இந்த ஆள் பேரு 'யூரி டோலோச்கோ'; கஜகஸ்தானைச் சேர்ந்தவன்.
ரெண்டு பெண்டாட்டிக்காரன்; இன்னும் பல பெண்களைக் கட்டிக்கப் போறானாம்.
இவன் ஒரு பாடி பில்டர். இவனைச் சமாளிக்க முடியாம முதல் மனைவியான 'மார்கோ' உடைஞ்சிபோனாளாம். பழுது பார்க்க முடியலையாம்.....
'அது என்ன, பெண் உடைஞ்சி போறதும், பழுது பார்க்குறதும்'னு தலையைச் சொறியாதீங்க. இந்த ஆள் கல்யாணம் பண்ணிகிட்டது மனுசச் சாதிப் பொண்ணை அல்ல; பொம்மையை. இந்தப் பொம்மையோடுதான் இவன் தாம்பத்திய சுகம் அனுபவிச்சிருக்கான்.
முதல் 'பொம்மை மனைவி'[கடைக்காரங்க ஏமாத்தி வித்துட்டாங்களாம்] உடைஞ்சிபோனதால, அவளை விவாகரத்துச் செய்துட்டு[?], வேறொரு பெண் பொம்மையைக் கல்யாணம் கட்டிகிட்டானாம்.
இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்பற்றுகிற 1,00,000 பேருக்கு[இந்தக் கிறுக்கனுக்கு 1,00,000 பேர். அறிவுஜீவி[???]யான 'பசி'பரமசிவத்துக்கு வெறும் 57 பேர்]. இந்த இரண்டாந்தார பொம்மைப் பெண்டாட்டியை அறிமுகம் செய்திருக்கிறான்.
அதோட தொப்புள் ரொம்பவே அழகாம். 'அது'க்கும் பயன்படும்னு சொல்லி நம்மைக் கடுப்பேத்துறான்.
இது மாதிரியான பொம்மைப் பெண்களைத்தான் இவனுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறான் இவன். பல பொம்மைகளைக் கட்டிக்கப் போறானாம்.
இப்படி, இன்னும் என்னவெல்லாமோ உளறி வைத்திருக்கிறான். கீழே சுட்டி தந்திருக்கேன். வாசிச்சிப் பாருங்க.
மத்த ஆண்களைப் போல, நிஜமான பொண்ணுகளைக் கல்யாணம் செய்துகிட்டா காலமெல்லாம் அவங்களோடு போராடணும்னு நினைச்சி இவன் பொம்மைப் பொண்ணுகளைக் கட்டிக்கிறானா? இல்லே, பொம்மைகள் தரும் சுகமே போதும்னு நினைக்கிறானா?
இவன் புத்திசாலியா, கிறுக்கனா?
ரொம்பவும் யோசிச்சா நமக்குக் கிறுக்குப் பிடிச்சிடும்! ஹி...ஹி...ஹி!!
======================================================================================