செவ்வாய், 9 மே, 2023

நேற்று ‘உள்ளாடைகள்’ நீக்கம்! நாளை... முழு நிர்வாணம்?!

‘நீட்’ தேர்வு மையங்களில் தேவையான அளவுக்குக் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது, தேவைக்கும் கூடுதலாகவே, பழுதுபடாத கட்புலனும், செவிப்புலனும் வாய்க்கப்பெற்ற கண்காணிப்பாளர்களை நியமிப்பது என்னும் நடைமுறைகளைப் பின்பற்றினாலே மாணவர்கள் விடைக் குறிப்புகள்[Bit] கையாள்வதையும், வெளியாட்களுடன் உரையாடுவதற்கான நுட்பமான சிறு கருவிகள் பயன்படுத்துவதையும்  முற்றிலுமாய்த் தடுத்துவிட முடியும்.

ஆனால், சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கத்தினர்[வடக்கே, ஆள்மாறாட்டம், சிறப்பாக எழுதிய ஒருவரின் ‘அதிக மதிப்பெண்’ பட்டியலை மந்தபுத்தி மாணவரின் பெயருக்கு மாற்றுவது போன்ற தில்லுமுல்லுகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது கவனத்தில் கொள்ளத்தக்கது] கடுமையான கெடுபிடி நடவடிக்கைகள் மூலம் மாணவர்களை நிலைகுலைய வைத்துச் சிறப்பாகத் தேர்வு எழுதவிடாமல் தடுக்கிறார்கள். இதன் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை[‘நீட்’ என்னும் பெயரில் மாநிலங்களின் உரிமையைப் பறித்தது வேறு விசயம்].

பெண்களின் துப்பட்டா நீக்கம், அணிகலன்களைத் தவிர்த்தல் போன்ற வழக்கமான கட்டுப்பாடுகள் போதா என்று மாணவிகள் ‘பிரா’ அணிந்து தேர்வு எழுதக்கூடாது என்னும்  நிபந்தனை[மாணவர்களைப் பொருத்தவரை பிரச்சினை இல்லை. அவர்கள் முழு நிர்வாணமாகத் தேர்வு எழுதவும் தயாராக இருப்பார்கள். ஹி... ஹி... ஹி!!!] விதிக்கப்பட்டுள்ளதை ஊடகச் செய்தி மூலம் அறிய இயலுகிறது. https://www.indiatoday.in/india/story/neet-girl-neet-aspirant-medical-students-forced-remove-bra-innerwear-chennai-exam-centre-2376334-2023-05-08

பெண்கள் உள்ளாடை அணிந்து தேர்வு எழுதக்கூடாது என்று நிர்ப்பந்திப்பது முன்பும் நடந்திருக்கிறது. https://tamil.news18.com/news/national/neet-ug-2022-kerala-aspirants-allegedly-asked-to-remove-bras-nta-explanation-about-controversy-773724.html

இந்நிலையில், உள்ளாடை[பிரா! ஜட்டி?] கூடாது என்பதோடு, நிர்வாணமாக அமர்ந்துதான் ‘நீட்’ எழுதுதல் வேண்டும் என்று புதியதொரு கட்டுப்பாடு விதிக்கப்படக்கூடுமோ என்று மனம் அதீதக் கற்பனையில் மூழ்குவதைத் தவிர்க்க இயலவில்லை! ஹி... ஹி... ஹி!!!

அதி புத்திசாலிகள் ஆளும் நாட்டில் இவை போன்றவை மட்டுமல்ல, இன்னும் எவையெவையெல்லாமோ நடக்கவும்கூடும் என்பது அறியத்தக்கதாகும்! 

                                              *   *   *   *   *

***‘பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியுள்ளனர். தேர்வரின் மேல் உள்ளாடையை கழட்ட நிரபந்தித்துள்ளனர்.’ https://tamil.news18.com/news/national/neet-ug-2022-kerala-aspirants-allegedly-asked-to-remove-bras-nta-explanation-about-controversy-773724.html

‘A row erupted after an incident of a Chennai exam centre allegedly banning National Eligibility cum Entrance Test (Undergraduate) or NEET aspirants from wearing bras on Sunday came to the fore.’

https://www.indiatoday.in/india/story/neet-girl-neet-aspirant-medical-students-forced-remove-bra-innerwear-chennai-exam-centre-2376334-2023-05-08

திங்கள், 8 மே, 2023

மதத்தை விமர்சித்த இஸ்லாம் மதகுரு! அடித்துக் கொன்ற இஸ்லாம் மதவெறிக் கும்பல்!!

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த சனிக் கிழமை நடந்த அரசியல் பேரணியில் மதத்தையும் கடவுளையும் விமர்சனம்[அருகிலிருந்தவர் தடுத்ததையும் பொருட்படுத்தாமல்] செய்தற்காக முஸ்லிம் அறிஞர் ஒருவர்[மௌலானா நிகர் ஆலம்] ‘தெஹ்ரிக் இ இன்சாப்’ கட்சியினரரால்[இம்ரான்கான் கட்சி] அடித்துக் கொல்லப்பட்டார்[ஏற்கனவே, கடவுளை விமர்சித்ததற்காக இருவரைக் கொன்றிருக்கிறார்கள்] என்பது இன்றையச் செய்தி.

வெறிகொண்டு பாய்ந்த அந்தக் கும்பலிடம் சிக்கிக்கொண்ட மதகுரு நூற்றுக்கும் மேற்பட்டோரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். 

அவரது கடைசி மூச்சு நிற்கும்வரை அந்தக் கும்பல் அவரை அடித்துக்கொண்டே இருந்ததாம்.

இஸ்லாமியர் ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னே மதத்தையோ கடவுளையோ விமர்சிப்பது என்பது ஒரு மாபெரும் புரட்சி. அதை நிகழ்த்திக் காட்டிய ஒரு மாவீரனைக் கொன்றுவிட்டார்கள் பாவிகள்.

அவரின் உயிரைப் பறித்ததால், இவர்கள் இனி வாழ்க்கை முழுதும் துன்பமே இல்லாமல் இன்பம் மட்டுமே அனுபவித்துச் சுகித்திருக்கபோகிறார்களா?

அவரை அழித்ததற்காக இப்போதே இவர்களுக்கான இடங்களைச் சொர்க்கபுரியில் ‘ரிசர்வ்’ செய்துவிட்டாரா கடவுள்?

இஸ்லாம் மதத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பவர்கள் இவர்களே.

இனியும் இவர்களைத் திருத்துவதற்கு எவரும் முன்வரப்போவதில்லை. இவர்களின் எண்ணிக்கை புற்றீசலாய்ப் பெருகிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு பின்னர் ஒரு நாள் அமையுமேயானால், உலகிலுள்ள அத்தனைக் கடவுள் மறுப்பாளர்களையும் மத வெறுப்பாளர்களையும் கொன்று குவித்து ஆனந்த வெறிக் கூத்தாடுவார்கள் இவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

500 பில்லியன் ஆண்டுகளில் உலகம்[பூமி] அழியவிருப்பதாக அண்மையில் அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்தக் கும்பலைப் பூண்டோடு அழித்தொழிக்காவிட்டால்.....

உலகம் அழிவதற்கு 500 பில்லியன் ஆண்டுகளெல்லாம் தேவைப்படாது; சில நூறு ஆண்டுகளிலேயே இது இல்லாமல்போகும் என்பது 100% உறுதி.

Another killing for blasphemy in Pakistan: Rallygoers kill Maulana Nigar Alam

https://tamil.oneindia.com/news/international/cleric-killed-in-pakistan-by-imran-khan-s-tehreek-e-insaf-party-members-for-blasphemy-510677.html?story=3


***blasphemy > தெய்வ நிந்தனை.