ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

இந்தப் ‘புளுகுணி’ தப்பிப் பிழைத்தது[நேபாளப் பேரழிவில்] மிகப் பெரிய தப்பு!

நேபாளப் பெருவெள்ளப் பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது.

தங்களின் உயிரிழப்பைப் பொருட்படுத்தாத கருணையுள்ளத்தவர்கள்தான், உயிர் பிழைக்கப் போராடுபவர்களைத் தேடிக் கண்டறிந்து காப்பாற்றப் பாடுபடுகிறார்கள்.

அவர்களில், இவர்களின் உதவியாலோ தற்செயலாகவோ தப்பிப் பிழைத்த மரமண்டையர்களில் சிலர், கற்பனைக் கடவுள்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில்,  சிவபெருமானைக் கண்டதாகச் சொல்லும்[காணொலி> கீழே] ‘புளுகிணி’யும் ஒருத்தி.

மனிதாபிமானத்தை வளர்க்க வேண்டிய நேரத்தில் இப்படிப் பொய் பேசி[சுய விளம்பரம்] அனுமானக் கடவுள்களுக்குப் புகழ் சேர்ப்பவர்கள் கண்டிக்கப்படுதற்கு உரியவர்கள் மட்டுமல்ல, கடும் தண்டனைக்கும் உரியவர்கள்.

இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுமாறு, அல்லாவையும் கர்த்தரையும் இந்துக் கடவுள்களையும் பிரார்த்தனை[பல மூடநம்பிக்கைகளின் வித்து] செய்வோரும் இவர்களில் அடங்குவார்கள்.
கருத்துரைகள்[3 மட்டும்]:
கைலாஷ் சிவன் உங்களை மட்டும் எப்படிக் காப்பாற்றியது? 5000 மேற்பட்ட மக்களை ஏன் காப்பற்றவில்லை?

@jeni-x1j

9 மணிநேரம் முன்ஆனால் நீ போடு போட்டியே உயிரோடு வந்தததும் சிவனை நேரில் பார்த்தேன் என்று. உன்னைத் தூக்கிப் பெருவெள்ளத்தில் போட்டிருந்தால் சிவன் உன்னை காப்பாற்றி இருப்பானா?


@ChellaPandian-cq9vd

சிவரஞ்சனி ...தனது

பெருமை  பற்றிய

விளம்பரத்தைப் பேசுவதுபற்றி.....

ஒருநொடி

மீளவும் சிந்திக்கலாமே

தப்பிவர முடியாதவர்

பலருமே வேதனையில்

துணைவர்

இணையர்கள் நிலைகளை எண்ணினாலே

நீங்கள் செய்யும் சுயபுராணம்....

பார்ப்பவர்களையே

வேதனைப்படுத்தும்

இக்கட்டான நேரத்தில்

எதற்காக இந்த விளம்பரம்

சிவனை நேரில் கண்டதாகவே

கூறுகிற....

வீண்விளம்பரங்கள்

சமயோஜிதம் அறியாது

கணவனையும் உடன்வைத்து

எதைஎதையோ கூறுவது

மூடத்தனம்.


2