திங்கள், 9 ஜூன், 2025

மணிப்பூர் ம.அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரும்! எப்போது?

                                                           
‘மணிப்பூர் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பிரதமர் மோடியின் உணர்வின்மை உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது’ என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

மணிப்பூரில் மலைவாசிகளான பூர்வீகக் குடிமக்களுக்கும் குடியேறிகளுக்கும் இடையிலான கலவரம் தொடர்கிறது.

கலவரத்தை அடக்க மோடியால் அனுப்பப்பட்ட ராணுவத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்தக்கலவரச் சூழல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதால், மணிப்பூர் வாசிகள் மீதான பற்றுதலை நம் பிரதமர் வெகுவாக இழந்துவிட்டார், அல்லது முழுமையாகத் துறந்துவிட்டார்[நம்போலின் சனோய் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிங்கோம்பம் ஸ்ரீமா பிபிசியிடம் பேசுகையில், “மக்களே தங்களை தற்காத்துக் கொள்ளும்படி அரசாங்கம் விட்டுவிட்டது. குகி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகத்தினரும் அரசாங்கம் தங்களுக்காக எதையும் செய்யாததால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக, வன்முறையைச் சமாளிக்க மக்களே வன்முறையில் ஈடுபடுவதால், நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது” என்கிறார்[https://www.bbc.com/tamil/articles/cml1z28n3r2o]. என்று சொல்லலாம்.

தொடரும் கலவரம் காரணமாக, மணிப்பூர் மக்கள் முற்றிலுமாய் அழிந்துபோனால்[வெகு விரைவில்], அந்த வெற்று மாநிலத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பது எளிது என்பது மோடியின் திட்டமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இதைப் புரிந்துகொண்டால் ஜெய்ராய் ரமேஷ் போன்ற நாட்டுப் பற்றாளர்கள், அடுத்தடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாகிப் பைத்தியங்கள் ஆவதிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்!

ஞாயிறு, 8 ஜூன், 2025

கோவை[தெற்கு] ‘பாஜக’காரர்கள் அத்தனைப் பேரும் கன்னடர்களா?!

'தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி, கன்னட மொழி விரோதி கமலஹாசன் என்றெல்லாம் குறிப்பிட்டு, அவரை மட்டுமல்லாமல் ‘தி.மு.க’ வையும் கண்டித்துப் ‘பா.ஜ.க’ வினர் கோவையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது' என்பது செய்தி[https://tamil.indianexpress.com]

சுவரொட்டி[போஸ்டர்]:


‘கவுடா’என்னும் பெயரே இந்தப் போஸ்டர் அடித்த நபர் கன்னடன் என்பதை உறுதிப்படுத்துகிறது; ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’[தமிழ் உயிர் மொழியாம். யாரை முட்டாளாக்க?] என்கிறார்.

இவருக்கு[கவுடா]க் ‘கன்னடம்’தான் தாய்மொழி என்பது சொல்லித் தெரிவதில்லை. 

கமல்காசனை மட்டுமல்ல, ‘தி.மு.க.’வையும் கண்டிப்பது இவர் நோக்கம். கண்டிக்கட்டும். அது அவர் ஆசை.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள, ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’ என்னும் சொற்றொடரில் உள்ள ‘எங்கள்’ என்னும் ஒரு சொல்தான் நம் நெஞ்சில்  நெருடலை உண்டுபண்ணுகிறது.

அந்த ‘எங்கள்’ கோவை[தெற்கு] ‘பாஜக’ கட்சியினரைத்தான் குறிக்கிறது. ‘கவுடா’விடம் நாம் கேட்க விரும்புவது.....

“கன்னட கவுடரே,

கோவை, தெற்கிலுள்ள அத்தனைப் ‘பாஜக’ காரர்களுமே கன்னடர்கள் என்கிறீரா?”

“ஆம்” என்பதுதான் கன்னடனான உம்முடைய பதிலாக இருக்கமுடியும். 

கவுடாவிடம் மட்டுமல்ல, கோவையிலுள்ள ’பாஜக’ கட்சித் தமிழர்களிடமும் நாம் கேட்க விரும்புவது.....

“தமிழர்களே, கன்னடன் சந்திரசேகர் கவுடா சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?”

                                      *   *   *   *   *