வெள்ளி, 26 டிசம்பர், 2025

ராமாதாசா, அன்புமணியா? ‘பூவா தலையா?’ போட்டால் தெரியும்!

தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையிலான பதவிப் பிரச்சினை, ஒரு தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.*

பெற்றெடுத்த மகனுக்கு அன்புமணி என்று அழகான தமிழ்ப் பெயர் சூட்டி, வளர்த்து ஆளாக்கி, மருத்துவராக்கி, கட்சியில்[பாமக] உயர் பதவி கொடுத்து, டெல்லி அமைச்சராகவும் அமர்த்தி அழகு பார்த்துப் புளகாங்கிதப்பட்ட ராமதாஸ் என்னும் தமிழினப் பற்றுள்ள அப்பனுக்கு[நல்ல தலைவரும்கூட], வரலாறு கண்டிராத அளவுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்புமணியைப் போன்ற ஒரு புதல்வன் இம்மண்ணில் இதுவரை தோன்றியதில்லை என்றே சொல்லலாம்[இவரைவிடவும், பெற்றவனை ஈவிரக்கமின்றிப் போட்டுத்தள்ளிவிட்டுப் பதவியைக் கைப்பற்றிய மொகலாய மன்னர்களின் சில வாரிசுகள் தேவலாம்].

அப்பனுக்கும் மகனுக்குமான போட்டி/போர், முடிவொன்றை எட்டாததால், பிற சாதிக்காரர்கள் ஒட்டுமொத்தப் பாட்டாளி மக்கள் கட்சியினரையும் பார்த்து நகைக்கிறார்கள்.

இதைத் தவிர்க்கும் வகையில், ‘சமரசத் தீர்வு' காண்பதற்கான திட்டமொன்றை இருவரிடமும் பரிந்துரைப்பது அடியேனின் விருப்பம்.

அது.....

‘பாமக’வின் உண்மை விசுவாசிகளைத் திரட்டி[அத்தனை எளிதல்ல], அவர்கள் முன்னிலையில் ‘பூவா தலையா’ போட்டுப் பார்ப்பது.

பூ விழுந்தால் பெரியவர் ராமதாஸே ‘பாமக’வின் ஆயுட்காலத் தலைவர். தலை விழுந்தால்[விழக்கூடாது என்பது அடியேனின் பிரார்த்தனை] அன்புமணி தலைவராவார்.

                                               *   *   *   *   *

*https://news7tamil.live/g-k-mani-expelled-from-pmk-anbumani-announces.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMw-qruBA&utm_content=rundown#google_vignette

வியாழன், 25 டிசம்பர், 2025

வடக்கன்களின் கால் கழுவிப் பிழைப்பு நடத்தும் காலைக்கதிர்க் கசடன்!

 

கேள்வி கேட்டவனாகட்டும் பதில் சொன்னவனாகட்டும், தமிழர்களை இழிவுபடுத்தியும், ஆதிக்க வெறி கொண்ட வடக்கன்களின் கால் கழுவிய நீர் குடித்தும் பிழைப்பு நடத்தும் அடிமைகள் ஆவார்கள்.

ஆங்கிலமும் இந்தியும் தெரியாததால் ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆக இயலாது என்கிறான் கழிசடைக் காலைக்கதிர்க்காரன்[‘கேள்வி-பதில்’ பகுதி].

மறைந்த காமராசர் என்னும் தமிழ் மட்டுமே தெரிந்த பெருந்தலைவர், இந்த இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது இந்த அண்டிப் பிழைக்கும் அறிவீனனுக்குத் தெரியும்.

எப்போது எங்குச் சென்றாலும் மொழிபெயர்ப்பாளரை உடன் அழைத்துச் செல்லும் மோடிக்கு, அரைகுறை இந்தி மட்டுமே தெரியும் என்பதும் இந்த அரைவேக்காடனுக்குத் தெரியும்.

எந்தவொரு மொழியில் பேசினாலும், உடனுக்குடன் விரும்பும் மொழியில் ‘மொழியாக்கம்’ செய்வதற்கான கருவிகள் பயன்பாட்டில் இருப்பதும் இந்தக் குதர்க்கவாதிக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும், தன் சங்கி எஜமானன்களைத் திருப்திப்படுத்திட ஸ்டாலினை இழிவுபடுத்தியிருக்கிறான் இந்தக் காரியவாதி.

தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று, காசு கொடுத்துக் காலைக்கதிர் வாங்குவதை நிறுத்தினாலே இவன் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவான்.

இது விசயத்தில் நம்மவர்கள் காலதாமதம் செய்தல் கூடாது என்பது நம் எச்சரிக்கை.