புதன், 6 மார்ச், 2024

ஜக்கியின் சிவராத்திரிக் கும்மாளமும் நிலை மயங்கிய நீதியரசர்களும்!!!

கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வரும் 8ஆம் தேதி மாலை 6 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு கொண்டாடப்பட உள்ளது[இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப்தன்கர் கலந்து கொள்ள இருக்கிறார்>பின்னணியில் மோடி] என்பது செய்தி.

கோவை செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் என்பவர், ஈஷா யோகா மையத்தில் உருவாகிப் பரவும் ஒலி மாசு காரணமாக யானைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஈஷா யோகா மையத்தினர் சுத்திகரிக்கப்படாத, கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் விடுவதால் கால்நடைகளும், மக்களும் பாதிக்கப்படுவதாகவும் வழக்குத் தொடர்ந்தார்.

சிவராத்திரி நாட்களில் தூங்காமல் இருப்பது அவர்கள் உரிமை. ஆனால், யானைகள் ஏன் தூங்காமல் இருக்க வேண்டும் என்றும் வில்சன் வாதிட்டார்.

இவ்வழக்குத் தொடர்பாக நீதிபதிகள்[அமர்வு] பிறப்பித்த உத்தரவு.....

//ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவுநீர் அருகேயுள்ள நிலங்களில் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படுகிறதா என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த மனு குறித்து ஈஷா யோகா மையமும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும்//

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இங்கே நம்மைக் குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்துவது.....

//விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது// என்பதுதான்.

ஜக்கியின் சிவராத்திரிக் கும்மாளம் நடைபெறவிருப்பது வரும் 8ஆம் தேதி[08.03.2024] அதன் விளைவாக[மனுதாரரின் புகாரின்படி] யானைகள் பாதிக்கப்படுவதைக் கனம் நீதியரசர்கள் கண்டுகொள்ளாதது ஏன்?

கடவுளின் இருப்பே நிரூபிக்கப்படாத நிலையில் ‘ஈசனுடன் ஓர் இரவு’[கீழேயுள்ள படத்தைக் கவனியுங்கள்] என்று கூசாமல் பொய் சொல்லும் கடவுள்களின் குருவான[சத்குரு!] இந்தக் கோடி கோடி கோடீஸ்வரச் சாமியார் மீதான பக்தி காரணமோ?


                                
                                                 *   *   *   *   *

செவ்வாய், 5 மார்ச், 2024

வைகுண்டர் விழாவும் வாங்கிக் கட்டிக்கொண்ட ‘சனாதனக் காவலர்’ ஆளுநர் ரவியும்!!!

அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “சனாதனத் தர்மத்தைக் காப்பதற்காகவே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு, அய்யா வைகுண்டர் தலைமைப் ‘பதி அடிகளார் பாலபிராஜபதி’ கண்டனம் தெரிவித்துள்ளார். 


“எந்த ஒரு விசயத்தையும் ஆளுநர் ரவி புரிந்து பேச வேண்டும். ‘உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண் பெண் பேதம், சாதி ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தேவையற்றவை’ என்பன போன்ற பல உயர் கோட்பாடுகளைக் கொண்டவர் அய்யா வைகுண்டர்.


எனவே, அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரைச் சொந்தம் ஆக்கிக்கொண்ட[பட்டா போட்டு] அவரைக் கண்டிக்கிறோம்” என்பது பதி அடிகளார் அவர்களின் கண்டன அறிக்கை ஆகும்.


இது தினத்தந்தியில் வெளியான செய்தி.


https://www.dailythanthi.com/News/State/dont-talk-about-distorting-history-aya-vaikunder-chief-pathi-condemns-governor-rn-ravi-1096153?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhBAUQ6VKwIUuERCN2qDtgZWKhQICiIQQFEOlSsCFLhEQjdqg7YGVjDf4vQB&utm_content=rundown