செவ்வாய், 8 ஏப்ரல், 2025

ஆட்டு மூளையன் அண்ணாமலைக்கு.....

 ‘மாநில முதல்வர்’ என்பவர் அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவர் மக்களின் பிரதிநிதி.

முதலமைச்சரைப் போலவே பிரதம அமைச்சரும் மக்களின் பிரதிநிதிதான்[தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை மாறுபடலாம்].

அந்தப் பிரதிநிதி[பிரதமர்]க்கு இந்தப் பிரதிநிதி[முதலமைச்சர்] அடிமையல்ல.

அவரை இவர் எதிர்கொண்டு வரவேற்பதோ, அவருக்கான நிகழ்வில் கலந்துகொள்வதோ[இருவருக்குமான புரிதலைப் பொருத்தது],  இவரின் விருப்பத்துக்கு உட்பட்டது.

ஒரு மாநிலத்தில் இடம்பெறும் பிரதமரின் நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் கலந்துகொள்வது கட்டாயம் என்பதற்கான சட்ட விதி எதுவும் இல்லை.

உன் தலைவன் மோடி தமிழ் மக்களுக்குப் பணி செய்ய வந்ததாகச் சொல்லியிருக்கிறாய். அவர் வருவது பணி செய்ய அல்ல; தமிழையும் தமிழினத்தையும் பைசா செலவில்லாமல்[இந்தி& சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்குகிற நிதியையும் தமிழுக்கு ஒதுக்குவதையும் ஒரு முறையேனும் ஒப்பிட்டுப்பார்] புகழ்ந்து பணிய வைப்பதற்காக.

நீ புத்திசாலியோ அல்லவோ, அவ்வப்போதைய உன்னுடைய பேச்சும் நடவடிக்கையும் நீ படு முட்டாள் என்பதையே பறைசாற்றுகின்றன.

உன் தலைவன்[கள்] இடுகிற பணிகளைச் செய்துமுடிப்பதோடு நிறுத்திக்கொண்டு, சுயமாக எதையும் சொல்லாமலோ செய்யாமலோ இருப்பதுதான் உன் அடிமைத் தொழிலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை இனியேனும் புரிந்துகொள். 

                                        *   *   *   *   *
பரிந்துரை:
அடிமைத் தொழிலைத் தவிர்த்துவிட்டு, உன் மூதாதையர் செய்துவந்த விவசாயத் தொழிலை மேற்கொள்வது தன்மானத்துடன் நீ வாழ்ந்திடத் துணைபுரியும். செய்வாயா?

திங்கள், 7 ஏப்ரல், 2025

இந்தக் குஜராத்திக்கு[மோடி] இத்தனை வாய்க்கொழுப்பா!?!?!

‘மோடி’ என்பவர் இந்த நாட்டின் பிரதமராக அறியப்படுகிறவர்.

இந்திய அரசாங்கச் சார்புள்ள எந்தவொரு நிகழ்வில் கலந்துகொள்ளும்போதும் இவர் ஒரு ‘இந்தியர்’ ஆகவே கருதப்படுவார்.

தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிட நேர்ந்தால் ‘நான் இந்தியன்’ என்றுரைப்பதே பின்பற்றத்தக்க நெறிமுறையாகும்.

மோடியோ பாம்பன் பாலத்தைத் திறந்துவைத்தபோது.....

"இந்தப் பாம்பன் பாலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவர் ஒரு குஜராத்தி. தற்போது இதே பாம்பனில் இந்தப் புதிய பாலத்தைத் திறந்து வைப்பதும் அதே குஜராத்தில் பிறந்த குஜராத்தியான நான்" எனக் கூறி உள்ளார்[ஊடகச் செய்தி]


இது இவரின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. இதை உணரும் குறைந்தபட்ச அறிவுகூட இவருக்கு இல்லாதது நம்மை வியக்கச் செய்கிறது.

இவர், “திமுக கூட்டணி வகித்த ஆட்சி காலங்களைவிடத் தற்போது 3 மடங்கு[வாய்ப்பே இல்லை] நிதியினை மத்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுத்துள்ளது” என்று ஆதாரம் ஏதும் தராமல் கதையளந்திருக்கிறார்.

கொடுத்திருந்தாலும்கூட, “இவ்வளவு கொடுத்தும், போதவில்லை என அழுகிறார்கள்''  என்று பேசி தமிழ்நாடு முதல்வரை[ராமேஸ்வரம் விழாவில்] மோடி[இந்தியப் பிரதமர் அல்ல; ஒரு குஜராத்தி] மறைமுகமாகத் தாக்கிப் பேசியது[ஊடகச் செய்தி] அநாகரிகத்தின் உச்சம்; வடிகட்டிய அயோக்கியத்தனம்.

பக்தி என்னும் பெயரால் மூடத்தனத்தை வளர்த்து ஆட்சியைக் கைப்பற்றும் தந்திரத்தை மட்டுமே தெரிந்துவைத்திருக்கும் இந்தக் குஜராத்தி, பழம்பெரும் நாகரிகமும் பண்பாடும் அதீத அறிவு வளர்ச்சியும் பெற்ற தமிழனைவிட எந்த வகையில் உயர்ந்தவர்?

எந்த வகையிலும் இல்லை.

மேற்கண்ட இழிப்புரைக்கு[அழிவுக்கால உரையும்கூட], இவர் இந்த நாட்டின் பிரதமர் என்னும் அகங்காரமே காரணம்!