திங்கள், 8 ஜனவரி, 2024

அப்பா... ஐயப்பா, தமிழனுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லப்பா!!!

//“சபரிமலைக்கு எதுக்கு வர்றீங்க” என்று கேட்டுத் தாக்கிய கேரள போலீஸ்! எரிமேலியில் விரதத்தை முடிக்கும் பக்தர்கள்// -இப்படியொரு மனதை வாட்டி வதைக்கும் செய்தி[https://tamil.oneindia.com-06.01.2024] ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

‘காக்கி உடையுடுத்த மலையாளிகள், தமிழ்நாட்டு ஐயப்பப் பக்தர்களை மலை ஏறவிடாமல் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்திருப்பதும், அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடத்தில் அடைத்து வைத்திருப்பதுமான அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறான்கள்’ என்பது தமிழ்நாட்டு அய்யப்பப் பக்தன்கள் ஊடகங்களிடம் பகிர்ந்த அவலச் செய்தி.

வரலாறு காணாத கூட்ட நெரிசலில் சிக்கிச் சிறுமி உள்பட சில பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்த தயானந்த் என்பவர் 18 படியில் ஏற முயன்றபோது, அவரை அவன்கள்[கேரளப் போலீஸ்] கடுமையாகத் தாக்கியிருக்கிறான்கள்.

தாக்குதல் நடத்துவது மட்டுமல்ல, “சபரிமலைக்கு எதற்காக வருகிறீர்கள், உங்கள் ஊருக்கு ஓடுங்கள்” என்று விரட்டுகிறான்களாம் கடவுள் தேசத்துக் காவல்காரன்கள்.

இத்தனை அவமானங்களுக்கு உள்ளான பிறகும் இந்த மந்தப் புத்தித் தமிழ்நாட்டுப் பித்தன்கள் சாரி சாரியாக, அணி அணியாக, கூட்டம் கூட்டமாகச் சபரிமலைக்குப் போவதை நிறுத்தவில்லை.

மலையாளப் போலீஸ்காரன்கள், இன்றுவரை வாயால்தான் இவன்களைத் திட்டியிருக்கிறான்கள்; தடியால்தான்[லத்தி] தாக்கியிருக்கிறான்கள். இனியும் இவன்கள் சபரிமலை செல்வதை நிறுத்தாவிட்டால்.....

பொய்யப்பனான[ஆண் சாமிகளான சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த ஆபாசச் சாமி ஐயப்பன்] இந்த ஐயப்பனைப் பூஜிக்கப்போகும் தமிழ்நாட்டானுக்கு எப்படியெல்லாம் அவன்கள் ‘அசிங்க பூஜை’ நடத்துவான்கள் என்பது அந்தச் சபரிமலைச் சாமிக்கு மட்டுமே தெரியும்.

அந்தச் சாமியின் திருவடி தொழுது நாம் வேண்டிக்கொள்வது:

“சூடு, சொரணை, மானம், மரியாதை எல்லாம் இல்லாத எங்கள் நாட்டு[தமிழ்நாடு]ப் பக்தன்கள், இனியேனும் உன் நாட்டுப் போலீஸ்காரன்களிடம் அடி உதைபட்டு அவமானப்படாதிருக்க, இவன்களுக்கு[த.நா.ஐ.பக்தன்கள்]க் கொஞ்சம் நல்ல புத்தியைக் கொடப்பா”

“சாமியேஏஏஏஏஏஏஏஏஏஏய்..... சரணம் ஐயப்பா”!!!

* * * * *

https://tamil.oneindia.com/news/india/sabarimala-devottees-finished-their-fasting-at-erimeli-instead-of-treking-572375.html?story=1

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

பாவி மருமகளும் அப்பாவி மாமியார்க் கிழவியும்![நெஞ்சைச் சுட்ட உண்மைக் கதை]

தன் மருமகளுடனான சண்டையில் வழக்கம்போல் தோல்வியைத் தழுவிய நிலையில், “எனக்குச் சாவு எப்ப வருமோ?” என்று விரக்தியுடன் ‘அருக்காணி’க் கிழவி தொணதொணத்தபோது, “சாவு நம் வீடு தேடி வந்து கதவைத் தட்டாது. நாமதான் சாவைத் தேடிக்கணும்” என்று சொல்லி மருமகள் முறைத்துவிட்டுப் போனது கிழவியை வெகுவாக நோகடித்துவிட்டது.

“என்னைச் செத்துத் தொலைன்னு சொல்லிட்டாளே” என்று நாள் முழுக்கப் புலம்பித் தீர்த்தாள் கிழவி.  

“ஏதோ ஒரு கோபத்தில் சொல்லிட்டா போல. அப்புறமா அவ வருத்தப்பட்டிருப்பா” என்று ஒரு வழியாய் மனம் தேறி உறங்குவதற்குப் பாய் விரித்தபோது மருமகள் உச்சத் தொனியில் தன் புருஷன்காரனிடம் சொல்வது கேட்டது. “எலித் தொல்லை தாங்க முடியல. மறக்காம நாளைக்கு ‘எலி மருந்து’ வாங்கிட்டு வாங்க.”

இப்போது கிழவி மனதில் வேறொரு சந்தேகம் முளைவிட்டது. “வூட்ல எலி நடமாட்டமே இல்லியே. எலி மருந்து மனுசரைக் கொல்லுற விஷமாச்சே. அதை எதுக்கு இவ வாங்கியாரச் சொன்னா?”

எத்தனை யோசித்தும் விடை கிடைக்கவில்லை. ஜாமக்கோழி கூவும் நேரத்தில், “நான் முக்காக் குருடி. எலி வர்றதும் போறதும் எனக்கு எப்படித் தெரியும்? அவ பார்த்திருப்பாளாக்கும்” என்று சமாதானமாகி உறங்கிப் போனாள் அருக்காணிக் கிழவி.

அடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் ஒரு சந்தேகம் கிழவியின் மனதைக் குடையலாயிற்று. “என் மவன் பொண்டாட்டி சொல்லைத் தட்டாதவனாச்சே, எலி மருந்து வாங்கியாந்திருப்பானா?”

மருமகள் இல்லாத நேரத்தில் மகனிடம் கேட்க நினைத்தாள் கிழவி. அவன் வெளியூர் போயிருந்ததால் அது சாத்தியப்படவில்லை.

அன்று மாலை அவன் வீடு திரும்பினான். அவன் வந்ததும் வராததுமாக, மருமகள் உரத்த குரலில் சொல்வது கேட்டது. “வெச்ச மருந்து அப்படியே இருக்குது. அது சாகல.”

அதிர்ச்சிகுள்ளானாள் கிழவி. “சாகலைன்னு பொத்தாம்பொதுவாச் சொல்றாளே, எலியைச் சொல்றாளா, என்னைச் சொல்றாளா?” -இப்படியான புதியதொரு சந்தேகம் கிழவியை ஆட்டிப்படைக்கலாயிற்று. எதிர்ப்படுவோரிடம் எல்லாம் தன் சந்தேகத்தைச் சொல்லிப் பதிலை எதிர்பார்த்தாள். 

யாரும் பதில் சொல்லவில்லை; சிரித்து மழுப்பிவிட்டுப் போனார்கள்.

அதற்கப்புறமும்,

“சாகலயேன்னு சொல்லுறாளே மருமவ, எலியையா என்னையா?” என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுப் புலம்புவது கிழவிக்கு வழக்கமாகிப்போனது.