திங்கள், 26 ஜூன், 2023

‘பத்தரைமாற்று’ப் பகுத்தறிவாளர் சித்தராமையா!

கர்னாடகாவின் தலைநகரான பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவைக்கு[விதானசவுதா] வருகைபுரிந்தார் கர்னாடக மாநில முதல்வரான சித்தராமையா.

ஆலோசனைக் கூட்டம் முடிந்து அவருடைய அலுவலகத்திற்குச் சென்றபோது, அதன் தென்புறக் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்ட அவர், அதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் விசாரித்தார்.

வாஸ்து சரியில்லை என்று அறியப்பட்டு அது மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

கடும் அதிர்ச்சிக்குள்ளான முதல்வர், “இருப்பிடத்திற்கு நல்ல வெளிச்சமும் காற்றும்தான் மிக அவசியமானவை[வாஸ்து பார்க்கத் தேவையில்லை]. நல்ல மனமும், நல்ல எண்ணங்களும்[மக்கள் மீதான அக்கறை போன்றவை] இருந்தால் நாம் வாழும் குடியிருப்பு முதலான எல்லாமே நல்லவையாகவே அமையும்” என்று அறிவுறுத்தினார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதை வெறும் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல், அறையின் தென்புறக் அகதவைத் திறக்கச் சொல்லி, அந்த வழியாகவே அறைக்குள் நுழைந்தார் கர்னாடகா முதல்வர் சித்தராமையா என்பது பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைப் பெருமிதப்படவைக்கும் அரிய நிகழ்வாகும்[தினகரன், 25.06.2923]ஆகும்.

இவரின் இந்த நடவடிக்கையை நாடெங்குமுள்ள தலைவர்களில் எவரும் பாராட்டியதாகத் தெரியவில்லை.

மக்களில் பெரும்பாலோர் மட்டுமல்ல, இங்குள்ள தலைவர்களில் மிக மிக மிகப் பெரும்பாலோர் மூடநம்பிக்கைகளில் ஊறி வளர்ந்தவர்கள்; மூடநம்பிக்கைகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் என்பதே இதற்கான காரணம்.

கர்னாடக முதல்வர் பதவிக்காக நடந்த போட்டியில், தீவிரக் கடவுள் பக்தரான சிவக்குமார்[துணை முதல்வர்] தவிர்க்கப்பட்டு,

100% பகுத்தறிவாளரான சித்தராமையா முதல்வர் ஆனது வரவேற்கத்தக்கது.

பகுத்தறிவாளரான இவரின் மக்கள் பணி நாளும் சிறந்திட வேண்டும் என்பது நம் மிகு விருப்பம்!

தொடர்புள்ள இடுகைகள்:


ஞாயிறு, 25 ஜூன், 2023

‘த.நா.’ வரும் ‘வடக்கச்சி’களின் ‘தொழில்’ சுத்தம்! வரவேற்கப்படுவார்களா?!

வட மாநிலக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சிலர்[முழு விவரம் சேகரித்தால் அவர்கள் பலராகவும் இருத்தல்கூடும்] சென்னைக்கு வேலை தேடி வருவது போல வந்து, ‘விபச்சாரம்’ செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் இந்தத் தொழிலுக்கு, ‘குடும்ப விபச்சாரம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் நம் ஊடகக்காரர்கள்.

வட நாட்டுப் பெண்கள் செய்யும் இந்தத் தொழிலை, ‘விபச்சாரம்’ என்பதற்கு மாறாக ‘பாலியல் தொண்டு’ என்று சொல்லத்தோன்றுகிறது.

இவர்கள், ஒரு நாளில் ஒருவருக்கு மட்டுமே அனுமதியளிக்கிறார்கள்[அந்த ஒரு நாளில் ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்னும் ஒழுக்க நெறி பின்பற்றப்படுகிறது! ஹி... ஹி... ஹி!!!].

கட்டணம் ‘வெறும்’ ஐயாயிரம்[24 மணி நேரத்துக்கு] ரூபாய் மட்டுமே.

வாடிக்கையாளருக்கு அவர்களே காலைச் சிற்றுண்டி கொடுக்கிறார்கள்.

பகலில், பிரியாணியுடன் சுவையான விருந்து படைத்து, ஒரு முழுநாளுக்கான  உல்லாசத்துக்கு அவரைத் தயார்ப்படுத்துகிறார்கள்.

எனவே, இத்தனைக் கௌரவமாகத் தொழில் செய்யும் இவர்களைப் ‘பாலியல் சேவகிகள்’ என்பதே ஏற்புடைத்தாகும்.


இவர்கள், சம்பாதித்த பணத்தை, அவ்வப்போது தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்புகிறார்கள்.


இடையிடையே, சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு[தமிழ்நாடு முழுதும் பின்னர் விரிவுபடுத்தப்படக்கூடும்] வந்து தொழிலைத் தொடர்கிறார்கள்.


காவல்துறையால் கைது செய்யப்பட்டுத் தண்டனை அனுபவித்தாலும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், இவர்கள் பாலியல் சேவையைத் தொடர்ந்து செய்வது கனிக்கத்தக்கது[பாராட்டத்தக்கது?]


தொழில் தேடி இங்கு[தமிழ்நாடு] வந்த வட நாட்டவரை, ‘வடக்கன்ஸ்’ என்றார்கள் தமிழர்கள். அவர்களால் நம்மவர்களுக்கான வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகச் சொல்லி அவர்களைச் சாடவும் செய்தார்கள்; விரட்டியடிக்கவும் முனைந்தார்கள்.


அரசு அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. 


வடக்கிலிருந்து வரும் இந்த ‘வடக்கச்சி’களால் தங்களின் பாரம்பரியத் தொழில் பாதிக்கப்படும் என்றெண்ணி இங்குள்ள பாலியல் தொழில்காரிகள் அஞ்சுவார்கள் என்பதில் சந்தேகமில்லை; ஒன்றிணைந்து, தெருவில் இறங்கி, “இங்கு வராதீர் வடக்கச்சிகளே! வந்தால் விரட்டியடிப்போம்” என்று முழக்கமிட்டுப் போராடும் நாளும் வரக்கூடும்.


வடக்கிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு[வடக்கன்ஸ்]த் தகுந்த பாதுகாப்பளித்த தமிழ்நாடு அரசு, ‘தொழில் சுத்தம்’ காக்கும் ‘வடக்கச்சி’களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்!


வருகைதரும் ‘வடக்கச்சி’களை இரு கரம் குவித்து வவேற்போம்!


ஹி...ஹி... ஹி!!!

* * * * *

https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5-thousand-you-will-be-treated-with-a-party-and-a-family-prostitution-again-in-chennai-992630