வெள்ளி, 15 நவம்பர், 2024

கிறித்தவர்களின் விசித்திர மூடநம்பிக்கைகள்!!![இரவல் சரக்கு]

 Quora.com 'கேள்வி-பதில்’இல் இடம்பெற்றது.

வேதாகமத்தில் இல்லை. கிறிஸ்தவர்களிடம் உண்டு.

எனக்குத் தெரிந்தவற்றில் சில:

  1. அவர்களின் மனதிலிருக்கும் கேள்விக்கான தேவனின் பதிலைப் பெற, வேதாகமத்தை எதேச்சையாகப் புரட்டி, ஒரு வசனத்தைப் படித்து, அதை தேவன் கதைப்பதாக[தேவனின் பதிலாக] எடுத்துக்கொள்வது.
  2. வெள்ளை நிற ஆடை அணிவதால் பரிசுத்தவான்கள் ஆவதாக எண்ணுவது.
  3. சத்தமாக வேண்டிக்கொண்டால் தேவன் கேட்பார் என நம்புவது.
  4. அதிக வசனங்களால், விதவிதமான வசனங்களால் வேண்டிக்கொண்டால் அவர் கேட்பார் என எண்ணுவது.
  5. ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய், இறுவட்டு(CD), எருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்ட மண், ஜோர்தான் நதியின் நீர், இன்னும் இவை போன்றவற்றைப் புனிதமாகக் கருதுவது.
  6. எருசலேமுக்குப் புனிதப் பயணம் போவது.
  7. சிலுவைகளை வீட்டிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வாகனங்களிலோ பாதுகாப்புக் கருதி வைத்திருப்பது.
  8. சிலுவை பென்டன் போட்ட மாலை அணிவது.
  9. வேதாகமத்தைத் தொட்டு வணங்குவது.
  10. நன்றி, பலி என்னும் பெயரில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது.
  11. சாத்தானைக் கட்டி(binding) ஜெபிப்பது.

  12. தாங்கள் விரும்பும் ஒரு விடயம் ஏற்கெனவே நடந்துவிட்டதாக நினைத்து தேவனிடத்தில் நன்றி சொல்வதால் அது அவ்வாறே உண்மையில் நடக்கும் என நம்புவது.
  13. வேதாகமத்தில் இல்லாத புதிய விடயங்களைத் தேவன் தங்களுக்கு அறியப்படுத்தியதாகக் கூறுபவர்களை நம்புவது.
  14. சிறுவர்கள், குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குவது.
  15. இயேசுவை ஏற்றுக் கொண்டால் போதும், பாவங்களைவிட்டு மனந்திரும்ப வேண்டியதில்லை[?] என நம்புவது.
  16. விசுவாசிகளுக்குப் பூமியில் சாகாவரம் உண்டு என நம்புவது.
  17. அதிகமாகக் காணிக்கை கொடுத்தால் அதிகப் பலன் கிடைக்கும் என நம்புவது.
  18. சாதி வித்தியாசம் பார்ப்பது.
***நன்றி கஜனன் செல்வராஜ்.
       

வியாழன், 14 நவம்பர், 2024

ஆண்டாண்டுக் காலமாய் அடிமுட்டாள்கள் செய்யும் சாமி பூஜை!!!

துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காகவும், கோரிக்கைகள் நிறைவேறுவதற்காகவும் நம்மில் பலரும்[கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்] சாமி கும்பிடுகிறார்கள்.

வீட்டிலிருந்தே மனத்தளவில் தத்தமக்கான சாமிகளை வழிபடுவதே போதுமானது. பொழுது போகாவிட்டால் கோயிலுக்குச் சென்று, அலங்கரிங்கப்பட்ட சாமி சிலைகளைக் கண் குளிரக் கண்டு கைகூப்பி வணங்கிவிட்டு வரலாம்[கோயில் & சாமி சிலைகள் பராமரிப்புக்குத் தேவையான ஆட்கள் இருந்தாலே போதும்; அர்ச்சகர்கள் எனப்படும் பூஜாரிகள் தேவையில்லை].

சாமிக்கு விருப்பமானதென்று[சாப்பிடுவதில்லை; உணவிலுள்ள சத்தினை உறிஞ்சுவதும் இல்லை]தேங்காய், பழம், பொங்கல், வடை, சுண்டல் என்று சுவையான பண்டங்கள் வைத்து, மணியடித்துத் தீபாராதனை காட்டிச் செய்யும் பூஜை தேவையற்றது; பயனற்றது.

பூஜை செய்வது வழிபடும் சாமிக்கு மரியாதை செலுத்தவும், சாமிகளுக்கு உள்ள சக்தியுடன் பக்தர்களின் மனம், புத்தி, புலன்கள், ஆன்மா முதலானவற்றை இணைக்கவும், அதிகாலையில் உறங்கிக்கொண்டிருக்கும்[துயில்] அதுகளை எழுப்பவதற்கும் என்று காரணங்களை அடுக்குகிறது ‘கிரியசூத்திரம்’ என்னும் நூல்[2600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாம்!!!].

மேற்கண்ட காரணங்கள் முற்றிலும் பகுத்தறிவுக்கு முரணானவை.

சக்தி வடிவமானதும் விருப்பு வெறுப்பு அற்றதுமான சாமிக்கு அற்ப மனிதர்கள் பூஜை செய்து மரியாதை செலுத்துவது தேவையற்றது. “மரியாதை எனக்குத் தேவை. நாள் தவறாமல் பூஜாரிகளை வைத்து இதைச் செய்யுங்கள்” என்று சாமி[ஆயிரக்கணக்கான சாமிகளில் ஏதோ ஒன்றோ பலவோ] என்று கட்டளை பிறப்பித்ததா?

எப்போது? எப்படி? எவரிடம்?

மனம் முதலானவற்றை இணைக்கிறதாம் பூஜை. அதென்ன இணைப்பு? இணைப்பில் சாமியின் பங்கு என்ன? பயன் என்ன? சாமியுடன் இறண்டறக் கலந்து கால வரையறையின்றி என்றென்றும் பேரானந்தத்தில் மூழ்கிக் கிடப்பதா? அது சாத்தியமே இல்லை.

ஒரு நாளில் ஆறு முறை பூஜை செய்வதும்[ஆறு காலப் பூஜை > தில்லைத் தீட்சிதன்களை நினைவுகூர்க] வழக்கத்தில் உள்ளது. அதிகாலையில் செய்யும் பூஜை சாமிகளை எழுப்புவதற்காகவாம். எழுப்பாவிட்டால் யுகம் யுகமாகக் குறட்டைவிட்டுத்[ஹி... ஹி... ஹி!!!] தூங்கிகொண்டே இருக்குமா?

சாமி[கள்] உறங்குவது[இதற்கு நம்ப இயலாத விளக்கங்கள் தருவாருண்டு] உண்டு என்று சொல்லி அதை எழுப்பப் பூஜை செய்பவர்களுக்கு ஒரு ‘மில்லி மீட்டர்’ அளவிலான மூளைகூட இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

ஆக.....

வேறு வேலையே இல்லாத வெட்டி மனிதர்களின் கண்டுபிடிப்புத்தான் இந்த ஆறுகாலப் பூஜை, அர்த்த ராத்திரிப் பூஜை, அதிகாலைப் பூஜை எல்லாம்!

***‘பதினாறு வகையான பூஜை செய்வது எப்படி?’ https://www.maalaimalar.com/devotional/worship/2018/10/28104611/1209965/16-type-on-puja.vpf