வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

70 வயதிலும் பிள்ளை பெறும்[சுகப்பிரசவம்] மலைவாசிப் பெண்கள்!!!

பாகிஸ்தானின் வடக்கு எல்லையில்கம்பீரமாகஉயர்ந்து நிற்கும் இமயமலைக்குப் பக்கத்திலேயே காரகோரம் பனிமலை. திரும்பிப் பார்த்தால் ஹிந்துகுஷ் மலைத்தொடர். இந்த மலைத் தொடர்கள் சந்திக்கும் இடத்தின் நடுவே சிந்து நதியும், கில்கிட் ஆறும் சங்கமிக்கின்றன. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழகிய இயற்கைக் காட்சிகளின் மத்தியில் ஹன்சா பள்ளத்தாக்கு (Hunza Valley) அமைந்திருக்கிறது.
சுற்றி இருக்கும் இடம் மட்டும் அல்ல, அங்கு வாழும் மக்களும் பேரழகுதான். 50 வயது நிரம்பியவரும் 30 வயது தோற்றத்துடன் இளமையாய்த் தோன்றுகின்றனர். அழகு மட்டும் அல்ல, உலகிலேயே அதிகமான ஆயுட்காலமும், ஆரோக்கியமும் கொண்டு ஹன்சா பள்ளத்தாக்கில் சுமார் 85,000 மக்கள் அமைதியாய் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியினர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வதைக் கண்டு வியந்த மானுடவியலாளர்கள், இதற்கான காரணத்தை ஆராயும்போது, ஹன்சா மக்கள் இயற்கையின் வழியில் தங்கள் வாழ்வுமுறையை அமைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வதால்தான் இந்த உலகிலேயே ஆரோக்கியமாக அதிக நாட்கள் உயிர் வாழக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இத்தனைக்கும் இவர்கள் தினமும் ஜிம் செல்வது கிடையாது, சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது கிடையாது. அதற்கான பணமும் இவர்களிடம் கிடையாது. பெண்கள் மேக்-அப் செய்யாமல், அழகு நிலையங்கள் என எங்கும் போகாமலே உலகிலேயே அழகான பெண்கள் என்ற பெருமையுடன் சாதாரணமாக வாழ்கின்றனர். இந்தப் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, இயற்கை வளங்களை அளவாகப் பயன்படுத்தி வாழ்கின்றனர்.

நம் ஊரில் 50 வயதை தாண்டினாலே சீனியர் சிட்டிசன் பட்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஹன்சா பள்ளத்தாக்கில் 70 வயது பெண்களும் குழந்தை பெற்றெடுக்கின்றனர். 90 வயது வரைகூட மாதவிடாய் நிற்பது இல்லையாம். ஹன்சா மக்கள் சராசரியாக 130 வயது வரை சுறுசுறுப்புடன் எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் உயிர்வாழ்கின்றனர்.

இதற்குக் காரணம் இவர்கள் வாழும் இடமும் இவர்களின் வாழ்வுமுறையும்தான். தினமும் பழமும் காய்கறிகளும் தானியங்களும்தான் இவர்களின் முக்கிய உணவு. பதப்படுத்தப்பட்ட உணவுகளோ அல்லது அதிக நேரம் சமைத்த உணவுகளோ சாப்பிடுவது இல்லை. வருடத்தில் இரண்டு மாதம், வெறும் பழங்களையும், பழச்சாறுகளையும்தான் முழு நேர உணவாகச் சாப்பிடுவார்கள். வால்நட், அவகேடோ, ஹேசில்நட் போன்ற நட்ஸ் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

இவர்களின் இந்த ரகசியத்திற்கு முக்கிய காரணம் பாதாமி பழங்கள்தான் என அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். Apricots என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதாமிப் பழங்களை அதிகம் உண்கின்றனர். கோடை நேரத்தில் ஹன்சா பள்ளத்தாக்கிற்குச் சென்றால், அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் பாதாமி பழங்கள் வெயிலில் உலர்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். பாதாமி விதைகளிலிருந்து பாதாமி எண்ணை எடுத்து, உணவிற்குப் பயன்படுத்துகின்றனர்.

இறைச்சியைச் சிறப்பு நாட்களின் போது மட்டும் சிறிய பங்கில் உட்கொள்கின்றனர். முட்டை மற்றும் பால் பொருட்களைத் தினமும் தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்கின்றனர். இவர்களின் முக்கிய வேலை விவசாயம்தான். அதனால் உடல் உழைப்பில் குறைவில்லை. மலைப் பகுதிகளில் வாழ்வதால் தினமும் பல மைல் தூரம் நடக்கின்றனர். 15 கி.மீ முதல் 20 கி.மீ வரை இவர்களால் சாதாரணமாக நடந்து செல்ல முடியும். இங்கு எந்த விதமான மாசுபாடும் கிடையாது. எந்த விதமான நோயும் கிடையாது.

ஹன்சா மக்களில் ஒருவருக்குக்கூட இதுவரை கேன்சர் நோய் வந்தது இல்லை. என்னதான் இயற்கையுடன் பழமையான வாழ்வுமுறையைப் பின்பற்றினாலும், ஹன்சாவினர் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அங்கு வாழும் பெண்களும், விரும்பிய மேல் படிப்பினைப் படிக்கின்றனர். ஆண்களுக்கான வேலை எனச் சொல்லப்படும் தச்சு வேலையையும் அப்பெண்கள் கற்கின்றனர். 

இந்தப் பகுதியில் குளிர் காலத்தில், அடர்ந்த பனியுடன் ஜீரோ டிகிரியில் உறையும் குளிர் இருக்கும். அந்தச் சமயத்திலும் மக்கள் குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்களாம். மொபைல் போனை, உறவினர்களிடம் தொடர்புகொள்ள மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தக் காரணங்களால் தான், ஹன்சா பள்ளத்தாக்கில் பெண்கள் 70 வயதிலும் கருத்தரிக்கும் உடல் வலிமையுடன் இருக்கின்றனர். 130 வயதுவரை சர்வசாதாரணமாக வாழ்கின்றனர்.

ஹன்சா மக்கள் அலெக்சாண்டர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். அங்கு கொலை, கொள்ளை என எந்த வன்முறையும் இல்லை. அடுக்கு மாடி ஆஸ்பத்திரிகளும் இல்லை, நோயாளிகளும் இல்லை.

ஆரோக்கியமான உணவு, சுத்தமான சுற்றுச்சூழல், தினசரி உடல் பயிற்சி. இவையெல்லாம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுட்காலத்துடன் மகிழ்ச்சியாய் வாழ வைக்கிறது. அதைத்தேடி எங்கும் அலையாமல், பேராசைப்படாமல், இருப்பதைக்கொண்டு வாழ்ந்தாலே அமைதி கிடைக்கும் என்பதற்குச் சாட்சியாய் ஹன்சா மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த அதிசய மக்களைச் சந்திப்பதற்காகவே உலகின் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து, இவர்களின் வாழ்வுமுறையைக் கற்கின்றனர். 
=================================================================================
நன்றி: குங்குமம்[தோழி] இதழ்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை!

இது இளவட்டங்களுக்கானது. வயோதிகர்களும் வாசிக்கலாம். இதன்மூலம், இழந்த தங்கள் வாலிபத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்; இன்பசாகரத்தில் மூழ்கித் திளைக்கலாம் என்பதற்கு உத்தரவாதம் உண்டு! 

அகன்ற பெரிய அறை. அதன் நடுவே ராஜாக்களின் ஹம்ச தூளிகா மஞ்சம் போல படுக்கை. அது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அறையெங்கும் மனதைக் கிறங்கடிக்கும் வாசனைத் திரவியங்களின் நறுமணம்.

கதவு திறந்து மூடப்படும் சப்தம்.

எதிரே, அழகிய சிற்பம் போல் சர்வ அலங்காரங்களுடன் அவள்.

அவள் என்னவள்; எனக்கு மட்டுமே உரிமையாக்கப்பட்டவள்.

பால்பழத் தட்டுடன், வண்ண மயிலாக ஒயிலாக நடை பயின்று என்னை நெருங்கினாள்; தட்டை வைத்துவிட்டுச் சட்டெனக் குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

“ஏன் இந்த மூடப் பழக்கம்?” என்று கேட்டு, அவள் தோள் பற்றித் தூக்கி நிறுத்தினேன்.

மெலிதாக அவள் தேகம் நடுங்குவது தெரிந்தது. முகம் முழுக்க வியர்வை முத்துகள்.

அவளின் அழகு மேனியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை நோட்டம் விட்டு, “என்னைத் தவிர வேறு யாரும் உன் அழகை ரசித்துவிடாமல் இருக்கவா அங்கங்களை மறைக்கும் இந்த  அலங்காரம்?” என்று நான் கேட்க, அவள் வதனத்தில் வெட்கம் பரவியது; தலை கவிழ்ந்தாள். அந்த அழகுக் கோலம் என் ஆண்மையைக் கிளர்ந்தெழச் செய்தது.

அவளைப் பஞ்சணையில் அமர வைத்து அவள் அணிந்திருந்த தாலி தவிர, காதணி, மூக்குத்தி உட்பட அத்தனை நகைகளையும் கழற்றினேன்; அவள் அழகை மறைத்திருந்த ஆடைகள் மூலைக்கொன்றாய்ப் பறந்தன.

எதை மறைப்பது, எதைத் தவிர்ப்பது என்று திகைத்து மயங்கி, “என்னங்க இதெல்லாம்?” என்று  முணுமுணுத்தாள் அவள். அந்த முணுமுணுப்பின் பின்னணியில் கட்டுக்கடங்காத தாபம் கரைபுரண்டுகொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

“எதுக்குங்க......” என்று இன்னுமொரு கேள்வியை அவள் எழுப்ப முயன்றபோது, “உன் உடம்பில் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் அத்தனை இடங்களிலும் முத்தம் பதிக்க வேண்டும். அதுக்குத்தான்” என்றேன்.

அவளின் ஒட்டுமொத்த உடம்பும் ஒரு முறை சிலிர்த்து ஓய்ந்தது.

அவளை இதமாகத் தழுவிப் படுக்கையில் கிடத்தியபோது, வான வெளியிலிருந்து வண்ண மலர்களை யாரோ தூவினார்கள். எங்கும் மதுரகீதங்கள் ஒலித்தன. வகை வகையான வாச மலர்கள் நேசமுடன் என் நாசியில் உறவாடின.

ஈருடம்பு என்ற நிலை மாறி ஓருடம்பாய் இருவரும் பிணைந்தோம்.

காற்றுப் புகக்கூட இடைவெளி இல்லை.

அவளிடம்தான் எத்தனை மலர்கள்! எத்தனை கனிகள்!!

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை ஐம்புல இன்பங்களும் பெண்ணிடத்தில் உண்டு என்று பெரியவர்கள் சொன்னது எத்தனை உண்மை. அதை அனுபவபூர்வமாக அறிந்து அனுபவித்துப் பூரித்தேன்.

“நன்றி...நன்றி இறைவா!” என்று ஓசைப்படாமல் என் உள்மனம் முழக்கமிட்டது.

எல்லாம் முடிந்தபோது எங்கள் உடம்புகள் குளிர்ந்திருந்தன.
இப்போது என் சிந்தனை வேறுபுறம் திரும்பியது.

உடலுக்கும் மனதுக்கும் அற்புத சுகம் அளிக்கும் இந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்கிறார்களே, ஏன்?

“பேரின்பம் என்று ஒன்று இருப்பதால்” என்கிறார்கள்.
இருந்துவிட்டுப் போகட்டுமே. இன்னொரு பேரின்பம் இருப்பதால் இது சிற்றின்பம் ஆகிவிடுமா?

ஓர் ஆணும் பெண்ணும் மனம் ஒத்து இணைகிற போது பெறும் இன்பம் பேரின்பம்தான். அனுபவித்து அறிய வேண்டிய உண்மையல்லவா இது.
---------------------------------------------------------------------------------------------------------------------------சேலத்தைச் சேர்ந்த, அரிமா ச. மாதவன்[M.A] எழுதிய, ‘கடவுளிடம் நூறு கேள்விகள்’[பாலாஜி பதிப்பகம், சேலம், முதல் பதிப்பு:2005] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது இப்பதிவு.

கட்டுரை வடிவில் இருந்த நூலின் ஒரு சிறு பகுதியை, எனக்குக் கைவந்த நடையில் மெருகூட்டிக் கதையாக்கித் தந்திருக்கிறேன். 

எழுதி முடித்துத் திரும்ப வாசித்தபோது, விரசமான வாசகங்களும் வர்ணனைகளும் தென்பட்டன. அவற்றை நீக்கிப் பதிவிட்டபோது கதை வெகுவாகச் சுருங்கிவிட்டது தெரிந்தது. கதையைப் பெரிதாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

நூலாசிரியருக்கு என் மனம் நிறைந்த நன்றி.-----------------------------------------------------------------------------------------------------------------------------------