வெள்ளி, 9 ஜூலை, 2021

'கீழ்க்கொங்கு' மாநிலம்!!!


மேற்கண்ட 'காணொலி'ச் செய்தியின் மூலம் 'கொங்கு[நாடு?] மாநிலம்' உதயமாவது உறுதி என்று தெரிகிறது.

இப்படியொரு மாநிலம் உருவானால், அதன் தலைநகரம் 'கோயம்புத்தூர்' நகரமாகத்தான் இருக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

நிர்வாகம், நீதித்துறை என்று அனைத்து 'உயர்' தலைமையகங்களும் கோவை மாநகரில் இடம்பெறும் என்பது உறுதி. இவற்றை எங்களூர்க்காரர்கள்[நாமக்கல்] அணுக வேண்டுமாயின் 160 கி.மீ. பயணித்தல் அவசியம்.

இந்த நெடு நெடுந்தொலைவுப் பயணத்தை நாங்கள் தவிர்க்கும் வகையில், அமையவிருக்கும் கொங்கு[நாடு] மாநிலத்தின் தலைநகராக, இடைப்பட்ட நகரமான ஈரோடு நகரைத் தலைநகர் ஆக்குவதே சாலச் சிறந்த நடவடிக்கையாகும். ஆனால்.....

'பாஜக'வின் மிகச் செல்வாக்குள்ள தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்[அவர்கள்] போன்ற உள்ளூர்ப் 'பாஜக' பிரமுகர்கள் இதனைச் செயல்பட விடமாட்டார்கள் என்பது 100% உறுதி. 

இதைப் போலவே, நாமக்கல்லைத் தலைநகர் ஆக்குவதற்குக் கரூர்வாசிகளோ, ஈரோட்டார்களோ, கொங்கு நாட்டிலுள்ள ஏனைய நகரங்களைச் சேர்ந்தவர்களோ சம்மதிக்க மாட்டார்கள்.

எனவே, எங்களுக்குள்ள இடர்ப்பாடுகளைத் தவிர்த்திட வேண்டுமாயின், [நடுவணமைச்சர் மாண்புமிகு முருகன் அவர்களின் சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள] கொங்குநாட்டைத் தனியொரு மாநிலம் ஆக்காமல், அதை நான்காகப் பிரித்து, மேற்குத் திசையில் உள்ள கோவையையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்து 'மேல்கொங்கு மாநிலம்' என்றும், கிழக்குத் திசையிலுள்ள நாமக்கல்லையும் அதைச் சுற்றியுள்ள  பகுதிகளையும் ஒன்று சேர்த்துக் 'கீழ்க்கொங்கு மாநிலம்' என்றும், ஈரோட்டையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைத்து 'வடகொங்கு மாநிலம்' என்றும், கரூரையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் ஒன்றாக்கிக் 'தென்கொங்கு மாநிலம்' என்றும் பெயரிடலாம்[தர்மபுரியையும் கிருஷ்ணகிரியையும் இணைத்து ஒரு மாநிலமாகவோ, இணைக்காமல் தனித்தனி மாநிலங்களாவோ ஆக்கலாம்].

இவ்வாறு, ஒன்றைப் பலவாகப் பிரிப்பது ஆகச் சிறந்த நிர்வாகத்தை அளிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பது எம் போன்றோர் எண்ணமும் நம்பிக்கையும் ஆகும்.

இந்த ஆக்கபூர்வமான எண்ணத்திற்கு மாண்புமிகு நடுவணமைச்சர் முருகன் அவர்கள், உரியவர்களிடம், உரிய முறையில் பரிந்துரைத்துச் செயல் வடிவம் தருதல் வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.

அமைச்சர் அவர்கள், இதை வெளிப்படையாக என்றில்லாமல் ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றி மறைமுகமாகவேனும் அறிவிப்பாரேயாயின்.....

'கீழ்க்கொங்கு மாநில ஜனதா கட்சி' என்னும் பெயரில், நாமக்கல் வாசிகளான நாங்கள், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தொடங்கவுள்ள, மாநிலக் கட்சிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவதற்கு அது உதவியாக இருக்கும் என்பதை மிக்கப் பணிவன்புடன் தெரிவிக்கிறோம்.

கீழ்க்கொங்கு மாநிலத்தைச் சேர்ந்தவரான[கோனூர் கந்தம்பாளையம் நாமக்கல்லுக்கு மிக அருகில் உள்ள ஊர்] தாங்கள்தான், 'பாஜக'வுக்கு என்றென்றும் 'தோள்' கொடுக்கவிருக்கும் கட்சியான இதனைத் தொடங்கிவைத்திடல் வேண்டும் என்னும் கோரிக்கையை இப்போதே தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். நன்றி.

வாழ்க கீழ்க்கொங்கு மாநிலம்! வாழ்க... வளர்க 'கீகொஜக'!!
====================================================================================

செவ்வாய், 6 ஜூலை, 2021

இணைய வகுப்பு- இங்கே இப்படி! அங்கே அப்படி!!

இணையப் பாடவகுப்பில் நம்ம ஊர் ஆசிரியர்[கள்] ஆபாசமாக நடந்துகொண்டது நாமறிந்த பழைய செய்தி.

இதற்கு நேர் எதிராக, வியட்நாமில்[Ho Chi Minh city of Vietnam], இணையம் வழியாகப் பாடம் கேட்டுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், படு ஆபாசமாக நடந்துகொண்டார் என்பது புதிய செய்தி.

பாடம் கேட்டுக்கொண்டிருந்த அந்த மாணவர் திடீர் விரகதாபத்திற்கு உள்ளாகி, அருகிலிருந்த தன் தோழியுடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டிருக்கிறார். அது நேரடியாக ஒளி/ஒலிபரப்பு ஆகியுள்ளது.

அவரின் செயல் தவறானதுதான் என்றாலும், காணொலிக் கருவியை[கேமரா] அவர் அணைக்க மறந்ததுதான் மன்னிக்க இயலாத குற்றமாக அமைந்துவிட்டது[அந்த ஆன்லைன் செக்ஸ் வீடியோவில் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் ஆன்லைனில் கசிந்தது என்பது செய்தி]. 

இதன் விளைவாக, பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்[மாணவர்களும்தான்] கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்; “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நேரடியாக வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது நீங்கள் உடலுறவு கொள்கிறீர்கள்” என்று சீற்றத்துடன் அவர் கத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டனவாம்.

பேராசிரியரின் கோபமான வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான், தனது தவற்றை உணர்ந்துக்கொண்ட மாணவர், உடனடியாக ஆடையால் உடலை மறைத்துக்கொண்டு, நொடிப் பொழுதுக்குள் கேமராவை அணைத்திருக்கிறார்.  இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பேராசிரியரிடமும், தன் வகுப்புத் தோழர்களிடமும் அந்த மாணவர் மன்னிப்பு கோரியதாக வியட்நாமியச் செய்தித்தாள் 'லாவோ டோங்' தெரிவித்தது என்பதும் செய்தி[https://zeenews.india.com/tamil/social/bizarre-online-class-student-having-sex-during-online-class-goes-viral-366024  -04.07.2021.]

இந்தச் செய்தி, பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நடுவண் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வொன்றை நினைவுபடுத்தியது.

தொலைக்காட்சித் திரையில் ரயில்களின் புறப்பாடு, வருகை தொடர்பான தகவல்களை அறிவிப்புச் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகமான காலக்கட்டம் அது.

தகவல் அறிவுப்புகளுக்கிடையே, சற்றும் எதிர்பாராத வகையில், ஒரு வாலிபர்(அங்கே வேலை பார்ப்பவர்)   சுயசுகம் அனுபவிக்கும் காட்சி திரையில் தெரியலாயிற்று. அதிர்ச்சியடைந்த பயணிகள் தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் செய்ய, அந்த ஆபாச நிகழ்வு மறைக்கப்பட்டது. மேற்கண்டது போன்ற தவறுதான் இங்கேயும் நிகழ்ந்திருக்கிறது.

சுற்றுச் சூழலை மறந்து செய்யப்படும் இவ்வாறான தவறுகள் அரிதாகத்தான் நடைபெறுகின்றன என்றாலும், பெரியவர்கள் என்றில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் சென்றடைந்து மனத்தளவில் அவர்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் என்பது அறியத்தக்கது.

கட்டுக்கடங்காத இச்சைக்கு உள்ளாகும்போது, இச்சைக்குள்ளானவர் முற்றிலுமாய், தன்னை மறந்தும் சுற்றுச் சூழலை மறந்தும் இச்சையைத் தணிப்பதிலேயே கவனம் செலுத்துவார் என்பதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கீழ்வரும் நிகழ்வும் ஓர் உதாரணம் ஆகும்.

புதுமணத் தம்பதியரான மகனும் மருமகளும் வெளியூர் செல்ல, பேருந்து நிலையம் செல்கிறார்கள்.

தனித்து விடப்பட்ட முதியவர், தொலைக்காட்சியில் பெண்ணின் ஆபாச நடனத்தை ரசித்தவாறு சுய இன்புறுதலில் ஈடுபடுகிறார். போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக வீடு திரும்பிய புதுமணத் தம்பதி, கதவு உட்பக்கம் தாழிடப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்த நிலையில், பெரியவர் இருந்த கோலம் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்; அவரைக் கடிந்துகொள்ளவும் செய்தார்கள்.

அன்றிரவே, தனக்கான அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் பெரியவர்[மருமகள் வாயிலாக, நடந்த அசம்பாவிதம் அண்டை அயலாருக்குத் தெரிந்துவிட்டது].

இம்மாதிரி நிகழ்வுகள் வெகு அரிதானவைதான் என்றாலும் அதன் விளைவு பெரும் கேடு விளைப்பதாக அமைந்துவிடுகிறது.

ஆக, இணைய வகுப்புகள் என்றில்லை, கட்டுப்படுத்தவே இயலாத நிலையில் சிற்றின்பங்களில் ஈடுபடுவோர், அவர்கள் இருந்துகொண்டிருக்கும் சூழ்நிலை எவ்வாறானது என்பதை மிகக் கவனமாக ஆராய்ந்தறிவது மிக மிக மிக அவசியமாகும்.

இம்மாதிரியான நாம் அறிந்த செய்திகளை நம்மோடு தொடர்புடையவர்கள் மூலம் பரவச் செய்வது'சிறுசு'களுக்கு மட்டுமல்லாமல் 'பெருசு'களுக்கும் பயன்தருவதாக அமையும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.