வெள்ளி, 22 டிசம்பர், 2023

செத்துப் பிழைத்து ஞானி ஆகி ஈசனும் ஆன ரமண மகரிஷி!!!

15 வயதில் படிப்பு வராமல், ஊரைவிட்டு[திருச்சுழி] வெளியேறி, திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்தவர் ரமணன்.

பக்தர்களின் தயவில் 69 வயதுவரை வாழ்ந்தவர் இவர்.

திடீரென ஒரு நாள் ஆவேசம் அடைந்து[?] செத்துப்போனாராம்.

செத்தவர் ஈசனாக மாறி, மனிதனாகப் பிறந்தாராம். ஞானியாகப் பலருக்கும் ஞானம் போதித்து வாழ்ந்தாராம்[இறந்து, பின்னர் ஞான நிலையை எய்தியதாகவும், தனக்கு உடல் கிடையாது என்றும் இவரே கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது[ரமண மகரிஷிக்கு தனது 16 வது வயதில், மரண உணர்வு ஏற்பட்டது. மரணத்தில் மரணிப்பது இந்த உடல்தான் என்றால், நான் யார் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இந்த தேடலே அவரை மகான் ஆக்கி, தெய்வ நிலைக்கும் கூட்டிச்சென்றது. -https://tamil.samayam.com/religion/hinduism/ramana-maharshi-quotes-mantra-for-attain-moksha/articleshow/99521548.cms?story=5].

ஆடை துறந்து, கோவணத்துடன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்; 99% அம்மணக் கோலத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ பக்தக்கோடிகளால் ‘ஞானி ஆக்கப்பட்டார்[ஞானம் என்றால் என்னவென்று விளங்கச் சொன்னவர் இவர் உட்பட எவரும் இல்லை].

உடம்பு இல்லாமல் கடவுளின் அவதாரமாக வாழ்ந்த இந்த மகானைப் புற்றுநோய்[கையில்]  தாக்கியது[ஞானியாக வாழ்ந்து தெய்வமாக ஆனவரைப் புற்றுநோய் தாக்கியது எப்படி?]. நான்கு முறை அறுவைச் சிகிச்சை செய்தும் குணமாகவில்லை.

1950இல் ஈஸ்வரனுடன் ஐக்கியமானார் இவர்[இன்றளவும் புத்தி கெட்ட தமிழரால் போற்றப்படும் அவதாரங்கள் பட்டியலில் இவருக்கு நிரந்தர இடமுண்டு].

இப்படியான இட்டுக்கட்டிய கதைகளுக்குத் தமிழில் பஞ்சமே இல்லை.

இன்றளவும் இம்மாதிரியான கதைகளைச் சொல்லிச் சொல்லியே பிழைப்பு நடத்துகிறது ஓர் அதி புத்திசாலிக் கூட்டம்!


வியாழன், 21 டிசம்பர், 2023

வாழ்க இந்தி வெறியன் நிதிஷ் குமார்[பீகார் முதல்வன்]! வெல்க தமிழ் வெறியர்கள்!!

‘பீகார் முதல்வரு[னு]ம் ஜேடியூ தலைவரு[னு]மான நிதிஷ் குமார் 'இந்தி மொழிதான் இந்தியாவின் தேசிய மொழி' என்று வெறித்தனமாய்க் கூச்சலிடுவது தொடர் கதை ஆகிவருகிறது’ என்று வட இந்திய ஊடகங்களே செய்தி வெளியிடுவது கூர்ந்து கவனிக்கத்தக்கது[https://tamil.oneindia.com/].

“நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயனோடு ஆங்கிலமும் போய்விட்டது”[ஆங்கிலத்தால் நாம் பெற்ற... பெறும் பயன்கள் பல. இந்தியால் பெறுவது?] என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த ஆளுக்கு, இந்தியை இந்தியர் அனைவரும் ஏற்றுக்கொண்டால், இந்திக்காரர்களே இந்தியாவை ஆளலாம் என்பதில் அள்ளக் குறையாத கொள்ளை ஆசை.

இந்த நபரின் தாய்மொழிப் பற்று போற்றத்தக்கது. மொழி வெறியுடன் செயல்பட்டால்தான், இந்தி இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாகத் திணிக்கப்பட்டு, நான்கைந்து மாநிலங்களின்[மட்டும்] பெரும்பான்மையினராக இருக்கும் ‘இந்தி’யரான  இவர்களே இந்தியாவை எப்போதும் ஆளலாம் என்பது இந்த வெறியனின்[இந்த நபர் விவேகியல்ல; வெறியன். மரியாதை தேவையில்லை] நப்பாசை... பேராசையும்கூட.

ஆளுபவர்களுக்குத் தேவையான அறிவாற்றலோ, உயர் பண்பாடோ, மாற்றாரையும் அரவணைத்துச் செல்லும் மனப் பக்குவமோ இல்லாத இந்தி ஆதிக்க வெறியர்களிடமிருந்து நம்மை[சூடுசொரணையற்ற பிற மொழிக்காரர்கள் நமக்கு ஒரு பொருட்டல்ல]த் தற்காத்துக்கொள்வது காலத்தின் கட்டாயம்.

இவர்களை எதிர்த்துப் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.

போராடுவதற்கு, தமிழர்கள் மொழிப் பற்றும் இனப் பற்றும் உள்ளவர்களாக இருந்தால் போதாது; மொழி & இன வெறியர்களாகவும் ஆதல் வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள தமிழர் கட்சித் தலைவர்கள்[இந்தி வெறியன் குமுறிக் கொந்தளித்தபோது மௌனம் காத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட] இதைக் கவனத்தில்கொண்டு ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.