சனி, 25 அக்டோபர், 2025

100% துறவியாக வாழ விழைவோருக்கு.....

சுகபோக வாழ்க்கைக்கான வசதிகள் நாளும் பெருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசை, பாசம், அந்தரங்கச் சுகங்கள் என்று அனைத்துப் பற்றுகளையும் துறந்து வாழ்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

ஏற்புடைய வாழ்விடம் அமைந்தால், தமக்கிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் பற்றுகளுடன் வாழ்பவர்களால், அவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியம் ஆகுமா என்னும் கேள்வி என்னுள் எழுந்தது.

இக்கேள்வியைக் கூகிள் தேடுபொறியில் பதிவு செய்ததில் அதன் செயற்கை நுண்ணறிவு[AI] அளித்த பதில் கீழே[முற்றும் துறந்து வாழ்வதற்கான இடங்கள்]:

*இமயமலையில், மடாலயங்கள், தியானக் குகைகள், லடாக்கில் உள்ள ‘தங்க்யுட் கோம்பா’, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குகைகள் என்று பனி சூழ்ந்த இடங்களில் துறவிகள் தங்கியிருக்கிறார்கள்.

*மலைகள் நிறைந்த திபெத், பூட்டான், லடாக், நேபாளம் ஆகியவற்றின் சில பகுதிகளிலும் துறவிகள் வாழ்கிறார்கள்.

*குளிர்காலத்துக்கு ஏற்ற இமயமலையின் தொலைதூரக் கிராமங்களிலும் துறவிகளுக்கான வாழ்விடங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் கோமிக் கிராமம் குறிப்பிடத்தக்கது[‘கோமிக்’இமயமலையில், ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது வாகனம் செல்லக்கூடிய உலகின் மிக உயரமான கிராமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,050 அடி(4,587 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இங்குதான் பண்டைய ‘டாங்யுட் மடாலயம்’ இருக்கிறது. மலைக் காட்சிகள் காண்போரைப் பிரமிக்கச் செய்யும்].
*   *   *   *   *

***இங்குள்ள பொல்லாத மனிதர்களையும், மனம் பதறச் செய்யும் கொடூர நிகழ்வுகளையும் கண்டு கண்டு நொந்து நூலாகிப்போனவர்கள், விரும்பினால் மேற்கண்ட இடங்களில் ஒன்றிலோ பலவற்றிலுமோ ஒரு துறவியாகத் தங்கியிருந்து, மன நிம்மதியுடன் வாழ்நாளைக் கழிக்கலாம்.

செல்பவர்கள் மறவாமல் மானசீகமாக அடியேனுக்கு நன்றி சொல்லுங்கள். ஹி... ஹி... ஹி!!!

வெள்ளி, 24 அக்டோபர், 2025

செ.நு.அறிவை[AI]ப் பயன்படுத்திப் பகுத்தறிவைச் சிதைக்கும் சங்கிப் பதர்கள்!!!

கிருஷ்ணனைக் கற்பனைக் கதைகள் மூலம் கதாநாயகன் ஆக்கியவை புராணங்கள். அந்தக் கதாநாயகனைப் பிரபலக் கடவுளாக ஆக்கியவர்கள் சங்கிப் புளுகர்கள்.

புராணக் கதைகளைப் பரப்புரை செய்து மக்களின் சிந்திக்கும் அறிவை முடமாக்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள்.

இவர்கள் அறிவியலின் நிரந்தர எதிரிகளும்கூட.

இதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இடையறாது ஒருங்கிணைந்து பாடுபவர்கள் இந்தப் பாதகர்கள்.

‘செயற்கை நுண்ணறிவு[Artificial intelligence> AI] இவர்களின் மூடநம்பிக்கை வளர்ப்பிற்கு வலுவான தடையாக அமையுமோ என்று அஞ்சியதன் விளைவு, பொய்த் தகவல்களைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

இவர்களில் ஒருவன் ராஜஸ்தான்காரனான 25 வயதான ‘விஜய் மீல்’ என்னும் களிமண் மண்டையன். 

'கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்பது போன்ற[எ-டு: மனித அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியையும் செயற்கை நுண்ணறிவு(AI) தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த இயந்திரங்கள் வழியாகத் தெய்வத்துடன் தொடர்பு கொள்வது பற்றிய ஒரு முன்னோட்டத்தை இந்தியா வழங்கக்கூடும்] நம்பிக்கை வார்த்தைகளைக் கீதா-ஜிபிடி சொல்ல, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறானாம் இந்த மீல்.

இவன் அளந்துவிட்டுள்ள கதையை முழுமையாக அறிந்திடக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குங்கள்.

https://www.bbc.com/tamil/articles/cj3z0kj4xyzo   - 20 அக்டோபர் 2025