சனி, 19 ஏப்ரல், 2025

மோடி பெரிய லூசு! இது[பாஜக பெண் எம்.எல்.ஏ] கொஞ்சம் சின்னது!!

“நான் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன்” என்று ஒருவர்[மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் உஷா தாகூர்] சொன்னால் அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?

முடிவெடுப்பதற்கு முன்னால், “தான் சாதாரண மனிதப் பிறவி அல்ல; கடவுளால் அனுப்பப்பட்டவன் என்றும், கடவுளின் குழந்தை என்றும் மோடி சொன்னாரே, அவரைப் போலத்தான் இவரும் பேசியிருக்கிறார்?’ என்று எதிர்க் கேள்வி எழுப்புவீர்கள்.

“இருவரின் பேச்சும் உங்களுக்கு ஏற்புடையவைதானா?” என்று நாம் கேட்டால், “அது பெரிய லூசு[பைத்தியம்]. இது அதைவிடவும் கொஞ்சம் சின்னது” என்பீர்கள்?

நீங்கள் இப்படிச் சொல்வீர்களோ அல்லவோ, நாம் உறுதிபடச் சொல்வது இதையேதான்.

இவர்களைப் போல் பெரிய லூசுகளும் சின்னச் சின்ன லூசுகளும் நிறைந்த கட்சிதான் ‘பாரதீய ஜனதா கட்சி’!

லூசுகளின் இந்தக் கட்சிதான்[இந்தித் திணிப்புடன் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதும், மதவெறியைப் பரப்புவதும்தான் இவர்களின் முழுநேரத் தொழில்] இந்தியாவைப் பல ஆண்டுகளாக ஆண்டது; ஆண்டுகொண்டிருக்கிறது.

இந்தியர்கள் அத்தனை பேரும் ‘லூசுகள்’ ஆகும்வரை இந்த லூசுகள்தான் இந்த நாட்டை ஆள்வார்களா?

விடை தெரியாத கேள்வி!

* * * * *

மாலைமலர்ச் செய்தி:

#மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பது உஷா தாகூர்.

அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத்தான் பிறப்பார்கள்[இன்னொரு உஷா தாகூராகப் பிறக்காமலிருந்தால் போதும்]

கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்#


https://www.maalaimalar.com/news/national/those-voting-on-basis-of-money-liquor-will-be-reborn-as-animals-bjp-mla-769368?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMwr9bAAw&utm_content=rundown


வெள்ளி, 18 ஏப்ரல், 2025

போதைப் புருசனும் புத்திசாலிப் பெண்டாட்டியும்![குடும்பக் கதை> பழசோ பழசு]

"கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குற" -கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ், முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா? என்றாள் கல்யாணி.

“ஏண்டி பொய் சொல்றே?”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலைன்னு கோபப்பட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” -முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” -குழைவாகச் சொல்லிக்கொண்டே, உடம்பெங்கும் காமம் பரவ, கண்கள் கிறங்கக் கல்யாணியின் கை பற்றினான் கண்ணுச்சாமி.

வெடுக்கெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட கல்யாணி, “குடிச்சிட்டு வந்து என்னைத் தொடுறதை நிறுத்திக்கோ. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘உன்னை நான் தொடவே இல்லை’ன்னு கூசாம பொய் சொல்லுவே” என்று கடுகடுத்தாள் கல்யாணி.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் கண்ணுச்சாமி.

                                *   *   *   *   *
'குமுதம்’ வார இதழில்[2010] வெளியான கதை[கதாசிரியன்... நானே நான்!].