வியாழன், 18 மார்ச், 2021

அம்மணக் கோலத்தில் அய்யாக்கண்ணு 'மனுத் தாக்கல்'!!!

#தங்களின் சங்கம்[தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்] வலியுறுத்திய கோரிக்கைகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு செவி சாய்க்காததால்,  தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் அரவக்குறிச்சி, திருவையாறு, தளி, திருவண்ணாமலை, திட்டக்குடி ஆகிய 5 தொகுதிகளில் தங்களின் சங்கம் சார்பாக 5 பேர் அம்மணமாக[நிர்வாணமாக]ச் சென்று மனுத் தாக்கல் செய்யவிருப்பதாக, சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்# என்று 'தினகரன்' நாளிதழை மேற்கோள் காட்டி, செய்தி வெளியிட்டுள்ளது பி.பி.சி. செய்தி நிறுவனம்[https://www.bbc.com/tamil/india-56439307].

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எவை என்பதையும் அய்யாக்கண்ணு அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.

அம்மணக் கோலத்தில் சென்று 'மனுத் தாக்கல்' செய்யத் துணிந்த அஞ்சாநெஞ்சரான அய்யாக்கண்ணு அவர்களைப் பாராட்டுவதோடு, யாமறிந்ததோர் ஆலோசனையையும் அவருக்கு வழங்கிட விழைகிறோம்.

அய்யாக்கண்ணு அவர்களே,

பிறந்த மேனியராய் 'மனுத் தாக்கல்' செய்யும் திட்டத்தை நீங்கள் அம்பலப்படுத்திவிட்டீர்கள். தேர்தல் அதிகாரியின் அலுவலகம் நோக்கிப் புறப்படும்போதே போலீசு உங்களைக் கட்டிய கோவணத்தோடு கைது செய்து வாகனத்தில் ஏற்றிவிடும். ரகசியம் காக்காதது நீங்கள் செய்த மிகப் பெரும் தவறு.

அதோடுகூட,  நீங்கள் நிர்வாணமாகச் சென்று 'மனுத் தாக்கல்' செய்வதால் பலன் ஏதும் விளைந்துவிடாது என்பதை உணருங்கள். 'பாஜக'வைத் தண்டிக்க விரும்பும் உங்களுக்கு நாம் வழங்கும் மகத்தான மாற்று யோசனை ஒன்றுளது. அது.....

*அம்மணக் கோலத்தில் சென்று 'மனுத் தாக்கல்' செய்யும் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக முதலில் அறிவியுங்கள்[இது காவல்துறையை ஏமாற்றும் ஒரு தந்திர உத்தி].

*வாக்கெடுப்புக்குச் சில நாட்கள் இருக்கும்போது, வேட்பாளர்களின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டிவிடும். அத்தகையதொரு சூழலில், பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் உங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆட்களை அணி பிரித்து அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 100 பேராவது இடம்பெறுதல் மிகவும் அவசியம்.

*தெருக்களில் சன நெரிசல் மிகுந்து காணப்படும் தருணம் பார்த்து, உங்கள் அணியினர் பா.ஜ.க. கொடியைக் கையில் ஏந்தி, "உங்கள் ஓட்டு பா.ஜ.க.வுக்கே" என்று முழக்கமிட்டவாறு அணிவகுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது ஒட்டுத் துணிகூட உடம்பில் இருத்தல் கூடாது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளுதல் மிக மிக மிக முக்கியம். 'தேமே' என்று கால்கடுக்க நின்றுகொண்டிருக்கும் வெகு சில போலீசாரால் உடனடியாக அவர்களைக் கைது செய்ய இயலாது என்பதைக் கருத்தில் கொள்க.

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் இதை நிகழ்த்திக் காட்டினால் 20 வேட்பாளர்களும் வாக்காளர்களின் கடும் வசவுக்கு உள்ளாகிப் படுதோல்வியைச் சந்திப்பார்கள் என்பதில் எள்முனை அளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

எம் அன்புக்குரிய அய்யாக்கண்ணு அவர்களே, 

இத்திட்டம் நிறைவேறும்வரை, இது நீங்களும் நாமும் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கட்டும்.

வென்றிடுக விவசாயிகள் சங்கம்! தோற்றிடுக பாஜக வேட்பாளர்கள்!!  

======================================================================================

கொசுறுச் செய்தி:

#தமிழகச் சட்டசபைத் தேர்தல் ஏப்., 6இல் நடக்கிறது. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளைத் தவிர, மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு, இந்தியத் தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. சின்னங்களின் பெயர்கள் ஆங்கிலம், ஹிந்தியில் இடம் பெற்றுள்ளன. அவை, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலக அறிவிப்புப் பலகையில், சுயேச்சை வேட்பாளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆப்பிள், ஏர் கண்டிஷனர், அலமாரி, பலுான், பேங்கிள்ஸ், பேட், பேட்ஸ்மேன், பெல்ட், பெஞ்ச், பிரட், பாக்ஸ், பக்கெட், கேக், பிஸ்கட், பிளாக்போர்டு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றுள்ளன# -தினமலர்

புதன், 17 மார்ச், 2021

சீச்சீ...ச்சீய்...இந்தச் சாமியார்கள்!!!

சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று தங்கியிருந்தபோது, ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணித்துச் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.

சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன் பொருட்டே ஐ.நா.சபை சாயிபாபா ஆசிரமத்துடன் சேர்ந்து செய்யவிருந்த நலப்பணித் திட்டங்களை ரத்து செய்தது. புட்டபர்த்தியில் பல பாலியல் வக்கிரக் கொலைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் சாயிபாபா, மரணித்த பின்னரும் இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார்.  ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார்.

அருளாசி வழங்க[?] 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் பெரிய பெரிய மனிதர்களே விழுகிறார்கள். அவரின் வருமான வரி ஏய்ப்புக்கும் உதவி செய்கிறார்கள். வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் “கட்டிப்பிடி’ ஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் கால் கடுக்கக் காத்து நிற்கிறார்கள்.

"விதர்பா பகுதியில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள்" என்று திமிராகப் பேசும் இரவி சங்கரைத் தகவல் தொழில் நுட்ப யுகத்தின் குரு என்று பத்திரிக்கைகள் செல்லமாக அழைக்கின்றன.

அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்ஐ.பி.என். தொலைக்காட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. ஆயினும் சங்கபரிவாரங்கள் இச்சாமியார்களைக் கைவிடவில்லை; போற்றிப் புகழ்ந்து அவர்தம் புகழ் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

போலி வேடம் அம்பலப்படுத்தப்பட்ட பிறகும், சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை, இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கிவிடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன போலிச் சாமியார்கள்.

நன்றி: இளநம்பி[புதிய கலாச்சாரம்]

https://rsyf.wordpress.com/tag/