செவ்வாய், 2 ஜூலை, 2019

ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பிகார், ஒடிசா...இவை இந்தி மாநிலங்கள் அல்ல!!!

கீழ்க்காண்பது, தினமணி ஆசிரியருக்குக் 'கவியழகன்' என்பார் எழுதிய மடல்.  

இந்தி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியல்ல என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இனியேனும்.....

''இந்தி இந்தியாவின் நிர்வாக மொழியாக நீடிக்கக் கூடாது. அனைத்து மாநில மொழிகளையும் நிர்வாக மொழியாக்கு'' என்னும் கோரிக்கையை முன்வைத்து, இந்தி அல்லாத பிற மொழி பேசும் மக்கள் போராட வேண்டும்.

தொய்வில்லாத போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.


திங்கள், 1 ஜூலை, 2019

திருப்பதியில் ஓர் அதிசயம்!

பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்' என்கிறது பக்தி நெறி பரப்பும் தமிழ்ப் பருவ இதழ் ஒன்று.

காலியாக வைக்கப்படும் அதி பிரமாண்ட உண்டியல் ஒரே நாளில் நிறைந்துவிடுகிறதாம். 

வேறு உண்டியல் வைத்து அதுவும்கூட நிரம்பிவிடக்கூடும்.

நேர்ந்துகொள்ளும்போதே உண்டியலில் பணமோ நகையோ போடுபவர்கள் உண்டு. கோரிக்கை நிறைவேறிய பிறகு காணிக்கை செலுத்துவோரும் உண்டு. இரண்டில் எது முன்னிலை வகிக்கிறது என்பதை நாம் அறியோம்.

எது எப்படியோ.....

தனக்கான உண்டியலை நாள்தோறும் நிரப்பிவிடுகிறார் ஏழுமலையான். உலகெங்கும் ஆயிரக்கணக்கில் கடவுள்கள் தத்தம் பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது ஏன் சாத்தியப்படவில்லை? 

ஏன்?