பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
புதன், 13 டிசம்பர், 2023
இல்லாத கடவுளும் மூளை மழுங்கிய பொல்லாத மனிதர்களும்!!!
செவ்வாய், 12 டிசம்பர், 2023
‘கடவுளை உணர்தல் கதை’... பழசும் புதுசும்!!!
கடவுளின் ‘இருப்பை’ உணரச் செய்யக் கற்பிக்கப்பட்ட ஒரு கதை ஆன்மிக உலகில் காலங்காலமாய்ப் பரப்புரை செய்யப்படுகிறது.
அதற்கு மாற்றாக, மாறுபட்ட ‘முடிவு’டன் புதிய கதை ஒன்றைக் கற்பனை செய்துள்ளேன்.
பழசின் இணைப்பாகப் புதுசும் இங்கு இடம்பெற்றுள்ளது.
இரண்டில் சிறந்தது எது என்று முடிவு செய்வது தங்களின் மனப் பக்குவத்தைப் பொருத்தது.
வாசியுங்கள்!
* * * * *
ஒரு நாத்திகன் கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு துறவியைச் சந்தித்தான்; “கடவுளை உம்மால் காட்டமுடியுமா?” என்றான்.
“முடியும்” என்ற துறவி, சற்றும் எதிர்பாராத வகையில் நாத்திகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
“ஐயோ அம்மா” என்று அலறினான் நாத்திகன்.
“ஏன் அலறினாய்?” என்றார் துறவி.
“வலித்தது” என்றான் நாத்திகன்.
“வலியா? அதை எனக்குக் காட்டு.” -துறவி.
வேதனையிலும் சிரித்த நாத்திகன், “வலியை எப்படிக் காட்ட முடியும்?” என்று கேட்டான்.
“காட்ட முடியாது. ஆனாலும், நீ வலியை உணர்ந்தாய் அல்லவா, அதுபோல், முயன்றால் கடவுள் இருப்பதை உணர முடியும்” என்றார் துறவி.
நாத்திகன் வாயடைத்து நின்றான்.
முடிந்த கதை தொடர்கிறது: