வியாழன், 19 ஆகஸ்ட், 2021

சிலிர்ப்பூட்டும் 'சீரடி'க் கடவுள்!!!

சாந்த் பட்டேல் என்பவர் ஒரு முறை காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த சீரடி சாய்பாபாவைக் கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படிக் கூறினார். அவரும் சம்மதித்தார். இருவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார்கள்.

இருவரும் புகைபிடிக்க விரும்பினார்கள். நெருப்பு தேவையாக இருந்தது.

!!!பாபா, தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தைத் தோண்ட நெருப்பு வந்தது. இருவரும் புகை பிடித்தார்கள்.

"தாகமாக இருக்கிறது" என்றார் பட்டேல்.

!!!பாபா, தன் கைத்தடியால் பூமியின் மீது ஓங்கி அடித்தார். தண்ணீர் பீறிட்டது. தாகம் தணிந்தார் பட்டேல்.

!!!பட்டேலின் வேண்டுகோளின்படி, காணாமல் போயிருந்த பட்டேலின் குதிரை இருக்குமிடத்தைப் பாபா கூறினார். பெருமகிழ்ச்சிக்கு உள்ளானார் பட்டேல்.

பாபாவின் மகிமையை அறிந்த பட்டேல் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, சில நாட்கள் தங்கவைத்து உபசரித்தார்.....

!!!.....ஒருமுறை பாபா, ஒரு மசூதிக்கு அருகிருந்த  ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். மரத்து இலைகளின் கசப்புச் சுவை இனிப்பாக மாறிய அதிசயம் நிகழ்ந்தது.

!!!!!இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள், "நீங்கள் யார்?" என்று கேட்க, "நானே அல்லா. நானே சங்கரன். நானே ஸ்ரீகிருஷ்ணன். நானே அனுமன்" என்றார். மக்கள் அவரைத் தொழுது கழிபேருவகை எய்தினார்கள்.

ஒருநாள், ஒரு பசுமாட்டுக்காரனிடம், "கொஞ்சம் பால கறந்து தா" என்றார்.

அவன், "இது மலட்டுப்பசு. பால் தராது" என்றான்.

!!!அதைப் பொருட்படுத்தாத பாபா, பசுவின் மடியில் கை வைத்துத் தடவிக் கொடுத்தார். பால் சுரக்க ஆரம்பித்தது.

!!!பிறிதொரு முறை, இறந்து கிடந்த ஒருவன் மீது, தன் குருவின் காலடிபட்ட மண்ணை அள்ளித் தூவினார். செத்தவன் உயிர்பெற்று எழுந்தான்.

!!!இவர் சீரடியில் இருந்தபோது, தான் தங்கியிருந்த துவாரகாமாயி என்னும் மசூதியில் தினமும் விளக்கேற்றுவார். இதற்கான எண்ணையை இரு வியாபாரிகள் கொடுத்துவந்தார்கள். பாபாவின் சக்தியைச் சோதிக்க நினைத்த அவர்கள் ஒரு நாள் எண்ணை தரவில்லை. பாபா, தண்ணீரை ஊற்றி விளக்கெரித்தார்.

!!!பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும், அத்தனை பேரும் உண்ணும் வகையில், இருக்கிற கொஞ்சம் உணவையே பல மடங்காகப் பெருகச் செய்வார் அவர்.

இப்படி, எண்ணிலடங்காத அற்புதங்களை நிகழ்த்தியதாக இந்தச் சாயிபாபாவைப் பற்றி ஊடகங்கள் நிறையவே எழுதின; எழுதிக்கொண்டிருக்கின்றன.  

சீரடி சாயிபாபா, 1918ஆம் ஆண்டு இறந்தார். இன்றளவும், உலகெங்கிலுமிருந்து  பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் சீரடிக் கோயிலுக்கு வந்துசெல்கிறார்கள்.

                                             *  *  *

மனிதராகப் பிறந்த எல்லோருமே மனிதர்கள்தான். மகான்கள், அவதாரங்கள் என்று எவரும் இயல்பாக உருவாவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்டவர்களில் இந்தச் சீரடி சாய்பாபாவும் ஒருவர்.

இவருடைய உண்மையான தொடக்ககால வாழ்க்கை வரலாறு எவருக்கும் தெரியாது.

மேற்குறிப்பிடப்பட்ட பட்டேல் என்னும் நபர், இவரை அதிசய மனிதர் என்று சொல்லிவைக்க, ஆளாளுக்குக் கற்பனைக் கதைகள் கட்டி, இவரை மகானாக மட்டுமல்லாமல் கடவுளாகவும் ஆக்கிவிட்டார்கள்.

கத்தியால் நிலத்தைத் தோண்டி நெருப்பைக் கண்டறிவது, தடியால் தரையைத் தட்டி நீரை வரவழைப்பது, செத்தவரைப் பிழைக்க வைப்பது என்றிவை போன்றவையெல்லாம்  நடைமுறைச் சாத்தியமில்லை என்பதை அறியும் பக்குவம் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதற்கு, ஊரூருக்குப் பாபா கோயில்கள் உருவாகியிருப்பதே சான்றாகும்.

நம் முன்னோர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஏராளம். அவர்களையெல்லாம்விடவும் மாயாஜாலங்கள் நிகழ்த்தக்கூடிய கில்லாடிக் கடவுள்கள் நம்மவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். தேவையைத் தமக்குத்தாமே நிறைவு செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.

காலப்போக்கில் இன்னும் பல மாயாஜாலக் கடவுள்கள் இங்கே உருவாக்கப்படுவார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

புதன், 18 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தான் ஆண்கள் இத்தனை கோழைகளா?!?!

#காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றிய பிறகு, அங்கே கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. ஆப்கான் நாட்டவர்கள், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடி வருகின்றனர். நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே[அரிதாக ஓரிரு பெண் குழந்தைகள் தென்படுகிறார்கள்] காணப்படுகின்றனர். அந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள் இல்லை. அப்படியானால், ஆப்கான் நாட்டில் உள்ள பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில்(Afghanistan) நிலைமை குறித்த ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஆப்கான் மக்களின் வலியைக் கூறியுள்ளார். உலகம் ஆப்கானிஸ்தான் மக்களை பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறும் அவர், சில நாடுகள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பட்டை எடுத்துள்ளனர் என மிகவும் வருந்தி அழுவது மனதை உருக்குவதாக உள்ளது.

"We do not count because we were born in Afghanistan . . . We’ll die slowly in history.” I am heartbroken. The women & girls of Afghanistan have been abandoned. What of their dreams, hopes? The rights they have fought two decades for? #PrayforAfghanistan pic.twitter.com/Os6aSRv5RK"

காணொலி:

https://zeenews.india.com/tamil/social/watch-viral-video-of-a-afghanistan-girl-crying-that-nobody-cares-for-afghan-people-368630

                                                     *  *  *

ஆப்கானிஸ்தானில், ஆட்சியைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டுப் பெண்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கும் வேளையில், முதல் பெண் மேயர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். 

https://www.puthiyathalaimurai.com/newsview/113179/Afghanistan-s-first-female-mayor-said-she-is-Waiting-for-Taliban 

                                                    *  *  *

90-களில் தாலிபான் ஆட்சி இருந்தபோது அனுபவித்த கொடுமைகளை ஆப்கானிஸ்தான் மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் தாலிபான் கைகளில் முழுமையாக அதிகாரம் செல்வதற்கு முன்பு அவர்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். 

காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் (Afghanistan) மக்களின் நிலையை விவரிக்கும் ஒரு படம் சமீபத்தில் வைரலானது. இது, பேருந்தில் தொங்கிக்கொண்டு மக்கள்  பயணிப்பது போன்றது. பறக்கத் தொடங்கிய விமானத்தில் தொங்கிய மூன்று பேர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இந்தக் காட்சி உலகெங்கிலும் உள்ள மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.

விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது

இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும் அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்கலாம்.

                                                             *  *  *


மேற்கண்ட செய்திகளில் நம் மனதை உறுத்திய/வருத்திய பகுதிகள் கீழ்க்காண்பவை.

//நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். அந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள் இல்லை. அப்படியானால், ஆப்கான் நாட்டில் உள்ள பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.//

//பெண் மேயரின் கண்ணீர்!//

!!!விமானம் ஏறித் தப்பியோடும் ஆண்மகன்கள் எல்லோருமே பெண்களுக்குப் பிறந்தவர்கள்தான்.

உடன்பிறப்புகள் இருந்தால் அவர்களில் பெண்களும் இருக்கக்கூடும்.

அவர்களையெல்லாம் தவிக்கவிட்டு, தாம் உயிர்பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடுகிற இவர்களுக்குத் தங்களின் உயிர் மீது[மட்டும்] அத்தனை ஆசையா? அன்பு, பாசம், பற்று என்பவையெல்லாம் இவர்களுக்கு என்னவென்றே தெரியாதா?

உலகில் அதிசய நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளதாகச் சொல்வார்கள். அவற்றில் இதுவும் ஒன்று. ஆனால், இது வெறும் அதிசயம் அல்ல; பேரதிசயம்!!!
====================================================================================

https://zeenews.india.com/tamil/world/afghanistan-updates-inside-picture-of-the-american-plane-from-which-people-fell-goes-viral-368626