வெள்ளி, 4 ஜூலை, 2025

வருந்துகிறார் கடவுளின் கடவுள்!!!

//இன்று உலகில் 195 நாடுகள் உள்ளன[ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளும், உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடுகளாக உள்ள 2 நாடுகளும் அடங்கும்]//> https://www.worldometers.info/geography/how-many-countries-are-there-in-the-world/.

உங்களின் நேசிப்புக்குரிய கடவுளின் கடவுள்[!!!] இதுவரை இந்தியா முதலான 26  நாடுகளிலிருந்து மட்டுமே வருகையாளர்களை[பார்வைகள்> 1,198,652> 04.07.2025, 06.14 ]ப் பெற்றுள்ளார்.

எஞ்சியுள்ள 169 நாட்டவர்கள் அவரை அலட்சியப்படுத்தியுள்ளார்கள்[மொழியாக்க வசதி இருந்தும்] என்பது அவரை அளவில்லாத வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், உங்களின் ‘அறிவுப் பசி’ தணித்தலாகிய தம் பணியை அவர் தொடர்வார் என்பதறிந்து மகிழ்வீராக! ஹி... ஹி... ஹி!!!

                                                *   *   *   *   *

இந்தியா

3,32,958

அமெரிக்கா

3,25,268

சிங்கப்பூர்

1,96,971

ஸ்வீடன்

48,444

கனடா

42,299

ஜெர்மனி

26,837

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

25,207

ரஷ்யா

23,769

பிரான்ஸ்

15,530

யுனைடெட் கிங்டம்

10,282

ஹாங்காங்

8,857

இலங்கை

6,880

நைஜீரியா

6,810

ஆஸ்திரியா

4,694

அறியப்படாத பிரதேசம்

2,744

உக்ரைன்

2,722

ருமேனியா

2,353

ஜப்பான்

2,233

நெதர்லாந்து

2,170

பிற[மலேசியா, ஸ்பெயின், மெக்சிகோ, கத்தார், லிதுவேனியா, லக்ஸ்சம்பர்க் போலந்து, பிரேசில்]

* * * * *

1,61,000

வியாழன், 3 ஜூலை, 2025

கைலாய மலை... சிவபெருமானின் இருப்பிடம் அல்ல; கட்டுக்கதைகளின் பிறப்பிடம்!!!

கைலாய மலை[6,638 மீட்டர் (21,778 அடி) உயரம்] எவரெஸ்ட் சிகரத்தைவிடவும் உயரம் குறைவு. ஆயினும் அதன் மீது ஏறி எவரும் சாதனை நிகழ்த்தியதில்லை.

அது சாத்தியமற்றது என்பதல்ல; ஏறவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர்கள் ஆன்மிகம் பரப்பும் அடிமுட்டாள்கள்.

கைலாய மலை என்பது வெறும் மலை அல்ல. அது புனிதமானது; சிவபெருமானின் தங்குமிடம்; பல மதங்களால் போற்றப்படும் ஆன்மீகச் சக்தியின் மையம். அது அண்டவெளியின் அச்சாக உள்ளது; பிரபஞ்சத்தின் மையமாக உள்ளது[இவற்றிற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை> ஆய்வு செய்ய அறிவியல் அறிஞர்களை இந்த மூடர்கள் அனுமதிக்கவே இல்லை என்பது அறியத்தக்கது] என்று பொய்க் கதைகளைச் சொல்லிச் சொல்லி ஆராய்ச்சியாளர்களை மேலே ஏறவிடாமல் தடுத்துவிட்டார்கள்.

சிகரத்தை ஏறுவது உலகின் ஆற்றலுக்கான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் புளுகியிருக்கிறார்கள் அறிவிலிகள்.

2001ஆம் ஆண்டு கைலாய மலையின் மீது ஏறுவதற்கு ஒரு ஸ்பானிஷ் பயணக் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியா, திபெத், நேபாளம் ஆகியவற்றைச் சார்ந்த ஆன்மீகத் தலைவர்களின்[ஆதிவாசிகளின்] எதிர்ப்பால் ஏறும் முயற்சி ரத்தானது.

மலையேறுபவர்கள் மர்ம நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்னும் பக்தக்கோடி[கேடிகள்]களின் கட்டுக்கதைகளும் தடைகளாய் அமைந்தன.

இது[இந்தியா] புண்ணியப் பூமியல்ல; பகுத்தறிவைக் கருவறுக்கும் காட்டுவாசிகளின் புகலிடம்!

* * * * *