திங்கள், 30 ஜனவரி, 2023

இழந்த இளமையை மீட்டெடுக்கும் 45 வயது லட்சோப லட்சாதிபதி[millionaire]!!!

“சத்துணவு உட்கொண்டு, உடற்பயிற்சி, யோகாப் பயிற்சி எல்லாம் முறையாகச் செய்தாலும்கூட, 45 வயதான ஒருவரின் இதயத்தை 37 வயதுக்காரருடையதைப் போலவும், நுரையீரலையும் உடலையும் 18 வயதே ஆன ஓர் இளைஞனுக்கு இருப்பதைப் போலவும், உடம்பின் தோலை 28 வயதுக்காரனுடையதை ஒத்ததாகவும் மாற்ற முடியுமா?” என்று கேட்டால்.....

“முடியும்” என்கிறார் 45 வயதான கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜான்சன் என்பவர்[மில்லியனர்].

இதற்காக, இவர் ஆண்டுக்குச் சுமார் 16 கோடி ரூபாய் செலவு செய்கிறார்[காணொலி கீழே].

இவரின் இல்லத்தில், உடல் நலம் பேணுவதற்கான சாதனங்களைப் பராமரிக்கப் பல மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

சிகிச்சை செய்யப் பல்துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் களத்தில் இருக்கிறார்கள்.  

இவரின் இந்த அபூர்வமான சாதனை முயற்சி பற்றி dnawebdesk@gmail.com தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மில்லியனரின் முயற்சி வரவேற்கத்தக்கதுதான்.

ஆனாலும், இதயமும் நுரையீரலும் இளைஞர்களுடையதைப் போல் இருப்பதில் பாதிப்பு ஏதும் இல்லை. உடல் இளைஞருடையதைப் போல மாறினால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றில் முக்கியமானவை…..

இவர் திருமணம் ஆனவராக இருந்தால், வாலிபராக மாறிய இவரின் பாலியல் தேவையைக் கிழவியாகிக்கொண்டிருக்கும் இவரின் மனைவியால் நிறைவு செய்ய இயலாது. ஆதலால், அவரையும் குமரியாக்க வேண்டும். அதற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்தல் தவிர்க்க இயலாதது.

குழந்தைகள் இருந்தால், தோற்றத்தால் அவர்கள்  இவரைவிடவும் இளையவர்களாகவே இருந்துகொண்டிருப்பது கட்டாயம் ஆகிறது.  அவர்களுக்கும் சிகிச்சை தேவை.

வயது அதிகரிக்கும்போது அதனால் அனுகூலங்கள் சில உள்ளன. அவற்றை இழக்க நேரிடலாம். 

எது எப்படியோ, முதுமையை இளமைப்படுத்துவதில் பாதகங்களும் உண்டு என்றாலும்[காலப்போக்கில் அவை தவிர்க்கப்படலாம்] இம்முயற்சி வவேற்கத்தக்கதே.

காலப்போக்கில், பெரும் செல்வந்தர்கள் பலரும் ஜான்சனைப் பின்பற்றி இளைஞர்களாக வலம்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பணக்காரர்கள் என்றில்லாமல், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் இதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்கான கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் நிகழ்த்துதல் வேண்டும். 

இன்றைய கிழங்கள் நாளைய குடு குடு கிழங்களாக ஆவதற்குள் இது நிகழ்த்தப்பட்டால் அது நம்மைப் போன்றோருக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாக அமையும் என்பது உறுதி!

ஹி… ஹி… ஹி!!!

https://www.msn.com/en-in/money/topstories/ageing-can-be-reversed-45-year-old-ceo-spends-rs-16-crore-every-year-to-look-18/ar-AA16M0pS?ocid=msedgdhp&pc=U531&cvid=390fb93ea5fd4b80bdc93b9b6b392ee7

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அப்பாவிக் கணவன்களும் அடங்காப் ‘பிடாரி’களும்!!!

அவள் 22 வயது அழகுப் பெண்.

கணவன் அழகாக இல்லை என்பதால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை.


கணவன் மீதான வெறுப்பு அதிகமாகவே குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கிவிடுகிறாள்.


கணவனாகப்பட்டவன் அடிக்கடி மாமியார் வீட்டுக்குப் போய்க் கொஞ்சியும் கெஞ்சியும் அவளின் கோபம் தணித்துத் தன் தாபத்தையும் தணிக்க முயல்கிறான்.

இவனின் தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ள இயலாத அவள், அவனுக்கு முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து, அவனின் நாக்கைப் பாதி அளவுக்குக் கடித்துத் துண்டாக்கிவிடுகிறாள்[https://tamil.oneindia.com/].


[“நல்லவேளை ‘அதை’க் கடித்துத் துண்டாக்கவில்லை. மகராசி நல்லா இருக்கணும்”னு அவளை அவன் வாழ்த்தியிருப்பானோ?].


[கடித்தவளும் கடிகொடுத்தவனும்]
துண்டிக்கப்பட்ட நுனி நாக்குடன் அந்த அப்பாவி மருத்துவமனையைத் தேடி ஓடியிருக்கிறான். என்ன ஆகுமோ!

இன்னொரு பெண். தன் கணவனை 4 ஆண்டுகளுக்கு முன் மணவிலக்கு[விவாகரத்து]ச் செய்தவள் அவள். ஒவ்வோர் ஆண்டும் விவாகரத்துப் பெற்ற அந்த நாளைத் தனக்கான சுதந்திரத் தினமாகக் கொண்டாடுகிறாளாம்[இந்தியன் எக்ஸ்பிரஸ்]. 


[தன் திருமண நாளை அவள் துக்கத் தினமாகக் கொண்டாடவும் செய்வாள்].


இவளும் ஒரு பெண்தான். அளவு கடந்த அன்பு காரணமாக மிக மிக மிக அழுத்த்த்த்தமாக அவளுக்கு அவள் கணவன் முத்தம் தருவான். இதனால் ‘மூச்சுத் திணறல்’ ஏற்பட்டுச்  சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானாள் அவள். அவளின் வாழ்க்கையே நரகமாக ஆனது. எவ்வளவோ முயன்றும் அவனைத் திருத்த முடியாததால் நீதிமன்றத்தை நாடி மணவிலக்குப் பெற்றாள்[இந்தியன் எக்ஸ்பிரஸ்].


[முத்தம் கொடுப்பதில் காட்டிய அதீத அழுத்தத்தைக் கட்டியணைப்பதில் அவன் காட்டியிருந்தால் இந்த அநீதி நிகழ்ந்திருக்காது! ஹி... ஹி... ஹி!!!]


இவையெல்லாம் கடந்த சில நாட்களில் ஊடகங்கள் வாயிலாக அறிந்த செய்திகள்.


இம்மாதிரியான ‘சில’ அடாவடிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அப்பாவி ஆண்களின் கதி என்ன?


வேறென்ன, 


எஞ்சிய வாழ்நாளைக் ‘கல்யாணம் ஆன பிரமச்சாரி’களாக் கழிப்பார்கள்.


அல்லது,


கவர்ச்சியுள்ள அழகான பெண் ரோபோக்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளுக்குச் சென்று அதுகளை வாங்கிவருவார்கள்.


மேலும்,


உள்நாட்டிலேயே பெண் ரோபோக்களை உற்பத்தி செய்வதற்குத் தொழில்சாலைகள் தொடங்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைப்பார்கள். அரசு தாமதித்தால் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.


காலப்போக்கில்,


ஒருபாலினத் திருமணங்களும் அதிகரிக்கும்.


இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? அதையெல்லாம்.....


காதல், காமம், கலவி, கள்ளப்புணர்ச்சி, களங்கம், கலக்கம், கலகம் என்று காலமெல்லாம் அலைந்து திரியும் ஆணையும் பெண்ணையும் முடிவில் அடங்க வைக்கிறானே ‘அவன்’... அவனன்றி வேறு யார் அறிவார்?!


***உண்மைச் சம்பவங்களில் கொஞ்சம் கற்பனையும் நகைச்சுவையும் கலந்து  உருவாக்கப்பட்ட பதிவு இது. வம்புதும்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், ஊர் முதலியன சேர்க்கப்படவில்லை! ஹி... ஹி... ஹி!!!