வியாழன், 24 ஜூலை, 2025

பிள்ளைப் பாசத்தைச் சிதைக்கும் கள்ளக் காம உறவுகள்! தேவை உடனடி ஆய்வுகள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தன் கள்ள உடலுறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி, தான் பெற்ற இரு மழலைகளையே கொலை செய்த ஒரு மிகு காமுகிக்கு[+கள்ளக் காமுகன்] இன்று தண்டனை வழங்கியிருக்கிறார் நீதியரசர்[முழு விவரம் காணொலிகளில்].

தீர்ப்பு குறித்து இணையத்தில்[+காணொலிப் பின்னூட்டங்கள்] மிகப் பல கருத்துரைகள் வெளியாகியுள்ளன.

கருத்துரைப்பது நம் நோக்கமல்ல.

அவ்வப்போதோ, அரிதாகவோ இது போன்ற[காமக் களியாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக எண்ணிப் பெற்ற மகவைச் சுவற்றில் அடித்துக் கொன்றாள் ஒரு தாய் என்பதும் ஒன்று] அவலங்கள் இந்த மண்ணில் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது மிக அவசியம் என்பதை வலியுறுத்துவது இப்பதிவின் நோக்கம் ஆகும்.

வழிமுறைகள்:

இம்மாதிரிக் குற்றவாளிகளுக்கென்று[பந்தப் பாசங்களை முற்றிலுமாய்த் துறந்து, பாலுறவே பிரதானம் என்ற முடிவுக்கு வருதல், பெற்ற மகளைத் தந்தையே வன்புணர்வு செய்தல், தாயே தன் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்றவை> முற்றிய மனநோய்கள்] தனிச் சிறைகளை உருவாக்கி, குழந்தைப் பருவம் தொட்டு, இவர்கள் வளர்க்கப்பட்ட... தன்னிச்சையாய் வளர்ந்த சூழ்நிலைகளை உளவியல் மருத்துவர் குழுக்களைக்கொண்டு நுணுகி ஆராய்வது போன்றவை.

இதன் மூலம், குழந்தைப் பருவத்திலிருந்து இவர்கள் எதிர்கொண்ட இழி நிகழ்வுகளையும், அவற்றின் பாதிப்புகளையும் கண்டறிவதன் மூலம், ஆணோ பெண்ணோ இனி எவரும் இம்மாதிரிச் சூழல்களை எதிர்கொள்ளாதிருப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்தலாம்[பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களின் உதவியுடன்].

இதுவொரு ஆரம்ப நடவடிக்கையாயினும், காலப்போக்கில் இதை விரிவுபடுத்துவதன் மூலம் இம்மாதிரிக் குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம், அல்லது வெகுவாகக் குறைக்கலாம்.

இதுவொரு சாமானியனின் பரிந்துரை. பாலியல் மருத்துவ நிபுணர்களால் மட்டுமே இதற்கான செயல் திட்டத்தைச் சிறப்பாக வகுத்தளிக்க இயலும்.
                                 *   *   *   *   *
தொடர்புடையதொரு செய்தி[பயப்படாம படியுங்க]:

புதன், 23 ஜூலை, 2025

கோயில்களின் வாயில்களில் காத்துக்கிடக்கும் கருணைக் கடவுள்கள்!!!

இந்துவோ இஸ்லாமோ கிறித்தவமோ நீங்கள் எம்மதம் சார்ந்தவராயினும், உங்களுடைய வழிபடு கடவுளின் அருளைப் பெற்றிட[உடனடியாக] ஓர் எளிய வழி.

முதலில் கைப்பை ஒன்றில் சில்லரையாக ரூபாய்த் தாள்களையோ சில்லரை நாணயங்களையோ நிரப்பிக்கொள்ளுங்கள்.

அனைத்து மதக் கோயில் வாசல்களிலும் உங்களிடம் தர்மம் பெறுவதற்காகப்  பிச்சைக்காரகள் அணிவகுத்துக் காத்திருப்பார்கள்.

நீங்கள் இவற்றில் எந்தவொரு கோயிலுக்கும் செல்லலாம். சென்று, கைவசம் இருக்கும் சில்லரைகளை[ஐம்பது நூறாகவும் இருக்கலாம்] அவர்களுக்குத் தர்மம் செய்யுங்கள்.

அடுத்த வினாடியே நீங்கள் எதிர்பார்க்கிற புண்ணியம் உங்களின் ‘பாவ புண்ணியம்’ கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். கடவுளிடம் வைக்கவிருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிடும்.

அடுத்த வினாடியே அது நிகழக் காரணம்.....

பிச்சைக்கார்களுக்கிடையே வழக்கமாகக் காத்திருக்கும்[அருவமாக], கடவுள்[எந்தவொரு மதத்தவர்க்கு உரியவராயினும்] நீங்கள் தர்மம் செய்வதைப் பார்த்ததும் உங்கள் மீது அருள்மழை பொழிவதுதான்.


நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கோயில் வாசலிலேயே கிடைத்துவிடுவதால்,  கோயிலுக்குள்[மசூதி, தேவாலயம்+ + +] செல்லாமலே வீடு திரும்பி வேறு முக்கிய வேலைகளில் நீங்கள் ஈடுபடலாம்.

மற்றபடி, பிச்சைக்கார்களுக்குத் தர்மம் செய்யாமல் கோயிலுக்குள் சென்று வழிபடுவதால், கடவுளின் அருளைப் பெற்றிட வாய்ப்பே இல்லை என்பதை அறிவீராக.

"எல்லாம் சரி, உலகத்தைப் படைத்து, உயிர்களுடன் மனிதர்களையும் படைத்து, அவர்களில் பிச்சைக்காரர்களையும் உருவாக்கி, மற்றவர்களில் கொஞ்சம் பேரைத் தர்மவான்கள் ஆக்கி..... கடவுள்[கள்?!] எதற்காக   இப்படியெல்லாம் செய்கிறார்?”னு யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

சொன்னால் அற்ப ஆறறிவு மனிதர்களாகிய உங்களுக்குப் புரியாது!

அடியேனுக்கும் புரியும்படி சொல்லத் தெரியாது!! ஹி...ஹி...ஹி!!!