சனி, 4 மே, 2024

அட, சே... வலைப்பக்கம்! ஐயகோ ‘யூடியூப்’!!

என்னை நானே உச்சி முகந்து[படத்தில்], வியந்து பாராட்டி, மகிழத் தூண்டும் என் படைப்புகளில்[ஹி... ஹி... ஹி!!!] கீழ்வருவதும்* ஒன்று. இந்த என் தளத்தில் இது வெளியானபோது[6 ஆண்டுகளுக்கு முன்பு] பெற்ற ‘பார்வை’ எண்ணிக்கை 363.

‘யூடியூப்’இல் வெளியிட்டால் அதிக அளவில் ‘பார்வை’களைப் பெறலாம் என்னும் நப்பாசையுடன் எனக்கான தளத்தில், [ஆறறிவன்@user-hu4jj1dt5g  >copy&paste] பதிவு செய்தேன்.

இதற்கான வருகையாளர் எண்ணிக்கை ‘07’[பல ‘குப்பை’[?]க் காணொலிகளுக்கு ஆயிரக் கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பதிவாகிறது! மனம் பொறாமையில் வெந்து புழுங்கியது; புழுங்குகிறது!!] மட்டுமே.

[“இனி வலைப்பக்கமும் வேண்டாம், ‘யூடியூப்’ம் வேண்டாம்” என்று உறுதி பூண்டேன். இது வெறும் பிரசவ வைராக்கியம் போன்றதுதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!?]

                        * நான் விஞ்ஞானி அல்ல;
                         ஞானியும் அல்லேன்.
                        'என் கடன் பணி செய்து கிடப்பதே' 
                         என்று 
                         காலமெல்லாம் களப்பணி ஆற்றும்
                         கருணாமூர்த்தியும் அல்லேன்.
                         ஓவியம் படைத்தோ காவியம்
                         இயற்றியோ 
                         
                         ஆடலும் பாடலும் நிகழ்த்தியோ
                         மாந்தரை மகிழ்விக்கும் நல்ல
                         கலைஞனும் அல்லேன்.
                       
                         'நான்' வெகு சாமானியன்;
                          சாதிக்கும் திறன் இல்லாதவன்
                          என்பதை அறிந்திருந்தும்
                          
                          கோடானுகோடி உயிர்கள் தன்
                          கைவசம் இருக்க
                          இம்மண்ணில் 
                         ''நீயும் இனவிருத்தி செய்;
                          உன்னால் சாதிக்க முடிந்தது
                          அது மட்டுமே'' என்று
                          இங்கு  என்னை அனுப்பிவைத்த 
                          அவன்.....
                          ஓர் 'அரைக் கிறுக்கன்'.

                          நான் கேட்கும் 
                          எந்தவொரு கேள்விக்கும் விடையில்லை
                          என்பது தெரிந்திருந்தும்.....

                           ''யாரவன்?
                           அவன் எப்படி இருப்பான்?
                           என்னைப் படைத்து வழிநடத்தும்
                           அதிகாரத்தை
                           அவன் எங்கே பெற்றான்?
                           எப்படிப் பெற்றான்?
                           பெற்றுத் தந்தவர் யார்?''
                           என்றெல்லாம் கேள்வி எழுப்பித்                                                                                  திரியும் நான்.....
                           ஒரு முழுக் 'கிறுக்கன்!

                 
*   *   *   *   *
'யூடியூப்’ காணொலி:
                                      

வெள்ளி, 3 மே, 2024

ரேவண்ணா சல்லாபம்! மோடி மௌனம் சாதிப்பது ஏன்?!

“தேவேகவுடா பேரன் ரேவண்ணா 500க்கும் மேற்பட்ட[காணொலி காண்க] பெண்களின் கற்பைச் சூறையாடி உள்ளார்; வீடியோக்களும் எடுத்து வைத்துள்ளார்[அவ்வப்போது அவற்றைப் பார்த்து ரசித்து, அது விசயத்தில் உத்வேகம் பெறுவதற்காக]. இது விசயத்தில் இந்நாள்வரை பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்?” என்று கர்னாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார் என்பது செய்தி[மாலைமலர்>3 மே 2024 11:39 AM].

கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாத சின்னப் பையனாகவே இருக்கிறார் என்பது நம் எண்ணம்.

சிந்தித்திருந்தால்.....

சிலர், ரெண்டு மூனு பெண்டாட்டி கட்டி அதுகளைச் சமாளிக்க முடியாமல், சன்னியாசி ஆகி, ஆசிரமம் அமைத்துப் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதையே தொழிலாகக்கொள்ளும் நிலையில்.....

ரேவண்ணா[பிரஜ்வல் ரேவண்ணா (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1990) இத்தனை இளம் வயதில்[33] 500க்கும் மேற்பட்ட இளசுகளை அனுபவித்தார் என்பது உலக அளவிலான ஒரு சாதனை ஆகும்[இணையத்தில் தேடியதில் இப்படியொரு சாதனை வேறெங்கும் நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவில்லை].

புணர்ச்சி சுகத்தில் ஈடுபடும்போதே மறவாமல் ‘கேமரா செட் செய்து’ அதை அவர் காணொலிகள் ஆக்கியிருப்பதை இமாலய சாதனை என்றும் சொல்லலாம்.

இப்படியொரு அரிதான சாதனை நிகழ்த்திய இந்தியக் குடிமகனான ரேவண்ணாவைப் பாராட்டி, விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்பது நம் பிரதமர் மோடியின் திட்டமாக இருக்கலாம்.

விருது வழங்கும் நிகழ்வை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியக்கும் வகையில் நடத்துவது பற்றி இடையறாது சிந்தித்துக்கொண்டிருப்பதே மோடி மௌனம் சுமந்திருப்பதற்கான காரணம் என்பது ராகுலுக்குத் தெரிந்திருக்கவில்லை.

தெரிந்திருந்தால் விழாவை வெகு சிறப்பாக நடத்துவது குறித்துத் தன் மேலான ஆலோசனைகளை அவர் வழங்கியிருப்பார்.

இனியேனும், மோடி மீது குற்றம் சுமத்துவதைத் தவிர்த்து, ரேவண்ணாவிற்கான விருது வழங்கும் விழாவில் ராகுல் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.

                                         *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/national/prajwal-revanna-raped-400-women-alleges-rahul-gandhi-716338