வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

கல் கட்டடத்திற்குப் பெயர் சூட்டுவது ஒரு சாதனையா? அடக் கடவுளே!!

 

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் பிப்ரவரி 13, 2026 அன்று புதிய பிரதமர் அலுவலக வளாகமான சேவா தீர்த்தத்தை(Seva Teerth) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்[ஊடகச் செய்தி]. 

அதென்ன ‘சேவா தீர்த்தம்’?

கல்லால் ஆனதோ, மண்ணால் ஆனதோ, வெறும் அட்டை வேய்ந்ததோ கட்டடம் எதுவாயினும், அதில் தங்கியிருந்து சிறப்பாகப் பணியாற்றுவதுதான் முக்கியமே தவிர, அதற்குச் ‘சேவா தீர்த்தம்’ என்பது போல் பெயர் சூட்டுவதெல்லாம் தேவையற்ற செயல்.

சேவை என்றால் மக்களுக்குப் பிரதிப்பலன் கருதாமல் தொண்டாற்றுதல். 

தீர்த்தம்... புனித நீர்> புனித நீர் நிலை என்றும் பொருள் கொள்ளலாம்[மோடிக்காக].

அதாவது, தான் திறக்கவிருக்கும் கட்டடத்திற்கு[இவர் தங்கியிருந்து சேவை புரியும் இடம்]ப் ‘புனிதமான நிலையம்’ என்று பொருள்பட, ‘சேவா தீர்த்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் புனிதர் மோடி.

அதை, ‘நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்’ என்றும் தற்பெருமை பேசியிருக்கிறார்.

உல்க அளவில் பிரதமர்[நாட்டின் தலைவர்] எவரேனும், தான் வேலை பார்க்கும் கட்டடத்திற்கு இப்படியெல்லாம் பெயர் வைத்து, தன் நாட்டு மக்களையே முட்டாள்கள் ஆக்கியதாக வரலாறு இல்லை என்பது நம் நம்பிக்கை... அல்ல, வருத்தம்.

ந்த முட்டாளாக்கும் கில்லாடி வேலையைச் சில மாதங்களுக்கு முன்பே செய்திருக்கிறார் அவதாரியால் ஆசீர்வதிக்கப்பட்ட அமித்ஷா.

கீழ்க்காண்பது மோடிக்கு அவர் சூட்டிய புகழ்மாலை:

//கடந்த 11 ஆண்டுகளாக, மோடி அரசாங்கம் வெறும் அதிகாரத்தின் அடையாளமாக இல்லாமல், சேவையின் அடையாளமாகவே திகழ்கிறது. இதில், ஆட்சியின் உச்சியில் உள்ள பிரதமர் தன்னைப் 'பிரதம சேவகராக'க் கருதி, மக்களுக்காக வாரத்தில் ஏழு நாட்களும்[!!!!!], 24 மணி நேரமும்(!!!!!!!!!!)உழைக்கிறார் என்று மத்திய உள்துறை அமைசசர் திரு. அமித் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமரின் அலுவலகத்திற்குச் 'சேவா தீர்த்தம்' என்று பெயரிட்டு, சேவைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், 'ராஜ் பவன்' மற்றும் 'ராஜ் நிவாஸ்' ஆகிய பெயர்கள் இப்போது 'மக்கள் பவன்' மற்றும் 'மக்கள் இல்லம்' என்று பெயர்மாற்றம் செய்யப்படுகின்றன.

சேவை மற்றும் நல்லாட்சியே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியடைந்த மற்றும் சிறப்பான இந்தியாவை உருவாக்கும் இந்தப் பொற்காலப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்//

வியாழன், 12 பிப்ரவரி, 2026

“ஜனகணமன...” -இது தேசத்தைப் போற்றும் கீதமா, தெய்வத்தைத் துதி பாடும் பாடலா?

//ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கண மன... " இந்தியாவின் தேசியக் கீதமாகும். இது மக்களின் மனதில் ஆட்சி செய்பவரும், பாரதத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பவருமான இறைவனைப் போற்றுகிறது. 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இது, பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம் (தென்னிந்தியா), ஒரிசா மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்துகிறது// -விக்கிப்பீடியா.

//ஜன கண மன - தேசிய கீதத்தின் தமிழ் அர்த்தம் (பொருள்):

ஜன-கன-மன-அதிநாயக ஜய ஹே: இந்திய மக்களின் மனதை ஆட்சி செய்யும் தலைவா உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் (இந்தியாவின்) நல்விதியை நிர்ணயிப்பவனே!

பஞ்சாப-சிந்து-குஜராத-மராட்டா-திராவிட-உத்கல-வங்க: பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், தென்னிந்தியப் பகுதிகள், ஒரிசா மற்றும் வங்காளம்[உன்னைப் போற்றுகின்றன]. 

விந்திய-ஹிமாசல-யமுனா-கங்கா: விந்திய மலைகள், இமயமலைகள், யமுனை & கங்கை நதிகள்(உன்னைப் போற்றுகின்றன).

உச்சல-ஜலதி-தரங்கா: அலைகளை எழுப்பும் இந்தியப் பெருங்கடல் (உன்னைப் போற்றுகிறது).

தவ சுப நாமே ஜாகே: உனது மங்களகரமான பெயரைக் கேட்டு, அனைவரும் விழித்தெழுகின்றனர்.

தவ சுப ஆசிஷ மாகே: உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றனர்.

காஹே தவ ஜய காதா: உனது வெற்றியைப் பாடுகின்றனர்.

ஜன-கன-மங்கலதாயக ஜய ஹே: மக்களின் நல்வாழ்வை அருள்பவனே, உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் விதியை நிர்ணயிப்பவனே, உனக்கு வெற்றி!

ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே: வெற்றி! வெற்றி! வெற்றி!
  • ஜய ஜய ஜய, ஜய ஹே: வெற்றி, வெற்றி, வெற்றி, உனக்கு வெற்றி!// -விக்கிப்பீடியா.
***சிவப்பு வண்ணத்தில் உள்ள அத்தனைச் சொற்களும் சொற்றொடர்களும் கடவுளைக் குறிக்கின்றன. இந்நிலையில், நம் தேசிக் கீதம் போற்றுவது நம் தேசத்தை அல்ல, அவரை[கடவுள்] மட்டுமே என்று சொல்லலாமா?என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

பதில்:
“மொழியாக்கம் செய்த கூகுளாருக்கு நன்றி!”[ஹி... ஹி... ஹி!!!]