திங்கள், 12 மே, 2025

இதுவும் ‘அவதாரி’ மோடியின் ஆட்சிக்காலச் சாதனைதான்!!!

கடவுள் அவதாரமான மோடி தன் ஆட்சிகாலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் அநேகம்[பட்டியலிட இடுகை ஒன்று போதாது].

அவற்றில் ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒன்று//உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்[இதர சில நாடுகள் உட்பட]உள்ள ஊடகங்கள் மிகத் தவறான தகவல்களைப் பரப்புவதாகத் ‘தெற்காசியப் பத்திரிகைச் சுதந்திர அறிக்கை’யில் கூறப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.

அதன் விளைவாக.....

*ஊடகங்களின் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது.

*சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய டிஜிட்டல் தளங்கள் மீது ஒடுக்குமுறைகள் கையாளப்படுகின்றன.


*போலித் தகவல்கள் அதிக அளவில் வெளியாகின்றன.


*ஊடக ஊழியர்கள் கடமையாற்றும் சூழல் மிக ஆபத்தானதாக உள்ளது.


*பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மாலத்தீவு போன்ற நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் இந்திய அரசு ஈடுபடுகிறது.


* * * * *


https://www.maalaimalar.com/news/world/south-asia-press-freedom-report-on-india-772227 -மாலை மலர்11 மே 2025 5:54 AM [செய்திகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுளன].

ஞாயிறு, 11 மே, 2025

'இந்தியா-பாகிஸ்தான் போர்... வெற்றி சீனாவுக்கே!!!

நடைபெற்ற[இந்தியா-பாகிஸ்தான்] போரில் நம் நாடு நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட BrahMos ஏவுகணைகளைப் பயன்படுத்தியதும், அவை சிறப்பாகச் செயல்பட்டதும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் என்றாலும், இவற்றை ஏவுவதற்குப் பிரான்ஸ்[பிரெஞ்சு] நாட்டிடமிருந்து வாங்கிய ‘ரஃபேல்’ விமானங்கள் பயன்படுத்தப்பட்டமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

‘ரஃபேல்’ஐ எதிர்கொண்டு அழிக்கும் ஆயுதம் தங்களிடம் இல்லை என்பது பாகிஸ்தானியர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியது.

அந்தக் கவலையைப் போக்க உதவியது, அவர்களின் நண்பனான சீனாக்காரன் தயாரித்த J-10 விமானம் என்பதும், அதைப் பயன்படுத்தித்தான் ரஃபேல்[மூன்று] உட்பட இந்தியாவின் 5 ஜெட் விமானங்களை அவர்கள் வீழ்த்தினார்கள் என்பதும் செய்திகள்.

போரில் ஈடுபட்டதால் பெரும் இழப்புகளுக்கு உள்ளான இந்தியாவும் பாகிஸ்தானும் ‘லாபநட்டக் கணக்கு’ப் போட்டுத் துயரத்தில் மூழ்கித் தவிக்கும் வேளையில்.....

“தங்களின் தயாரிப்பான ‘J-10' விமானம் பிரெஞ்சுக்காரனின் ஆகச் சிறந்த தயாரிப்பான ‘ரஃபேல்’ விமானத்தைச் சுட்டு வீழ்த்திய சாதனையை எண்ணி ஆனந்தப் பரவசத்தில் சீனர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள்” என்பது ஊடகச் செய்தி[பாகிஸ்தான் J-10 விமானம் மூலம் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியதாக அமெரிக்க வட்டாரம் உறுதியாகக் கூறுகிறது. பாகிஸ்தான் சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10 போர்விமானங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் ரஃபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இரண்டு முக்கிய அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளனர்> https://www.google.com/search?q=J+10+%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&oq=J+10+%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRiPAjIHCAMQIRiPAtIBCTM2ODAwajBqN6gCALACAA&sourceid=chrome&ie=UTF-8].

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு:

https://www.yahoo.com/news/china-helped-pakistan-shoot-down-142036091.html?guccounter=1

* * * * *

https://news.lankasri.com/article/rafale-jet-downed-by-pakistan-confirms-1746676817