள்ள நாடுகளான கனடா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகள் முன்னேறிய நாடுகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், ஒரு நாடு அறிவியலிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்று விளங்குவதற்கு, உயர் கல்வியறிவு தேவை என்பது தெரிகிறது.

கவனியுங்கள்.....

வளரும் நாடாக உள்ள இந்தியா கல்வியறிவு மிக்க நாடுகள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

போதுமான உயர் கல்வியறிவு இல்லாத காரணத்தால் இங்கு மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழ்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

இவர்களால், நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என்பது என் எண்ணம்.

இவ்வெண்ணம் சரியானதா, தவறானதா?

சிந்திக்கலாமே!

* * * * *

https://tamil.news18.com/photogallery/international/do-you-know-which-country-took-first-place-in-educated-country-list-1341312-page-6.html

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பொல்லாத மனிதர்களிடம் அல்லாடும் இல்லாத சாமிகள்!!!

சேலம் மாவட்டத்தில் மனிதர்கள் வாழும் ஊர் ‘மணியனூர்’.

அவர்களில் ஒரு சாரார் பொது இடத்தில் குப்பை கொட்டினார்கள். இன்னொரு சாரார், பிள்ளையார் படத்துடன் குப்பை மேட்டருகே பேனர் வைத்தார்கள்[குப்பை கொட்டுவதைத் தடுக்கப் பல உத்திகளையும் தந்திரங்களையும் கையாண்டு தோற்றிருக்கக்கூடும்].

பெரும்பான்மைப் பக்தர்களால் தொழப்படும் நம்பர் 1 சாமியான பிள்ளையாரைக் ‘குப்பை’ மனிதர்கள் மதிக்கவில்லை. அம்மை[பார்வதி] குளிக்கும்போது தேய்த்தெடுத்து உருவாக்கிய அழுக்குச் சாமி அது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்]; தொடர்ந்து குப்பை கொட்டினார்கள்.

ஒத்தைச் சாமிக்குப்  பயப்படாத அவர்கள், அவரின் அப்பன், அம்மை, மாமன்[விஷ்ணு பகவான்], மனைவிகள்[பிள்ளையார் இரண்டு பெண்டாட்டிக்காரர்] தம்பி[முருகன்] என்று பத்துச் சக்தியுள்ள சாமிகளின் படங்களைக் குப்பை மேட்டருகே அணிவகுக்கச் செய்தார்கள்.

ஒத்தைச் சாமிக்குப் பயப்படாதவர்கள் பத்துச் சாமிகளைக் கண்டதும் அஞ்சி நடுங்கினார்கள். 

காவல்துறைக்குத் தகவல் போனது.

சாமி படங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள் காவல்துறையினர்.

படம் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்களாம்.

தீர விசாரித்து.....

படம் வைத்தவர்களைக் கைது செய்து நீதிபதி முன்னால் நிறுத்தினால், பத்துச் சாமி[யார்]களும் நீதிமன்றத்தில் ஆஜராகிச் சாட்சி சொல்லுவார்களா?!

எது எப்படியோ, குப்பை கொட்டுவதைத் தடுக்கச் சாமிகளின் படங்களை வைத்த மணியனூர் வாசிகளை அதி புத்திசாலிகள் என்று பாராட்டுவதா, அல்லது,  அடி.....?

வேண்டாம். ஏடாகூடமாக எதையும் சொல்லிவைத்தால், அண்டை மவட்டத்துக்காரர்களான அவர்கள் அணி திரண்டு வந்து தாக்கினால், அடியேனின் 60 வயதைக் கடந்த உடம்பு[உண்மை வயது?... ஊஹூம்!] தாங்காது! ஹி... ஹி... ஹி!!!