வெள்ளி, 8 அக்டோபர், 2021

"உப்பு வாங்கலையோ... உப்பு... உப்பு"![குடும்பத் தலைவிகளுக்கான சிறப்புப் பதிவு]



சந்திரனிலும் செவ்வாயிலும் குடியேறிவிட மனிதர்கள அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் யுகத்திலும், மகாலட்சுமியும், தேவர்களும், பித்ருக்களும்[மண்டையைப் போட்ட நம் மூதாதையர்கள்] காலை நேரத்தில் நம் வீடு தேடி வருகிறார்கள் என்று சொல்லுகிற ஆன்மிகப் பிரச்சாரகர்கள் இன்றும்[அக்டோபர் 08, 2021] இருக்கிறார்கள் என்பதற்குக் கீழ்க்காணும் நாளிதழ்க் கட்டுரையே சான்று.

வழக்கம்போல, நமக்கு எழும் சந்தேகங்களையும் பதிவு['அடைப்புக்குறி'க்குள்] செய்திருக்கிறோம்.

                                              *  *  *

#வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க, குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:

*பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக்கூடாது[தேவர்கள்... சரி, தேவதைகள் வருவதில்லையா?].

*காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும்போது "மகாலட்சுமியே வருக" என்று 3 முறை கூற வேண்டும்[ஒன்னு, ரெண்டு தடவையோடு நிறுத்திட்டா, திரும்பிப் போயிடுவாங்களோ?].

*காலையில் 4.30 மணிலிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்[கோதுமை மாவு, ராகி மாவிலெல்லாம் போடுறது தப்பா?].

*காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாகவும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்[மாலை இருட்டுக்கு விளக்கு. காலையில் விளக்கு எதுக்கு? 

*விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது[இதெல்லாம் பொண்ணுக சமாச்சாரம். இதுல ஏய்யா தலையிடுறீங்க?]. 

*பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது[காசு கொடுத்தோ கைமாத்தாவோ வாங்குவதில் தப்பில்லையே?].

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக்கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்[சுமங்கலிகளுக்குக் குங்குமம்... சரி. 'சுமங்கலன்கள்'[ஆண்களில் பெண்டாட்டியை இழக்காதவர்கள்] வந்தா எதைக் கொடுக்கிறதாம்?]

*பால் பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்[பொம்மணாட்டிகளுக்கு இதுகூடவா தெரியாது?].

*வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்[கல் உப்பா, தூள் உப்பா?

*வெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடாது[கடன்தானே கூடாது; கைமாத்து?]

*அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது[வறுத்தா வறுபடாதா? புடைத்தால் புடைபடாதா?].

*செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்[ எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது[சில பெண்கள், தினசரி குளிப்பதே இல்லை['மேக்கப் மட்டும்] மகாலட்சுமி கோபிப்பாரா?]

*வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்[கொடுத்துடலாம். குமரிகளிலிருந்து கிழவிகள்வரை கழுத்தில்(மட்டும்!) துப்பட்டாவைச் சுத்திக்கிறாங்க. வருபவர் சுமங்கலியா அமங்கலியான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதாம்?]#

=========================================================================

உதவி: https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/10/08101035/3080429/Mahalakshmi-worship.vpf  -

புதன், 6 அக்டோபர், 2021

இவர்கள் கொடுத்துவைத்தவர்களா கொடுப்பினை இல்லாதவர்களா?!

*தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் சில சமூக மக்களிடம் ஒரு விசித்திர வழக்கம் உள்ளது. அது, அங்குப் பலதார மணத்துக்கு அனுமதி உண்டு. ஆனால், பகலில் யாரும் உடலுறவு கொள்ளுதல் கூடாது[விளக்குகளை எரியவிட்டு இரவையே பகலாக்கும் கில்லாடிகளும் அங்கே இருப்பார்களே?!].

*'ஹைதி' தீவில் வாழும் மக்கள், நிர்வாணமாகச் சேற்றில் புரண்டு 'காதல்' கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்[நிர்வாணமா புரளணும்னா எங்கேயும் புரளலாம். எதுக்குச் சேறு மோரெல்லாம்?]. 

*'ட்ரோபிரியாண்டர்ஸ்' என்னும் இந்த மக்கள் ஜெனீவா அருகில் உள்ள ஒரு தீவில் வசிக்கிறார்கள். இங்கே பெண்கள் மேலாடை உடுத்தத் தேவையில்லை[அதென்ன, மேலாடை மட்டும்?!].

*ஜெனீவாவில், 7 வயதிற்குப் பிறகு ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளுடன் பழக அனுமதிப்பதில்லை, இது அங்கு வாழும் 'பாப்புவா' என்னும் பழங்குடி மக்களிடம் காணப்படும்  வழக்கமாகும். அந்தப் பத்து ஆண்டுகளும் அவர்கள் பெண்களுடன் பாலுறவு கொள்வதைத் தடுக்க, அவர்களுடைய பிறப்புறுப்புகள் துளையிடப்பட்டு, தோல்கள் பிய்க்கப்படும்[அய்யய்யோ பாவம் ஆண்கள்!].

*ஆண்களின் பிறப்புறுப்பின் நுனி வெட்டப்பட்டு, அதிலிருந்து சொட்டும் ரத்தத் துளிகளை நெருப்பில் விழச் செய்தால், அந்த ஆண்கள் மனத் தூய்மையுடன் வாழ்வார்கள் என்னும் நம்பிக்கை ஆஸ்திரேலியாவின் Mardudjaraa Aborigines என்னும் மக்களிடம் உள்ளது[முழுசையும் வெட்டிட்டா, சுத்தச் சன்னியாசி ஆயிடுவாங்களே?!].

*Mozambique  என்னும் தீவில், எங்கேயும் எப்போதும் யாரும் எவருக்கும் முத்தம் தருதல் கூடாது[கிழடுகளுக்கு மட்டும்னு சட்டம் போட்டிருக்கலாம்].

*தென் பசிபிக் கடலுக்கு அருகில் உள்ள 'மங்கையா' என்னும் தீவில் ஆண்களுக்கு 'வயதான' பெண்கள் பாலுறவுக் கலை கற்றுத் தருவது வழக்கத்தில் உள்ளது['வயசுக்கு வந்த' பெண்கள் என்பதைத்தான் 'வயதான' பெண்கள் என்று தவறுதலா இப்படிச் சொல்லிட்டாங்களோ?!].

*இந்தோனேசியாவில் ஒரு சாரார் 'pon' எனப்படும்  கொண்டாட்டம் நடத்துகிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தில், ஓர் ஆண் தன் இணையைத் தவிர்த்து, பிற பெண்களுடன் பாலுறவு கொள்வது கட்டாயம்[மிக நல்ல சட்டமய்யா!].

*கம்போடியாவில் உள்ள 'க்ரேயுங்க்' பழங்குடி மக்கள் பெண்கள் விவாகரத்துச் செய்வதை அனுமதிப்பதில்லை. அதனால், மணம் புரியவிருக்கும் ஆணுடன் ஒரு நாள் முழுவதையும் தனிமையில் கழித்திட வேண்டும்[ஒரு நாளில் முழுசாத் தெரிஞ்சிக்கவும் புரிஞ்சிக்கவும் முடியுமா?]

=========================================================================

குறிப்பு: அடைப்புக்குள்[   ] அடியேனின் சந்தேகங்கள்!

உதவி: https://www.seithipunal.com/life-style/craziest-sexual-customs-around-the-worldwide