1.பூமி தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது போலப் பூமி இப்போது இல்லை. அதேபோல வரும் காலங்களிலும் பூமி இது போல இருக்காது. இந்த மாற்றங்களால் பூமி[உலகம்] நிச்சயம் ஒரு காலத்தில் அழியும்.
2.சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் பூமியில் மோதியதால்தான் டைனோசர்கள் அழிந்தன என்று நம்பப்படுகிறது. அதே போன்ற ஒரு நிகழ்வு இன்று நடந்தால், அது பேரழிவை ஏற்படுத்தும். சிறுகோள் மோதும்போது பெரிய அளவில் ஆற்றல் வெளியேறி அது பேரழிவை ஏற்படுத்தும்.
3.பெருநெருப்பு, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது, கோள்களுக்கிடையே ஏற்படும் மோதலால், விண்வெளி தூசுகளாலும் குப்பைகளாலும் நிரம்பும். அதனால் சூரிய ஒளியையே மறைந்துவிடக்கூடும். பெரும் அடர் பனி உருவாகி, காலநிலை மாறி, பூமியில் உள்ள உயிரினங்கள் அழியக்கூடும்.
6.அணு ஆயுதப் போர் உடனடி உயிரிழப்புகளையும் பேரழிவையும் ஏற்படுத்தலாம்.
7.செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையின் பல அம்சங்களில் புரட்சியை ஏற்படுத்தினாலும், சில வல்லுநர்கள் ஒரு சூப்பர் இன்டெலிஜென்ட் இயந்திரத்தை உருவாக்கும்போது, அது ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். செயற்கை நுண்ணறிவானது கட்டுப்பாட்டை மீறி மனிதர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அது மனித இன அழிவுக்கு வழிவகுக்கும்.
