திங்கள், 13 ஜனவரி, 2025

தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி[பெரியார்]தான்!!!

சங்கிகளின் புதியக் கொத்தடிமையும் பழையக் கொத்தடிமைகளும், தமிழரிடையே பெரியாருக்குள்ள பெருமதிப்பைக் குறைத்திடப் பட்டியலிடும் குற்றச்சாட்டுகளில் அவர் தமிழை, ‘காட்டுமிராண்டி மொழி’ என்று சொல்லி அவமதித்தார் என்பதும் ஒன்று.

பெரியார் ஏன் அப்படிச் சொன்னார்? அவரைச் சொல்ல வைத்த சூழல் எது?

சங்க காலத்திற்குப் பிறகு, களப்பிரர், பல்லவர்[தமிழர் அல்லர் என்னும் கருத்தே மேலோகியிருந்தது], இஸ்லாமியர், மராட்டியர், நாயக்கர் என்று பல்வேறு இனத்தவரால் அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்கள் ஆங்கிலேயரின்[ஒட்டுமொத்த இந்தியாவும்] அடிமைகளாகவும் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்தபோது பிரமிக்கத்தக்க அறிவியல் அறிவோடு வந்தார்கள்.

அறிவியல் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், உளவியல் என்று பல்துறை அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள்; தம் இனத்தவர்க்கு அவற்றைக் கற்பிப்பதற்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களும் அவர்களிடம் இருந்தன. சின்னஞ்சிறு தேசத்தவரான ஆங்கிலேயர்கள் உலகிலுள்ள பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்டதற்கு அவர்களின் மொழியும் பயன்பட்டது என்பது அறியத்தக்கது.

பெரியார்[திராவிட நாடு திராவிடர்க்கே என்று சொல்லிக்கொண்டிருந்த அவர், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமிட்டதை மறந்துவிடக்கூடாது] சிந்தித்தார்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்கள், இதிகாசங்கள், தேவார திருவாசகங்கள், சிற்றிலக்கியங்கள்[கட்டடம், சிற்பம் போன்றவை பற்றிய நூல்களும், சமணர்களின் இலக்கண நூல்களும் விதிவிலக்கானவை] என்று தமிழில் நூல்கள் என்னும் பெயரில் குப்பைகள்  குவிந்து கிடந்தனவே தவிர, ஆங்கல மொழியில் போல அறிவியல், வாழ்வியல், உளவியல் தொடர்பான நூல்களே இல்லாதது அவரை வருத்தியது.

அந்த வருத்தம்தான் அவரை, ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று சொல்ல வைத்தது.

அரசியலில் ஈடுபடாமல் மக்கள் பணியில் மட்டும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அவருக்கு, தமிழை இப்படிச் சாடியதால் எந்தவொரு பயனும் இல்லை. தமிழர் நலன் கருதியே இதைச் செய்தார் என்பது, இன்று அவரை இழித்துரைக்கும் மரமண்டையர்க்குப் புரியாமல்போனது ஏன் என்று புரியவில்லை.

பெரியார் காலத்துக்குப் பிறகும்கூட, பொறியியல், முதலான துறைகளில் போதுமான அளவுக்கு நூல்கள் வெளியாகவில்லை[கதை, கவிதை, நாடக நூல்கள் மக்களுக்கான தேவைகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றும்].

சுயமாகச் சிந்தித்துத் தமிழில் அறிவியல் நூல்களைப் படைத்தளிக்கப் பல்துறை அறிஞர்கள் இல்லை[படைப்பாளிகள் இருப்பின் அவர்களுக்கு உரிய நிதியுதவியை அரசு செய்யும் என்று நம்பலாம்].

மொழியாக்க நூல்களிலும் போதிய தரம் இல்லை.

விளைவு.....

தனியார் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லை. அரசுக் கலைக்கல்லூரிகளில் மட்டுமே தமிழ்வழிக் கல்விப் பிரிவுகள் உள்ளன.

பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் கற்பிக்கும் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை[ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பயின்று நிபுணத்துவம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே சுயமாக நூல்கள் படைக்கும் நிலை உருவாகலாம்].

பெற்றோர்களாலும் தமிழ் வழி முற்றிலுமாய்ப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஆக, பெரியார் அன்று சொன்னதையேதான் இன்று நாம் சொல்லவேண்டியுள்ளது.

“தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி!"[அறிவியலைப் புறக்கணிக்கும் எந்தவொரு மொழியும் காலப்போக்கில் அழியும் என்பது உறுதி] 

சனி, 11 ஜனவரி, 2025

காம இச்சையைத் தணிக்கவா மணியம்மையைக் கடிமணம் புரிந்தார் பெரியார்?

'நாம் தமிழர்' என்று சொல்லித் திரியும் நாறவாயன் பெரியாரை இழிவுபடுத்தியதைத் தொடர்ந்து, மணியம்மையைப் பெரியார் மணம் புரிந்த நிகழ்வையும் கொச்சைப்படுத்திக் குதூகளித்துக்கொண்டிருக்கிறார்கள் ‘அவா’க்களும், ஆர்.எஸ்.எஸ்.காரனிடம் அடிமைச் சேவகம் புரியும் விபீசணத் தடியன்களும்.

71 வயதில் 30 அகவையைக் கடந்த மணியம்மையைப் பெரியார் மணம் புரிந்தார் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கலாம்.

அந்தரங்கச் சுகம்தான் அதற்குக் காரணம் என்றால், அப்படியொன்றும் அழகியல்லாத[மன்னித்திடுக] மணியம்மையைத் தவிர்த்து, பதின்பருவப் பெண்களில் ஒருத்தியைத் தேர்வு செய்திருப்பார் பெரியார்; ஒன்றுக்கு மேற்பட்டவர்களையும் மணந்துகொண்டிருக்கலாம். இது அவர் காலத்தில் வழக்கத்தில் இருந்தது.

முதல் மனைவி நாகம்மை மறைந்தது 1933-இல். அப்போது பெரியாருக்கு வயது 55. மனைவியை இழந்த பிறகும் மறுமணம் பற்றிச் சிந்திக்காமல் மக்கள் பணிக்கென்றே தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர்.

உடல்நலப் பாதிப்பும் மறுமணம் குறித்து அவரைச் சிந்திக்க அனுமதிக்கவில்லை.

தன்னிச்சையாகச் சிறுநீர் வெளியேறும் பரிதாப நிலையில், எந்நேரமும் சிறுநீர்ப்பையைச் சுமந்துகொண்டிருந்தார் அவர். வெளியூர்ப் பயணங்களின்போதும், ஏன் கடைசி மூச்சுவரை இந்த அவலநிலையிலிருந்து அவருக்கு விடுதலை இல்லை. அப்புறம் எப்படி மறுமணம் செய்து மன்மதக்கலை பயில்வது?

எனவே,  தம் கோடிக்கணக்கான சொத்துக்கு நம்பிக்கைக்குரிய ஒரு வாரிசு தேவை என்பதற்காகவே அம்மையை அவர் மணக்க நேரிட்டது.

இது குறித்த பெரியாரின் அறிவிப்பு:

‘எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகையால், நான் 5,6 வருஷகாலமாகப் பழகியதில் என் நம்பிக்கைக்குப் பாத்தியமானவரும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றுக்கொண்டவருமான, மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக்கொள்வது என்பது என் விருப்பமாக இருந்தது. அவருடன் 4,5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக்குமாக ஒரு ட்ரஸ்ட்டுப் பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்.’

மணியம்மையாரை மகளாகத் தத்தெடுக்காமல் மனைவியாக்கிக் கொண்டதற்கான முக்கியக் காரணம்:

அன்றையத் தத்தெடுத்தல் தொடர்பான சட்ட விதிகளின்படி, ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. அம்பேத்கரின் இந்துச் சட்டத் திருத்தங்கள் 1956-இல் அமலுக்கு வந்த பின்னரே இந்த விதி நீக்கப்பட்டது.

பழைய இந்துச் சட்டத்தின்படி மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்துச் சட்டத்தின்படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கவும் சீதனம் பெறவும் மட்டுமே முடியும்.