புதன், 24 மார்ச், 2021

கூவுங்க கூவுங்க! ஓட்டுக்கு 'ரேட்' கேட்டுக் கூவுங்க வாக்காளர்களே!!

நம் 'உத்தமப் புத்திரர்'களான வாக்காளர்களுக்கு 'விழிப்புணர்வு' ஊட்டுதல் பொருட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எழுதிய பதிவு இது. எதிர்பார்த்த பலன் விளையவில்லை. 

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்குக் கணிசமான நாட்களே எஞ்சியுள்ளதால், வாக்காளப் பெருமக்களின் நலம் கருதி இதை மீள்பதிவாக வெளியிடுகிறேன்.

குத்தாட்டங்களுக்கும், அரசியல்வாதிகளின் வெத்துவேட்டுக் கூப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் ஊடகக்காரர்கள், பொதுமக்கள் அறியும் வகையில் இப்பதிவைப் பிரபலப்படுத்துவார்களேயானால், ஏழேழு பிறவிகளிலும் நான் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருப்பேன்.

மீள்பதிவு.....

வாக்காளர்களே,

உங்களிடம் ஓட்டுக் கேட்க வரும் வேட்பாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவும் செய்வார்கள்[தேர்தலில் வெற்றிபெறும் நோக்கம் இன்றி வேறு காரணங்களுக்காகப் போட்டியிடுபவர்கள் இதற்கு விதிவிலக்கு].

வேட்பாளரின் பொருளாதாரம், அவர் சார்ந்துள்ள கட்சியின் பணபலம் போன்றவற்றிற்கேற்ப வாக்குக்கான தொகை மாறுபடக்கூடும்.

ஓட்டுக்குப் பணம் தருவது குற்றமாகும் என்று ஓவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் வெளியிடும் எச்சரிக்கையையும் மீறி,  ஓட்டுக்குப் பணம் தருவதும் பெறுவதும் நடைமுறையில் உள்ளது.

இது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். ஆட்சியாளர்களும் அறிவார்கள். ஆனால், தடுப்பதற்கான தீவிர நடவடிக்கை இல்லை. அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை.

இந்நிலையில்.....

ஓட்டுக்கான [லஞ்சத்]தொகையை ஆணையமே நிர்ணயம் செய்து, தேர்தல் நடைமுறை விதிகளில் இதையும் ஒன்றாக மாற்றியமைப்பதன் மூலம் தொடரும் இந்தக் குற்றத்தைக் குற்றமற்றதாக்கிவிடலாம்; எதிர்பார்த்துக் காத்திருந்தும், பணம் கிடைக்காமல், கணிசமானவர்கள் ஏமாந்து தவித்துக் கிடப்பதையும் தவிர்க்கலாம்.

போட்டியிடும் வேட்பாளரின் பொருளாதாரப் பின்புலத்தையும், அவர் சார்ந்துள்ள கட்சியின் நிதி இருப்பையும் கருத்தில்கொண்டு ஒட்டுக்கான கையூட்டுத் தொகையை நிர்ணயம் செய்யலாம்.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலேயே இதற்கான ஆணையை வெளியிட்டு நடமுறைப்படுத்துமாறு வாக்காளப் பெருமக்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைப்பது மிக மிக மிக முக்கியத் தேவையாகும்; கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஒருங்கிணைந்த ஓங்கிய குரலில் முழங்கலாம்.

நம் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்கள்.....

முழங்குவார்களா, 'நமக்கு வரவேண்டியது வந்தால் போதும்' என்று முடங்கிக் கிடப்பார்களா?!#

செவ்வாய், 23 மார்ச், 2021

பொங்கும் அழகுடன் பொம்மைப் பெண்டாட்டிகள்!!!


இந்த ஆள் பேரு 'யூரி டோலோச்கோ'; கஜகஸ்தானைச் சேர்ந்தவன்.

ரெண்டு பெண்டாட்டிக்காரன்; இன்னும் பல பெண்களைக் கட்டிக்கப் போறானாம்.

இவன் ஒரு பாடி பில்டர். இவனைச் சமாளிக்க முடியாம முதல் மனைவியான 'மார்கோ' உடைஞ்சிபோனாளாம். பழுது பார்க்க முடியலையாம்.....

'அது என்ன, பெண் உடைஞ்சி போறதும், பழுது பார்க்குறதும்'னு தலையைச் சொறியாதீங்க. இந்த ஆள் கல்யாணம் பண்ணிகிட்டது மனுசச் சாதிப் பொண்ணை அல்ல; பொம்மையை. இந்தப் பொம்மையோடுதான் இவன் தாம்பத்திய சுகம் அனுபவிச்சிருக்கான். 

முதல் 'பொம்மை மனைவி'[கடைக்காரங்க ஏமாத்தி வித்துட்டாங்களாம்] உடைஞ்சிபோனதால, அவளை விவாகரத்துச் செய்துட்டு[?], வேறொரு பெண் பொம்மையைக் கல்யாணம் கட்டிகிட்டானாம்.

இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்பற்றுகிற 1,00,000 பேருக்கு[இந்தக் கிறுக்கனுக்கு 1,00,000 பேர். அறிவுஜீவி[???]யான 'பசி'பரமசிவத்துக்கு வெறும் 57 பேர்]. இந்த இரண்டாந்தார பொம்மைப் பெண்டாட்டியை அறிமுகம் செய்திருக்கிறான்.

அதோட தொப்புள் ரொம்பவே அழகாம். 'அது'க்கும் பயன்படும்னு சொல்லி நம்மைக் கடுப்பேத்துறான்.

இது மாதிரியான பொம்மைப் பெண்களைத்தான் இவனுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறான் இவன். பல பொம்மைகளைக் கட்டிக்கப் போறானாம்.

இப்படி, இன்னும் என்னவெல்லாமோ உளறி வைத்திருக்கிறான். கீழே சுட்டி தந்திருக்கேன். வாசிச்சிப் பாருங்க.

மத்த ஆண்களைப் போல,  நிஜமான பொண்ணுகளைக் கல்யாணம் செய்துகிட்டா காலமெல்லாம் அவங்களோடு போராடணும்னு நினைச்சி இவன் பொம்மைப் பொண்ணுகளைக் கட்டிக்கிறானா? இல்லே, பொம்மைகள் தரும் சுகமே போதும்னு நினைக்கிறானா?

இவன் புத்திசாலியா, கிறுக்கனா?

ரொம்பவும் யோசிச்சா நமக்குக் கிறுக்குப் பிடிச்சிடும்! ஹி...ஹி...ஹி!!

https://tamil.samayam.com/viral-corner/omg/bodybuilder-married-a-sex-toy-for-the-second-time-after-a-divorce-with-the-first-one/articleshow/81649884.cms