திங்கள், 28 அக்டோபர், 2024

பெரியாரை இழிவுபடுத்தும் 'த.வெ.க.' விஜய்[நடிகர்]க்குக் கடும் கண்டனம்!!!

ஒரு கட்சித் தலைவனுக்கான முதல் தகுதி, அவனுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் தொண்டனின் நலம் காப்பதுதான். கட்சியை வளர்ப்பது, மக்கள் பணியாற்றுவதெல்லாம் அப்புறம்.

ஒரு நடிகனாக இருந்து, அல்லது இருந்துகொண்டு புதியதொரு கட்சியைத் தொடங்கியிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கண்ட தகுதியைக் கிஞ்சித்தும் பெற்றிராதவர்.

ஏற்கனவே இவருடைய ரசிகர்களாக இருந்து இப்போது தொண்டர்களாகவும் ஆன 3 பேர், இவர் நடத்திய கட்சித் தொடக்க விழா மாநாட்டிற்கு வந்தபோது உயிரிழந்திருக்கிறார்கள்[இருவர் வாகன விபத்தில். ஒருவர் மாரடைப்பால். விரிவான செய்தி கீழே].

காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சோக நிகழ்வு பற்றி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் விஜய்க்குத் தெரியாதா?

இது தொடர்பாக இறந்த ஒருவரின் உறவினர் பேசியதாவது: “சின்னப் பிள்ளையாக இருந்ததில் இருந்து இவர்[கலைக்கோவன், இறந்தவர்களில் ஒருவர்] விஜய் ரசிகராகவே இருந்தார். விஜய்க்காக எவ்வளவோ செலவும் செய்துள்ளார். விஜய்யும் அரசியலுக்கும் வந்துவிட்டார். மாநாட்டுக்குச் செல்லும்போது விபத்து நிகழ்ந்துவிட்டது. மாநாட்டுத் திடலிலேயே விஜய் இரங்கல் தெரிவித்திருக்கலாம்.

தலைமைக் கழகத்தில் இருந்து ஒரு போன், ஒரு மெசேஜ் என எதுவும் வரவில்லை. இவ்வளவு நாள் அவர் உழைத்ததற்கு என்ன பலன் இருக்கிறது, சொல்லுங்கள்.....” https://www.puthiyathalaimurai.com/tamilnadu/anand-tributes-to-tvk-executives-who-died-in-the-accident

விழாவின் தொடக்க நாளிலேயே மாநாட்டைச் சிறப்பிக்க வந்த தொண்டர்களின் உயிரிழப்பு பற்றி அறிவித்து இரங்கல் தெரிவித்தால், அது அபசகுனமாக அமையும் என்று நம்பும்[ஊடகச் செய்தி] நடிகன் விஜய், பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

* * * * *

***த.வெ.க மாநாட்டில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் வாகனங்கள் மூலம் வருகை புரிந்தனர். அதில் மாநாட்டிற்காகத் திருச்சியில் இருந்து வந்த கார் ஒன்று, சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 3 பேர் காயம் அடைந்தனர்.

இதே போல் சென்னை கீழ்பாக்கத்திலிருந்து சென்ற சார்லஸ் என்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

https://www.puthiyathalaimurai.com/tamilnadu/3-people-lost-their-life-while-coming-to-participate-in-vijay-s-tvk-conference

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

இந்து முட்டாள்களை மிஞ்சிய ‘இண்டர்நேஷனல்’ முட்டாள்கள்[கிறிஸ்தவர்கள்]!!!

கீழேயுள்ள காணொலியில்,  அடையாளப்படுத்தவே இயலாத திட்டுத் திட்டான திடப்பொருளாக ஒழுங்கற்ற வடிவில்[சிறு சிறு குழிகளுக்கிடையே விரல்கள் மட்டுமே ஓரளவு சரியான வடிவில் உள்ளன] ஏதோ ஒன்று தென்படுகிறது. அது ஏசுவின் காலடி[நமக்குத் தேவையற்ற மற்ற விவரங்களைக் காணொலியில் காணலாம்] என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்[காணொலி உரை].

ஒரு நூறு தடவை[ஹி... ஹி... ஹி!!!] அந்த ‘அதை’ உற்று உற்றுப் பார்த்து ஆராய்ந்ததில்.....

இறைத் தூதர் ஏசுநாதர் இங்கிருந்து மேலெழும்பி விண்ணகம் நோக்கிச் சென்றபோது பதிவான அவரின் ஒரு பாதம் இது என்றால், அவர் மேலெழும்புவதற்கு முன்னால் தரையில் ஊன்றிய இன்னொரு பாதச் சுவடு பதிவாகாதது ஏன் என்று கேட்கத் தோன்றியது.

இன்னொரு[இடது] பாதச்சுவடு ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் காணொலியில் சொல்லப்படுகிறது.

நம் சந்தேகங்கள்:

வலது பாதச் சுவட்டை ஏன் விட்டுச்சென்றார்கள்?

ஏசுப் பெருமானின் பாதச்சுவடு மிகப் பல ஆண்டுகளாக அழியாதிருப்பது எப்படி? கல்லில் பதிவாகியுள்ளது என்றால் அது எப்படிச் சாத்தியம்?  அவர் நடந்துவந்தபோது அடுத்தடுத்துப் பதிவான சுவடுகள் அருகில் பதிவாகாதது ஏன்?

மனிதர்கள் மட்டுமல்லாமல், கழுகு, குரங்கு, பாம்பு, யானை, பூனை என்று எதையெதையோ கடவுளாக்கி வழிபடும் இந்துக்கள்தான் உலகின் ஈடு இணையற்ற முட்டாள்கள் என்று நாம் நம்பியிருந்த நிலையில்.....

கொஞ்சமும் புரிந்துகொள்ளவே இயலாத ஒழுங்கற்ற திடவடிவிலான ஏதோ ஒன்றைக் கடவுளின்[வணங்கப்படும் ஏசு] பாதச்சுவடு என்று வியந்து போற்றி வழிபடும் கிறிஸ்தவர்கள்[ஒரு சாரார்?] அந்த நம்பிக்கை 100% தவறானது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

கர்த்தர் இவர்களைத் திருத்தியருள்வாராக! 



***காணொலிக்கான குறிப்பிடத்தக்க சில கருத்துரைகள்[‘யூடியூப்’இல்]:


1
இந்தியாவில் ராமர் கோவிலில் பாபர் மசூதி மாதிரி அங்கேயுமா? என்னா ஜென்மங்கள்!
5
அல் அக்சா மசூதியில் இயேசுவின் திருவுருவச் சிலை நிறுவ வேண்டும். மீண்டும் ஒரு சிலுவைப் போர் நடத்த வேண்டும்
1
தம்பி, தகவல் பிழை. கி பி 20 ஆண்டு இஸ்லாம் இல்லையே. தகவலைச் சரியான முறையில் பதிவிடுங்கள்.
என்னடா புதுப் புதுக் கதையெல்லாம் சொல்லப்படுது.
எந்தக் கடவுளை மனிதர்கள் உருவாக்கினாலும் பல லட்சம் வருடங்களாக அனைவராலும் வணங்கப்பட்ட ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் சிவன் ஒருவனே.
5
அப்புறம் ஏன் பொய் சொல்லுகிறீர்கள்? முழுமையாகப் பைபிலை படித்துவிட்டுப் பேசவும். ஏசு மரிக்கவும் இல்லை...