செவ்வாய், 4 ஜூன், 2024

தேவை... கடவுள் மோடிக்கு நாடெங்கும் கோயில்கள்!!!

கடவுள்தான் தன்னை இந்தப் பூமிக்கு அனுப்பியதாகத் தேர்தல் பரப்புரையில் பேசினார் நம் பிரதமர் மோடி.

அவரின் வேட்பாளர்கள்[பாஜக] பெரும்பாலோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை[பகல் 11.55] வகிப்பதால்,  மோடி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்றுப் பிரதமராக நீடிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.

அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை நம் மக்களில் பெரும்பான்மையோர் நம்புகிறார்கள் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதால், ஏற்கனவே அவர் கடவுளுடன் வாசம் செய்தவர் என்பதும், கடவுள் தன்மை வாய்ந்தவர் என்பதும் உறுதியாகிறது.

கடவுள் தன்மை வாய்க்கப்பெற்றவரையும் கடவுள் என்றே சொல்லலாம்.

அதாவது, கடவுளால் இங்கு அனுப்பப்பட்ட கடவுளாவார் மோடி.

இனியும் அவர் நம்முடன் இருந்து நம்மைப் பாதுகாப்பார் என்பதால், வேறு கடவுளையோ, கடவுளர்களையோ நாம் தொழ வேண்டிய அவசியம் இல்லை.

ஆதலினால்…..

ஊரூருக்கு கடவுள் மோடிக்குக் கோயில் எழுப்பவது நம் கடமை. 

ஏற்கனவே இங்குள்ள அனைத்துக் கோயில்களிலும்[பிற கடவுள்களுக்கானவை] மோடிக் கடவுளைக் குடியேற்றி வழிபடலாம்.

போற்றி போற்றி... மோடி பகவான் போற்றி!!!

திங்கள், 3 ஜூன், 2024

குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத கூமுட்டையா ஓ.பன்னீர்செல்வம்?!

“எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது!”

முன்னாள் அமைச்சர்[அதிமுகவினரின் முன்னாள் தெய்வத்தின் தெய்வம் செல்வி செயலலிதா போட்ட பிச்சை]ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்[தினகரன்,June 3, 2024, 5:19 p] மூலம் தான் ஒரு பக்திமான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பன்னீரிடம் நாம் பணிவுடன் முன்வைக்கும் கோரிக்கை:

ஐயா, பன்னீர் செல்வனாரே, நீவிர் அறிவுள்ள சராசரி மனிதனாகவோ  படு முட்டாளாகவோ இருப்பது உமக்குள்ள உரிமை.

நீரோ, உம்மை முட்டாள் என்று பிறர் நினைக்கும் வகையில், “நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது” என்று உளறியிருக்கிறீர்.

“வெற்றி பெறுவேன்” என்று சொன்னபோது தன்னம்பிக்கையாளராக இருந்த நீர், ஒரு மூடநம்பிக்கையாளராக மாறி, “ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில்”[‘ஒன்றிய அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்று சொல்லியிருக்கலாம்] என்று சொன்னது எப்படி?

இப்படிச் சொல்லிச் சொல்லி இப்போதைய உம்முடைய தலைவர் மோடியைப் போலவே, ஓர் உன்னதமான பக்திமானாகக்  காட்டிக்கொள்வது உம்மை ஓர் உத்தம அரசியல்வாதியாக மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவா?

தொட்டதற்கெல்லாம் கடவுளைத் துணைக்கு அழைக்காமல் உங்களால் பேசவோ செயல்படவோ இயலாதா?

இயலாது என்றால்.....

அரசியலிலிருந்து விலகுங்கள். 

உங்களைப் போன்றவர்கள் விலகினால், மக்கள் இடையூறு ஏதும் இல்லாமல் சுயமாகச் சிந்திப்பார்கள்; நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

*   *   *   *   *

 https://www.dinakaran.com/chance_success_union_minister_madurai_o-panneerselvam/null