வியாழன், 4 ஏப்ரல், 2024

விஷ்ணுவின் 11ஆவது அவதாரம் மோடி!!!

‘கங்கனா ரணாவத்’ உலகறிந்த, விருதுகள் பல பெற்ற குணச்சித்திர நடிகை; சீரிய சிந்தனையாளர்; ராமபிரானின் பக்தை; பிரபஞ்சப் பேரழகி!

நம் பிரதமர் மோடியின் ‘சிஷ்யை’ என்பதும் அறியத்தக்கது.

மனப்பூர்வமாய் உணர்ந்த உண்மைகளை மட்டுமே பேசத் தெரிந்த ரணாவத், இமாசலப் பிரதேசத்தின் ‘மண்டி’ தொகுதியில் மேற்கொண்ட பரப்புரையின்போது[இங்கே போட்டியிடுகிறார்], “நம் மோடியை ‘ராமபிரான்&விஷ்ணு’வின்[மும்மூர்த்திகளில் ஒருவர் விஷ்ணு என்பதறிக] ஓர் அங்கம் என்று கூறலாம்” என்று சொல்லியிருக்கிறார்.

முதலில், ’ராமபிரானின் அங்கமே மோடி’ என்று சொல்ல நினைத்து அதில் திருப்தி அடையாமல், விஷ்ணுவே ராமனாக அவதரித்தார் என்பதால், அவர்[மோடி] விஷ்ணுவின் அங்கமும்கூட என்று கூறியிருக்கிறார்.

முன்னொரு காலத்தில், ராமச்சந்திர மூர்த்தியால் ஆளப்பட்டதால் இந்தத் தேசம்[அயோத்தி] ‘புண்ணிய[ப்?] பாரதம்’ என்று பேசப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் பரதேச மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டுப் பாவ பூமியாக ஆன இது, மோடியின் ஆட்சியில் மீண்டும் புண்ணிய பூமியாக மாறியிருக்கிறது.

மோடி ‘ராமன்&விஷ்ணு’வின் அங்கம் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று.

சிந்தனைக்கரசி ‘கங்கனா ரணாவத்’ கொஞ்சமே கொஞ்சம் கூடுதலாகச் சிந்தித்திருந்தால்.....

“மோடியே ராமபிரான்; விஷ்ணு பகவானும் அவரே” என்று உறுதிபடக் கூறியிருப்பார்.

மோடி ஒரு சாமானியர் மட்டுமே என்று கருதப்பட்ட நிலையில், அவர் ஓர் ‘அவதாரப் புருஷர்’ என்று உலகறியச் சொன்ன ‘கங்கனா ரணாவத்’ அவர்களுக்கு இந்தியர்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்!

*   *   *   *   *
காணொலிக்கான கருத்துரைகளில் ஒன்று:
@venkataramansubramanian9288
22 மணிநேரம் முன்
On April 3, Actor turned politician Kangana Ranaut , the BJP candidate for Mandi in the upcoming Lok Sabha elections, delivered a speech at a public rally. She criticized the opposition claiming that corrupt individuals have united to form the INDI Bloc. Additionally she likened Prime Minister Narendra Modi to an incarnation of Lord Vishnu describing him as the guardian of the people in the current era.
@வெங்கடராமன்சுப்ரமணியன்9288
22 மணிநேரம் முன்
ஏப்ரல் 3 அன்று, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மண்டியின் பாஜக வேட்பாளரான கங்கனா ரனாவத் ஒரு பொது பேரணியில் உரையாற்றினார். ஊழல்வாதிகள் ஒன்றிணைந்து INDI Bloc ஐ உருவாக்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சிகளை அவர் விமர்சித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை மகாவிஷ்ணுவின் அவதாரமாக ஒப்பிட்டு, தற்போதைய காலக்கட்டத்தில் மக்களின் காவலராக அவரை வர்ணித்தார்.