வியாழன், 5 அக்டோபர், 2023

இந்தக் காட்டுமிராண்டிகளை[சு.சாமி உட்பட]க் கடலில் தள்ளுவதா, நாடு கடத்துவதா?!

சுமார் 1 பில்லியன்[100 கோடி] ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோற்றம் பெற்றதாக அறிவியலறிஞர்கள் சொல்கிறார்கள். 

வால் இல்லாத மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்று அறிவியல் துறை கணித்திருக்கிறது.

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன் தோன்றினான் என்றும் அது அனுமானித்திருக்கிறது [விக்கிப்பீடிய

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் ஒரு திடீர் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் உருவானது. மக்கள்தொகை பெருகியது['இந்து தமிழ்'].

ஆக, மனிதனின் சிந்திக்கும் அறிவு[ஆறாம் அறிவு] வளர ஆரம்பித்ததே 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் என்று அறிவியலாளர்கள் உறுதி செய்திருக்க.....

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும்[ஸ்ரீலங்கா] இடையில் அமைந்துள்ள மணல் திட்டை, ராமன்[கடவுள் அவதாரம்] கட்டிய பாலம் என்றும், அது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் ராமப் பக்தப் புளுகர்கள் பரப்புரை செய்துவரும் நிலையில்,[இதனால் சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுக் கைவிடப்பட்டது] அவர்களில் ஒருவரான[அசோக் பாண்டே] என்பவர்.....

பாலத்தை இரு கண்களாலும் பார்த்துப் பார்த்துக் கழிபேருவகை கொள்ளும் வகையில் மிக உயரமான சுவர் எழுப்ப வேண்டும் என்று இந்திய உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்[https://ibctamil.com/article/rama-bridge-judgment-of-supreme-court-of-india-1696393365].....

இராமர் பாலத்தைச் தேசியப் புராதானச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டப் பலர் வழக்குத் தொடுத்திருந்தனர் என்பதும் அறியத்தக்கது.

மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், “கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் பணியா?” என்று கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்தார்கள் என்பது [மகிழ்வூட்டும்]செய்தி.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, தெய்வீகப் பிறவியான ராமன் என்பவன் இந்த நாட்டை ஆண்டான்; பாலம் கட்டினான் என்பது மக்களை மூடர்கள் ஆக்குவதோடு நீதியரசர்களின் நேரத்தை விரயம் ஆக்குவதும் ஆகும்.

நேரத்தை வீணடித்ததற்காக, அந்த ஆறறிவு முட்டாளுக்கு அபராதம் விதித்திருக்கலாம்.

அதைவிடவும்.....

மனிதர்களைக் காட்டுமிராண்டிகளாக ஆக்க முயலும் இவரையும், இவரைப் போன்ற ஆதி மனிதன்களை, இவர்கள் ராமன் பாலம் இருப்பதாகச் சொல்லும் சேது சமுத்திரத்தில் மூழ்கடிக்கும்படியோ, அது சட்ட விதிப்படி சாத்தியம் இல்லையென்றால், குறைந்த பட்சம் நாடு கடத்தும்படியோ ஆணை பிறப்பித்திருக்கலாம்.

அது நம் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு உறுதுணையாக அமைந்திருக்அமைந்திருக்கும்.

புதன், 4 அக்டோபர், 2023

உத்தமர் மோடியும் ‘திமுக’வின் ஊழல் அறங்காவலர் குழுவும்!!!

தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.....

‘பாஜக’ வேட்பாளர்களை ஆதரித்துத் தெலங்கானாவில் பரப்புரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, தன் உரையினூடே, ‘திமுக’ அரசைச் சாடும் வகையில், “தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்” என்று பேசிக் கொந்தளித்தார் என்பது செய்தி.

“கோயில் சொத்துகளையும் அவற்றின் மூலம் வரும் வருமானங்களையும் திமுகவினர் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றும் குமுறியிருக்கிறார்.

‘திமுக’ அரசு புரியும் இந்த அட்டூழியங்களைத் தடுத்து, கோயில்களையும், பூஜை செய்யும் அர்ச்சகர்களையும், குடிகொண்டிருக்கும் கடவுள்களையும் காப்பாற்ற ஏற்ற வழிகள் உள்ளன என்பதைக் கொஞ்சம் சிந்தித்திருந்தாலே மோடி புரிந்துகொண்டிருப்பார்.

அசுர பலத்துடன் ‘பாரத்’ஐப் பரிபாலனம் செய்யும் அவர் நினைத்தால், சனாதனத்தையும் சனாதனிகளையும் அழித்தொழிக்கும் முயற்சியில் ‘திமுக’ ஈடுபட்டிருப்பதை மட்டுமே காரணமாக்கி, அந்த அரசைக் கவிழ்த்து, புனிதரும், பரிசுத்த சனாதனவாதியுமான ஆளுநர் ரவியிடம் மாநில நிர்வாகத்தை ஒப்படைப்பதன் மூலம், கோயில் சொத்துகளுக்கும் வருமானங்களுக்கும் பழுது நேராமல் பாதுகாக்கலாம்.

அதைச் செய்யவிடாமல், மனசாட்சி உள்மனதை உறுத்துமேயானால், கோயில்களை நிர்வகிக்கும் அறங்காவலர்[தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது] குழுவைக் கலைத்துவிட்டு, ஒன்றிய அரசால் அமைக்கப்படும் உத்தமர்கள் அடங்கிய குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது அவர் எதிர்பார்க்கும் பயனை நல்கும் என்பது உறுதி. ஒரே ஒரு ஆணையின் மூலம் இதைச் சாதிக்கலாம்; ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்னும் வரிசையில், ‘ஒரே நாடு ஒரே கோயில் நிர்வாகம்’ என்பதும் அடங்கிவிடும்.

வாயில் நுழையாத இந்திப் பெயரில் அமைக்கப்படும் கோயில் நிர்வாகக் குழுவில்[அறங்காவலர் குழு போன்றது] அயோக்கியர்கள் இடம் பெறுதலைத் தவிர்ப்பது மிக முக்கியம்.

யோக்கியர்களுக்கான ஒரு பட்டியலைத் தயாரித்து, வேத மந்திரங்கள் சொல்லி, சம்பந்தப்பட்ட கோயிலின் கடவுளை வழிபட்டுக் குலுக்கல்[சீட்டுக் குலுக்குதல்] மூலம் தேவையான குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம்.

மேதகு மோடியும் மாண்புமிகு அமித்ஷும் இணைந்து[நம் அண்ணாமலையையும் சேர்த்துக்கொள்ளலாம்] சிந்தித்தால் மேற்கண்டவற்றைக் காட்டிலும் சீரிய சிறந்த வழிகள் தென்படும் என்பது நிச்சயம்.

நேர்மை தவறாத நம் பிரதமர் அவர்கள் விரைந்து செயல்பட்டு, ஊழல் திமுகவிடமிருந்து, மிகக் குறுகிய கால அவகாசத்தில் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்தல் வேண்டும் என்பது நம் ஆசை; ஆதங்கமும்கூட!

* * * * *

https://tamil.oneindia.com/news/hyderabad/temples-in-tamil-nadu-encroachment-by-the-state-government-pm-modi-says-at-telangana-rally-544765.html?story=1