திங்கள், 10 மார்ச், 2025

உலக மகா மூடன் ‘பாஜக’காரனின் ரூ99 லட்சம் பரிசு அறிவிப்பு!!!

திருப்பூர்: 'பிரதமர் மோடி அரசின் மும்மொழிக் கல்விக் கொள்கையில் ஹிந்தித் திணிப்பைக் கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்று, பா.ஜ., சார்பில், திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன[https://www.dinamalar.com/

மொழியை, அல்லது மொழிகளைக் கற்பது என்பது அறிவை வளர்ப்பதற்கும் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும்தான். எனவே, ஒரே ஒரு மொழியைப் படிப்பதோ, இரண்டோ மூன்றோ அதற்கும் மேலேயோ மொழிகளைப் படிப்பதோ அவரவர் தேவையைப் பொருத்தது.

’பாஜக’ அரசு மூன்று மொழிகள் படி என்று கட்டாயப்படுத்துவதே மொழித் திணிப்புத்தான்.

திணிக்கப்படும் மொழிகளில் இந்தியும் ஒன்று.

மும்மொழிச் சட்டம் அமலாக்கப்பட்டதும், இந்தி படித்தால் இன்னின்ன சலுகைகள் கிடைக்கும் என்று ஆசை காட்டி அனைவரையும் படிக்கத் தூண்டுவது ஒன்றிய ‘இந்தி’ய அரசின் உள்நோக்கம்[ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகம், காப்பீட்டு நிறுவனம், ரயில் நிலையம் போன்றவற்றில் இந்தி முழுமையாகத் திணிக்கப்பட்டுவிட்டது. இந்த அவல நிலையை மாற்றவே மிக மிக மிகப் பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ளது].

இதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூடத் தமிழர்களுக்கு இல்லை என்று நினைத்து 99 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த திருப்பூர் ‘பாஜக’காரனைப் போன்ற முட்டாள் உலகெங்கும் தேடினாலும் கிடைக்கமாட்டான்!

பரிசு அறிவித்த மூடனுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

உன்னுடைய இந்தப் பரிசுத் திட்டம் பற்றிய அறிவிப்பை உன் கட்சியின்[பாஜக] மேலிடத்துக்கு நீ தெரியப்படுத்தினால், இங்குள்ள பாஜக அடிமைகளின் தலைவனாக உன்னை நியமிப்பார்கள்[ஆட்டுக்காரனுக்குப் பதிலாக].

செய்வாயா?!


* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-rs-99-lakh-if-hindi -imposition-is-proven-bjp-announcement--/3873631

ஞாயிறு, 9 மார்ச், 2025

‘எயிட்ஸ்’[AIDS]... தொற்றலும் தொற்றாமையும் அறிகுறிகளும்[நினைவூட்டல் பதிவு]!

உலகளவில், 2023இன் இறுதியில் எச்.ஐ.வி.'யால் பாதிக்கப்பட்டவர்கள் 39.9 மில்லியன்36.1–44.6 மில்லியன்] ஆவர். தொற்றுநோயாளரின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

பரவுதல்:

ஹெச்.ஐ.வி தொற்றியுள்ள நபர்களின் ரத்தம், விந்து, பெண் குறித் திரவம், தாய்ப் பால் போன்ற உடலிலுள்ள நீர்மங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும், மருந்துகளைச் செலுத்துவதற்கு அல்லது பச்சை குத்துவதற்கு ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் பரவுகிறது.

ஆரம்பத்தில் அறிகுறிகள் லேசானதாக இருப்பதால், எச்.ஐ.வி உள்ளவர்கள் தங்களுக்கு அது இருப்பது தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

கீழ்க்காணும் காரணங்களால் பரவுவது இல்லை.

  • ஒரே காற்றை சுவாசித்தல்,

  • கட்டியணைத்தல், முத்தமிடுதல், கைகுலுக்குதல்,

  • நீர்நிலைகளில் ஒன்றாகக் குளித்தல்,

  • பிறர் கையாண்ட ஜிம் உடற்பயிற்சி கருவிகள், கழிவறை இருக்கை போன்றவற்றைப் பயன்படுத்தல்.

  • மற்றவர்கள் தொட்ட கதவின் குமிழ், கைப்பிடி முதலானவற்றைத் தொடுதல்.

  • சிறுநீர், மலம், எச்சில், இருமல், தும்மல், வாந்தி, வியர்வை(ரத்தம் இல்லாதவரை) போன்றவை; குடிக்கும் கோப்பைகள் அல்லது சாப்பிடும் பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.


  • நோயின் அறிகுறிகள்:
  • காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, விழுங்குவதில் சிரமம், தொண்டைப் புண், தடிப்புகள், வீங்கிய நிணநீர் கணுக்கள்.


* * * * *