திங்கள், 1 ஏப்ரல், 2024

‘இந்த’ச் சொறி நாய் ஓட்டுக் கேட்டு வந்தால்.....


விதம் விதமான தந்திரங்களைக் கையாண்டு, காலமெல்லாம் நம்மை அடக்கி ஆள நினைப்போரின் பாதம் நக்கி, அவன்கள் போடும் பதவிப் பிச்சைக்காக வெறி நாயாய் அலைந்துகொண்டிருக்கிறது இங்கே ஒரு சொறி நாய்.

பதவிக்காக  அவன்களுக்குச் சேவகம் புரிபவர்கள் கணிசமானவர்களாக இங்கே இருந்தாலும், இந்த நாய் போல அவர்களில் எவரும் மனம் போனபோக்கில், தமிழையும், தமிழினத்தையும் இழிவுபடுத்தியதில்லை; படுத்துவதும் இல்லை.

சில நாட்களுக்கு முன்பு இந்தச் சொறிநோய் மிருகம், நாம் முன்பு இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய போராட்டத்தைப் 'பிய்ந்த செருப்பு' என்று இழிவுபடுத்திப் பேசியிருக்கிறது.

தமிழினத் தலைவர்கள் பலரும் இந்த இழி செயல் புரிந்த நாயைக் கண்டித்திருக்கிறார்கள்.

செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் நல்ல குணமோ, திருந்தி வாழநினைக்கும் மனப் பக்குவமோ இதுக்கு இல்லை.

இன்றோ நாளையோ பிறிதொரு நாளிலோ இது உங்களிடம் ஓட்டுக் கேட்க வருவது உறுதி.

வந்தால்.....

தெருவுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

அனுமதித்தால்.....

இதற்குள்ள சொறிநோய், உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை அண்டி வாழும் நல்ல நன்றியுள்ள ஜீவன்களுக்கும் தொற்றும் என்பது உறுதி.

ஆகவே.....

தெருமுனையிலேயே இதைத் தடுத்து நிறுத்தி, பிய்ந்த பழைய செருப்புகளைத் தண்ணீரில் நனைத்து[அடி உறைக்கும்]ச் சரமாரியாக அடித்து விரட்டுங்கள்.

இது தமிழ்நாட்டிலிருந்தே அடித்து விரட்டப்பட்டு, எங்கிருந்து வந்ததோ அந்த இடத்துக்கே பிழைப்புத் தேடி ஓட வேண்டும்

எச்சரிக்கை:

இயன்றவரை பழைய பிய்ந்த செருப்புகளைச் சேகரித்து வைத்திட மறவாதீர்!

                           *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/kancheepuram/opposition-condemns-that-annamalai-compared-hindi-imposition-protest-with-teared-slipper-594797.html

ஞாயிறு, 31 மார்ச், 2024

சும்மா கட்டிப்பிடிக்க மட்டும் ‘அவளுக்கு’ ரூ7500[ஒரு மணி நேரத்துக்கு]

அவள் பெயர் ‘அனிகோ ரோஸ்’; இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிப்பவள்.

இவள், மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு வைத்தியம் பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாள் என்பது ‘மாலைமலர்’ச் செய்தி.

இவள் செய்வது ‘கட்டிப்பிடி’ வைத்தியமாம்!

இப்படியொரு புதுமையானதும் சர்ச்சைக்குரியதுமான வைத்திய முறை இங்கிலாந்தில் இருப்பது உண்மைதானா என்னும் கேள்வி தவிர்க்க இயலாததாக உள்ளது.

உண்மையே என்றாலும், கட்டிப்பிடிக்கப்படும் ஆண் அடுத்த கட்ட நகர்வுக்கு[உடலுறவு]த் தூண்டப்பட்டு அதற்கு அவள் அனுமதி மறுப்பாளாயின், அவனின் மன அழுத்தம் பல மடங்கு அதிகம் ஆகும்.

பலரைக் கட்டிப்பிடித்துச் சிகிச்சையளிக்கிறவளும் பாலுணர்ச்சியால் தூண்டப்பட்டு, ஒரு கட்டத்தில் அவளே மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகும்.

கட்டுப்படுத்த இயலவில்லை எனின், அவள் முழுநேர விலைமகள் ஆவாள். அல்லது முழுப் பைத்தியமாக ஆகக்கூடும்.

எது எப்படியோ,

மேற்கண்ட 42 வயதுக்காரியின் மீது இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக அறியப்படவில்லை.

நடவடிக்கை ஏதும் இராது எனின், இவளைப் போன்ற ‘சல்லாபத் தொழில்’காரிகளின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்க வாய்ப்புள்ளது. இளவயசுக்காரிகள் பலரும் இத்தொழில் இறங்குவார்கள்; கோடிகளில் புரளுவார்கள்.

மற்ற நாடுகளில் எப்படியோ, இந்தப் புண்ணியப் பூமியில்[இந்தியா] இந்தக் ‘கட்டிப்பிடித் தொழில்’ எப்போது தொடங்கப்படும்?!?!

                                                      *   *   *   *   *