வெள்ளி, 20 அக்டோபர், 2023

பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சியும் ஆறறிவு வறட்சியும்!!

கோயில் கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்லலாம் என்னும் பாரம்பரியப் பழக்கத்தை மாற்றி, காலங்காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களும், பட்டியலின மக்களும் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய வழிவகுத்தது பங்காரு அடிகளார் செய்த பெரும் புரட்சியாகும்[கல்வித்துறையில் அவர் ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடத்தக்கது].

கடவுளை நம்புவதும் வழிபடுவதும் மூடநம்பிக்கைகள்தான் என்றாலும், ஓர் ஆன்மிகராக, மேற்கண்ட வகையில் அவர் ஆற்றிய பணி பிரமிக்கத்தக்கது என்பதால்,  அவற்றைப்[வரையறைக்குட்பட்டவை] பெரிதுபடுத்தத் தேவையில்லை.

ஆயினும், அவர் பகுத்தறிவுக்குப் பொருந்தாத, மேலும் பல, தீங்கு பயக்கும் மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழ்ந்தார் என்பதும், அவற்றைப் பொதுமக்களிடையே பரப்பினார் என்பதும் கண்டிக்கத்தக்கக் குற்றங்களாகும்.

இவற்றிற்குப் போதிய ஆதாரங்களாக அமைந்தவை அவருடைய, ‘ஓம் சக்தி’ என்னும் ‘யூடியூப்’ சேனலில்[சேனல்>தமிழ்?] பதிவாகியுள்ள சில தகவல்கள்.

ஒருநாள் பங்காரு அடிகளார் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவரின் உடம்பில் பாம்பு ஊர்வதை உணர்ந்தார். கண் விழித்தபோது, அந்தப் பாம்பு அவரின் உடம்பிலிருந்து இறங்கிச் சென்றதைக் கண்டார். அவரைப் பெற்ற அண்னை அஞ்சி அலற, அக்கம்பக்கத்தார் அங்கு கூடினார்கள். அவர்களின் கண்முன்னே அது மாயமாய் மறைந்தது.


பலரும் பார்த்துக்கொண்டிருக்கையில் பாம்பு மாயமாய் மறைந்தது என்பது நம்பவே இயலாத கதை.

ஆதிபராசக்தியே பாம்பு வடிவில் வந்து அவரை ஆட்கொண்டார் என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுகிறது.


இதைவிடவும் கீழான இன்னொரு கற்பனைக் கதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


‘பங்காரு அடிகளாருக்கு தனலட்சுமி என்று ஒரு தங்கை இருந்தார். அவர் மீது பங்காரு அடிகளாருக்கு கொள்ளைப் பாசம். திடீரென ஒரு நாள் தங்கை இறந்தார். 


தண்ணீர்கூடக் குடிக்காமல் மணிக்கணக்கில் தங்கை புதைக்கப்பட்ட இடத்திலேயே அழுதுகொண்டிருந்தார் பங்காரு. அங்கு வந்த ஒரு பெண் அவரின் தாகம் தணிக்கத் தண்ணீர் கொடுத்தார்.


தாகத்தால் தவித்த தனக்குத் தண்ணீர் கொடுத்த பெண் யார் என்னும் கேள்வி பங்காரு மனதில் எழுந்தது. அந்தக் கேள்வியோடு அவர் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாருமில்லை. ஆதிபராசக்தி, உமாமகேஸ்வரி உருவத்தில் வந்து தண்ணீர் கொடுத்தார் என்பதை உணர்ந்து அடிகளார் மெய்சிலிர்த்தார்’ என்று முடிகிறது கதை.


ஆன்மிகத் துறையில் பங்காரு செய்த புரட்சி அவரை ‘அடிகளார்’ ஆக்கியது. படு மூடத்தனங்களை மக்களிடையை பரப்பியதால் ‘அடிகளார்’ விடுபட, அவர் மீண்டும் வெறும் ‘பங்காரு’ ஆனார் என்று சொல்ல நினைக்கும்போது மனம் வருந்தவே செய்கிறது!


ஆயினும், அவரின் உயிரிழப்பு தமிழர்களுக்கான குறிப்பிடத்தக்க இழப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


* * * * *

https://tamil.oneindia.com/news/chennai/how-a-snake-changed-bangaru-adigalar-route-in-spritual-549751.html


வியாழன், 19 அக்டோபர், 2023

ஏனுங்க, அதென்னங்க ‘அல்லேலூயா’?[பொழுதுபோக்கு]

கிறித்தவர்களும் இஸ்லாமியரும் பிரார்த்தனையை முடிக்கும்போது, “ஆமென்”[கிறித்தவர்] என்றும், “ஆமீன்”[இஸ்லாமியர்] என்றும் பயபக்தியுடன் சொல்லுகிறார்கள்.

இவற்றிற்கு, ‘அப்படியே ஆகட்டும்’ என்று பொருள்[கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களில் இறுதிச் சொல்லாகப் பாவிக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் மகிழ்ச்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது].

‘ஆமென்’ மட்டுமல்லாமல் ‘அல்லேலூயா’ என்னும் சொல், கிறித்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக.....

கீழ்வருவது போன்ற பாடல்களில் இச்சொல் இடம்பெற்றுள்ளது.

அல்லேலூயா அல்லேலூயா

நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம்பிதாவுக்கு அல்லேலூயா

ஆவியானவர்க்கு அல்லேலூயா

தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களிகூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தமே

தோல்வியில்லை துதிகளினாலே
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே

இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா
ஓ துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே

பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே                           

https://tamilchristiansongs.in/tamil/lyrics/halleluiah-halleluiah-nam-yesuvukku/

                                *   *   *   *   *

‘அல்லேலூயா’ என்னும் இச்சொல் நம்மை வெகுவாகக் கவர்ந்தது; இது உணர்த்தும் பொருளை அறிந்திட வேண்டும் என்னும் ஆர்வமும் உண்டாயிற்று.


வலைதளங்களில் தேடியதில் இதற்கான விளக்கம் கிடைத்தது.

//அல்லேலூயா என்பது, அல்லேலு யா(Allelu iah) என்னும் இரண்டு சொற்களின் இணைப்பாகும்.

இது அரேபியச் சொல். துதி, அல்லது, மகிமை உண்டாவதாக என்று பொருள்.

அடுத்த எழுத்து ‘யா’ கர்த்தரைக் குறிக்கும். https://www.facebook.com/Dailymyprayer/posts/1719406688301478/


//அல்லேலூயா, அல்லேலூயா கர்த்தாவே உமக்கு

அல்லேலூயா//

-இது இன்னொரு பாடலின் தொடக்க வரி[https://dhyanamalar.org/hymns-spiritual-songs/]

‘அல்லேலூயா’வின் பொருள் ‘மகிமை உண்டாகட்டும்’[ஏற்புடைய தெளிவான விளக்கம் அல்ல இது. பிறமொழிச் சொல் என்பதாலோ?] என்கிறார்கள்.

கர்த்தரைத் துதிபாடுவதும், தமக்குள்ள குறைகளைத் தீர்க்கும்படி அவரை வேண்டுவதும் வரவேற்கத்தக்கதே.

எதற்கு இந்த ‘அல்லேலூயா’? “ஏசுவுக்கும் பிதாவுக்கும் மகிமை உண்டாகட்டும்” என்று அற்ப மனிதர்கள் பாடுவது சரியா?

சரியோ தவறோ, ‘அல்லேலூயா’ பெரிதும் மனம் கவரும் சொல்லாக இருப்பதால்.....

“முக்கண்ணனே போற்றி! தும்பிக்கை நாயகனே போற்றி! கண்ணபிரானே போற்றி! ஏழுமலையானே போற்றி!” என்று துதிபாடும் இந்துமத அன்பர்கள்[இஸ்லாமியர்? ஊஹூம்...], முடிவில், “அல்லேலூயா” சொல்லலாம்! கிறித்தவர்கள் பெறும் பலன்களை இவர்களும் பெறலாம்!

ஹி... ஹி... ஹி!!!