என்னை நானே உச்சி முகந்து[படத்தில்], வியந்து பாராட்டி, மகிழத் தூண்டும் என் படைப்புகளில்[ஹி... ஹி... ஹி!!!] கீழ்வருவதும்* ஒன்று. இந்த என் தளத்தில் இது வெளியானபோது[6 ஆண்டுகளுக்கு முன்பு] பெற்ற ‘பார்வை’ எண்ணிக்கை 363.
‘யூடியூப்’இல் வெளியிட்டால் அதிக அளவில் ‘பார்வை’களைப் பெறலாம் என்னும் நப்பாசையுடன் எனக்கான தளத்தில், [ஆறறிவன்@user-hu4jj1dt5g >copy&paste] பதிவு செய்தேன்.
இதற்கான வருகையாளர் எண்ணிக்கை ‘07’[பல ‘குப்பை’[?]க் காணொலிகளுக்கு ஆயிரக் கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பதிவாகிறது! மனம் பொறாமையில் வெந்து புழுங்கியது; புழுங்குகிறது!!] மட்டுமே.
[“இனி வலைப்பக்கமும் வேண்டாம், ‘யூடியூப்’ம் வேண்டாம்” என்று உறுதி பூண்டேன். இது வெறும் பிரசவ வைராக்கியம் போன்றதுதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!?]
* நான் விஞ்ஞானி அல்ல;
ஞானியும் அல்லேன்.
'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்று
காலமெல்லாம் களப்பணி ஆற்றும்
கருணாமூர்த்தியும் அல்லேன்.
ஓவியம் படைத்தோ காவியம்
இயற்றியோ
ஆடலும் பாடலும் நிகழ்த்தியோ
மாந்தரை மகிழ்விக்கும் நல்ல
கலைஞனும் அல்லேன்.
'நான்' வெகு சாமானியன்;
'நான்' வெகு சாமானியன்;
சாதிக்கும் திறன் இல்லாதவன்
என்பதை அறிந்திருந்தும்
என்பதை அறிந்திருந்தும்
கோடானுகோடி உயிர்கள் தன்
கைவசம் இருக்க
இம்மண்ணில்
''நீயும் இனவிருத்தி செய்;
உன்னால் சாதிக்க முடிந்தது
அது மட்டுமே'' என்று
உன்னால் சாதிக்க முடிந்தது
அது மட்டுமே'' என்று
இங்கு என்னை அனுப்பிவைத்த
அவன்.....
ஓர் 'அரைக் கிறுக்கன்'.
நான் கேட்கும்
எந்தவொரு கேள்விக்கும் விடையில்லை
என்பது தெரிந்திருந்தும்.....
''யாரவன்?
அவன் எப்படி இருப்பான்?
என்னைப் படைத்து வழிநடத்தும்
அதிகாரத்தை
அதிகாரத்தை
அவன் எங்கே பெற்றான்?
எப்படிப் பெற்றான்?
பெற்றுத் தந்தவர் யார்?''
என்றெல்லாம் கேள்வி எழுப்பித் திரியும் நான்.....
ஒரு முழுக் 'கிறுக்கன்!
* * * * *
'யூடியூப்’ காணொலி: