ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஆபாசக் கதைகளின் பிறப்பிடமா மனுதர்ம சாஸ்திரம்?!?!?!?!?!?!?!?!

(பிரம்மாவானவர் மனுஸ்மிருதி சாஸ்திரத்தை உண்டு பண்ணி விதிப்படி பிருகு ரிஷிக்கு முன்னம் ஓதுவித்தார் ; பிருகு ரிஷியும் மரீசி முதலான ரிஷிகளுக்கு ஓதுவித்தார். (மனு அத் 1 சு58)

மனுஸ்மிருதியை (வருணாசிரம தர்மமாகிய வைதீகத் தர்மத்தை)விளக்கி, பிருகு ரிஷி மற்றுமுள்ள ரிஷிகளுக்குச் சொன்னார்.)

பிரம்மாவின் காம விகாரக் கதை: *பரமசிவன் - பார்வதி கல்யாணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தைப் பிரதட்சணம் வருகையில் இடது கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தாள். அப்படி வருகையில் அவளுடைய இடையை ஒட்டிய தொடை பிரம்மா கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்தவுடன் பிரம்மா மோகித்ததால் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் அகஸ்தியன் பிறந்தான்.

*அதுபோலவே பிரம்மா மறுபடியும் தொடையைப் பார்க்க மேலும், இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை விருட்சபச்சை முதலிய அநேக செடிகளில்விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள் பிறந்தார்கள்.

*அவ்விடம் விட்டுப்போகும்போது ஒரு சுடலைச் சாம்பலில் இந்திரியத்தை விட அதில் பூரிச்சிரவனென்கிற இராட்சசன் பிறந்தான்.

*அவ்விடத்திலுள்ள எலும்புகளைப் பொறுக்கி ஒன்றாய்ச் சேர்த்து அதிலே இந்திரியத்தை விட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.

*அவ்விடம் விட்டுபோகையில், சிறிது இந்திரியம் ஸ்கலிதமாகிக் கீழே விழ அதை ஒரு பட்சி புசித்து அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

*பிறகு தடாகத்தில் கொஞ்சம் இந்திரியம் விட அதை மண்டூகம்(தவளை) புசித்து அதன் வயிற்றில் மண்டோதரியென்கிற பெண் பிறந்தாள்.

*மிகுந்த இந்திரியத்தைக் குளத்தில் தாமரைப் பூவில் விட அதில் பத்மை என்கின்ற புத்திரி பிறந்தாள்

*அந்தத் தன் புத்திரியான பத்மையின் அழகைக் கண்டு மோகித்து,  பிரம்மன் அவளைப் புணர விரும்ப, அவள் சம்மதிக்க மறுக்க அவளுக்குச் சமாதானமாக வேத வாக்கியத்தைச் சொன்னார் பிரம்மா: 

“மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத

சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,

ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

மாதரம், ஸீரஞ்சதி , ரோஹதி.”

இதன் பொருள்- புத்திரார்த்த நிமித்தம்ட, தாய், தமக்கை, மகள், என்று யா ரோடாயினும் கூடலாம் என்பதாகும்.

*பின் காம விகாரத்தினால் இந்திரன் உத்திரவுப்படி திலோத்தமை 4 திசையிலும் ஆடியதால் பிரம்மாவுக்கு 4 தலையும் உயரப் பறந்து ஆடி 5 ஆவது தலையும் ஆட, மோகங்கொண்டு திலோத்தமையைத் தொடர்ந்து போகையில் ஈஸ்வரன் ஒரு தலையை அறுத்து எறிந்தான்.

*பின் பிரம்மன் காடுகளில் அலைந்து திரிகையில் ஒரு புதரிலிருந்த பெண் கரடியைக் கண்டு அதைக் கூடி அதன் வயிற்றில் கரடி முகத்தோடு ஓர் புத்திரன்[ஜம்புவந்தன்] பிறந்தான்.

*பின் ஊர்வசி என்பவளிடம் சில உடன்படிக்கை செய்து, முன் பத்மையிடத்தில் ஆக்குஷணஞ் செய்த அண்டத்திலுள்ள இந்திரியத்தை ஊர்வசி கர்ப்பத்தில் விட, அதில் வசிஷ்டன் பிறந்தான், அப்புத்திரனுக்குத் தன் பதவியைக் கொடுத்து பிரம்மா தபோவனமடைந்தார்.

* கலைக்கோட்டு ரிஷி – மானுக்கும்

கவுசிகர் – குயத்திக்கும்

ஜம்பகர் – நரிக்கும்

வால்மீகி – வேடனுக்கும்

அகஸ்தியர் – குடத்திலும்

வியாசர் – செம்படத்திலும்

வசிஷ்டர் – ஊர்வசிக்கும்

காதனசல்லியர் – விதவைக்கும்

மாண்டவியர் – தவளைக்கும்

காங்கேயர் – கழுதைக்கும்

சவுனகர் – நாய்க்கும்

கணாதர் – கோட்டானுக்கும்

கர் – கிளிக்கும்

ஜாம்புவந்தர் – கரடிக்கும்

அஸ்வத்தாமன் – குதிரைக்கும் பிறந்தனராம்.

=================================================================================================நன்றி: https://smuthukumaran.wordpress.com/2009/10/23/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/

சனி, 31 அக்டோபர், 2020

இலவசம்!...ஆடு, மாடு...பின்னே கடவுள்!!!

[மனிதகுலத்தின் முதல் தேவை மனிதாபிமானம்]

இன்று[31.10.2020] பிற்பகல் 02.15 மணிக்கு 'பாலிமர்' தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. 

வேறு வேறு செய்திகளுக்கிடையே, 'திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவசத் தரிசனம். அனுமதிச் சீட்டு வாங்க முண்டியடிக்கும் பக்தர்கள்' என்னும் செய்தியும் இடம்பெற்றிருந்தது. அதற்கான பின்னணி நிகழ்வும் திரையில் காட்டப்பட்டது.

கடவுள் எனப்படுபவர்தான் உயிர்களைப் படைத்தார் என்றால், அவரால் உயிர்கள் பெறும் இன்பங்களைக் காட்டிலும் பெறும் துன்பங்களின் அளவு மிக மிக மிகப் பல மடங்கு அதிகம் என்னும் பகுத்தறிவாளரின் கூற்றை நம்மவரில் பலரும் உணரும் நிலையில் இல்லை.

அவரை வழிபடுவதாலோ, நேர்ந்துகொள்வதாலோ, கோயில்களில் குடியேற்றி விழாக்கள் எடுத்துக் கொண்டாடுவதாலோ எந்தவொரு பயனும் இல்லை என்று நற்சிந்தனையாளர்கள் சொல்வதை இந்த மானுட ஜாதியாரில் பெரும்பாலோர் நம்பத் தயாராயில்லை.

காலங்காலமாய்ப் பல கொள்ளை நோய்களின் தாக்குதலில் கொத்துக் கொத்தாய்ப் பல லட்சம் பேர் பலியான போதெல்லாம் கடவுள்[கள்] என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்கும் துணிவு எந்தவொரு பக்தனுக்கும் இல்லை.

இன்றளவில், கொரோனா கொடுந்தொற்றால் லட்சக்கணக்கானவர்கள் படும் துன்பங்களையும் உயிரிழப்புகளையும் கண்கூடாகப் பார்க்க நேர்ந்தும், புற்றீசல்களாய்க் கோயில்களை நோக்கிப் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

'கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை முதலில் கோயில்களுக்கு அனுப்புவோம். கடவுள் குணப்படுத்துகிறாரா பார்ப்போம்' என்று சொல்லும் துணிவு எவருக்குமே இல்லை என்பது பரிதாபம்.

முற்றுப்பெறாத தொடர் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களே இந்தக் கற்பனைக் கடவுள்கள்தான். இதை உணராதவரை இந்த மனித ஜாதி திருந்தப்போவதில்லை.

அடுத்தடுத்துப் பல கொரோனாக்கள் தாக்குதல் தொடுத்தாலும், கடவுளி[களி]ன் காலடிகளில் கிடந்து புலம்பும் அறியாமையிலிருந்து இவர்கள் விடுபடுவது இப்போதைக்கு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது! 

நோயற்றவர்கள் நோயுற்றவர்களுக்கு உதவலாம். வசதி படைத்தவர்கள் வசதியற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். முடிந்தவரை பண உதவி செய்து ஆட்சியாளரையும் அறிவியல் அறிஞரையும் ஊக்குவிக்கலாம். கடவுளுக்காக நேரத்தையும் பொருளையும் வீணடிக்காமல் இவை போன்ற நல்ல செயல்களில் மனதைச் செலுத்தினால் மட்டுமே மனித ஜாதி உருப்படும் என்பது உறுதி.


ஏழுமலையான் கோயிலில் எனக்கு மிக மிக மிகப் பிடித்தது இது மட்டுமே! ஹி...ஹி...ஹி!!