நான்.....

எனது படம்
இத்தளத்தில் வெளியாகும் பதிவுகள் புதியனவாக இருத்தல் வேண்டும் என்பதே என் விருப்பம். மிகக் குறைந்த ‘பார்வை’களைப் பெற்றப் பழைய இடுகைகளில் தரம் வாய்ந்தவை, புதிய வருகையாளர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே புதுப்பித்து வெளியிடப்படுகின்றன. அரிதாகச் சில மீள்பதிவுகளாக வெளியிடப்படுதலும் உண்டு.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் | ரஷ்யா | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா-பாகிஸ்தான் மோதல் | ரஷ்யா | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஆகஸ்ட், 2025

மோடிஜியின் முதுகில் குத்தியது ரஷ்யா! இனி ‘ஜி’யின் வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் ரத்து?!

//இரு நாட்டுத் தலைவர்களும்[டிரம்ப் & புடின்] பேசியது குறித்துப் புதினின் உதவியாளர் ‘யுரி உஷாகோவ்’ விளக்கமளித்தார்; “இந்தியா - பாகிஸ்தான் போரை ‘டிரம்ப்’தான் நிறுத்தினார்" என்று தெரிவித்தார்//[செய்தி முழுவதும் வாசிக்க> https://www.dinamani.com/world/2025/Jun/06/trump-halted-india-pakistan-conflict-says-putin-aide]

ண்மையில் இடம்பெற்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சில நாள் மோதலை[குட்டிப் போர் என்றால் மோடிஜி கோபிப்பார்] தான்தான் நிறுத்தியதாக நாட்டாமை ‘டிரம்ப்ஜி’ மிகப் பல முறை[29+?] தற்பெருமை பீத்தியும், நம் தன்மானச் சிங்கமான மோடி அவர்கள், “மோதல் நிறுத்தப்பட்டதற்குப் பாகிஸ்தான்[நம் காலடியில் மண்டியிட்டுக்] கெஞ்சியதே காரணம். இதில் எந்தவொரு தலைவரின் தலையீடும் இல்லை”  என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், மோதல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் ‘டிரம்ப்’தான் என்று ‘ரஷ்யா’ வாக்குமூலம் அளித்திருப்பது நம் பிரதமருக்கு[குடிமகனான நமக்கும்தான்] மிகவும் கடுமையான அதிர்ச்சியை, இனி வெளியே[உலக நாடுகள்] தலைகாட்ட இயலாத அளவிற்கு ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக நம் நரேந்திர மோடியவர்கள் இனி எந்தவொரு நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செல்லமாட்டார் என்பது நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ள செய்தி!