ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

விஞ்ஞானிகளின் பாதம் பணிந்து ஒரு விண்ணப்பம்!!!

"சிஓபி[COB>ஒரு வட்டமான நிறை, கட்டி அல்லது குவியல்] முற்றிலும் விண்மீன் திரள்களால் ஏற்படுகிறது" என்று லாயர்[விஞ்ஞானி] கூறினார். "விண்மீன் திரள்களுக்கு வெளியே பார்த்தால், அங்கே இருளைக் காண்கிறோம், அதற்கு மேல் எதுவும் இல்லை."["The simplest interpretation is that the COB is completely due to galaxies," Lauer said. "Looking outside the galaxies, we find darkness there and nothing more."Scientists confirm that most of the universe is 'darkness and nothing more' (msn.com)]

அறிவியலாளரே,

விண்மீன் திரள்களிலா, அவற்றிற்கு வெளியே பரவிக்கிடக்கும் இருளிலா, இருளுக்கு அப்பால் வெற்றிடம் இருந்தால், அந்த வெற்றிடத்திலா கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை அதி விரைவில் கண்டுபிடித்துச் சொல்லுங்கய்யா.

அந்தக் கண்டறியப்படாத கடவுளை வைத்துக்கொண்டு இங்குள்ள மதவாதிகளும், மகான்கள் அவதாரங்கள் எனப்படும் ஆன்மிகவாதிகளும் செய்யும் அலப்பறை கொஞ்சநஞ்சமல்ல.

இவர்களால் மக்கள் பக்திப் பித்தர்களாகிக் கோயில் கோயிலாக அலையும் பரிதாபத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஆகவே.....

மேற்கண்ட இடங்களில் கடவுள் எங்கேனும் ஒளிந்துகொண்டிருக்கிறாரா, அல்லது அப்படியான ஒரு நபர் எங்கேயும் இல்லையா என்பதை விரைவில் கண்டறிந்து அறிவியுங்கள் அய்யா!

சனி, 31 ஆகஸ்ட், 2024

‘சத்துக்குரு, ஸ்ரீ ஸ்ரீ ரவி, ராம்தேவ்...’ ஆசீர்வதிக்கப்பட்ட ஆடம்பரப் பிச்சைக்கார்கள்!!!

அழுக்கேறிய கந்தல் ஆடையும் பரட்டைத் தலையுமாய் மக்களைத் தேடிப்போய் வயிற்றுப்பாட்டுக்காகக் கையேந்துபவர்கள் பிச்சைக்காரர்கள்!

ஏந்துவது இழிவென்று, காவி உடுத்துத் தெருவோரங்களில் அமர்ந்து, தேடிவந்து பிச்சையிடுபவர்களுக்காக காத்திருப்பவர்கள் சாதுக்கள்!!
நாடாண்ட மன்னர்களைப் போல் படாடோபமாய் உடைகளும் ஆபரணங்களும் தரித்து, ஆசிரமங்களில் தங்கி, பக்தக்கோடிகள் தேடிப்போய்க் கோடி கோடியாய்க் காணிக்கை செலுத்த, அபயக்கரம் உயர்த்தி, புரியாத தத்துவம் உபதேசித்து, கொஞ்சமும் உழைக்காமல் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டவர்களால்[கடவுள்கள்] ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


எடுத்துக்காட்டாகச் சிலர்:


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், சத்துக்குரு ஜக்கி வாசுதேவ்!!!