செவ்வாய், 4 ஜனவரி, 2022

பாம்புகளுக்கும் நன்றியுணர்ச்சி இல்லை!!!

மனிதர்களில் மிகப் பலருக்கு நன்றியுணர்ச்சி இல்லை என்பது போல், பாம்புகளுக்கும் அது இல்லை என்பது வேதனைப்படத் தக்க விசயமாக உள்ளது.

பாம்பினத்தைக் கடவுளினத்துக்குச் சமமாக நம் முன்னோர்கள் கருதி வழிபட்டார்கள் என்பதற்கு ஏராள எடுத்துக்காட்டுகள் உள்ளன. 

சிலவற்றிற்கு மட்டுமான பட்டியல்:

*உலக அளவில் வகை வகையான கடவுளர்கள் இருப்பினும், முழுமுதல் கடவுள் என்று சொல்லப்படும் சிவபெருமானின் திருச்சடையில் பாம்பு வாசம் செய்வதாகச் சொல்லி நம் மூதாதையர் வழிபட்டனர்.

*பாம்பைப் பெண் தெய்வமாக்கி, 'நாகாத்தா'[நாகம்+ஆத்தா] என்று பெயர் சூட்டி, கோயிலும் கட்டி, பொங்கல் வைத்துப் பாலாபிஷேகம் செய்வதை வழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

*கரையான் புற்றுதானே என்று அலட்சியப்படுத்தாமல், அங்குக் குடிகொண்டிருக்கும் பாம்புக் கடவுளுக்காகப் பலாபிஷேகம், முட்டை அபிஷேகம்[முட்டையை உடைத்துப் புற்றில் ஊற்றுதல்] எல்லாம் செய்து வழிபடுகிறார்கள்.

*வாயில் முள் குத்தியதால் சொல்லொணாத வேதனைக்கு உள்ளான ஒரு பாம்பின் வாயிலிருந்த அந்த முள்ளை, நம் முன்னோர்களில் ஒருவர் பிடுங்கியெறிந்து உதவியதாகச் சொல்லப்படும் 'அதிசய' வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

*'பாம்பின் பல்லில் இருக்கும் நஞ்சு ஒரு காலக்கட்டதில் ரத்தினக் கற்களாக மாறும்' என்பன போன்ற கதைகளைப் படைத்துக் காலங்காலமாக அவற்றைப் பரப்புரையும் செய்து, அந்த இனத்திற்குப் பெருமை சேர்த்தார்கள்... சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

*பாம்பானது, உடல் வேறாகவும் தலை வேறாகவும் துண்டிக்கப்பட்டாலும், காலையில் உதயமான சூரியன் மாலையில் மறையும்வரை காத்திருந்து அதற்கு மரியாதை செலுத்திய பின்னரே அது உயிர் துறக்கும் என்பதாகச் சக மனிதர்களை நம்பவைத்துப் பாம்பினத்திற்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

*தவறுதலாக ஒரு பாம்பைக் கொன்றுவிட நேர்ந்தால், கொல்லப்பட்ட பாம்பை மண்ணில் புதைத்துப் பாலூற்றி வழிபடும் சடங்கினை இன்றளவும் தொடர்ந்து செய்கிறார்கள்.

*பாம்பினத்தில், ஐந்து தலை நாகம், ஏழு தலை நாகம் எல்லாம் இருப்பதாக[கதைத்து]ச் சொல்லி, வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் பாம்பினம் மிக உயர்ந்ததாக்கும் என்று உலகத்தார்க்கு எடுத்துரைத்திருக்கிறார்கள்.

இப்படியாக, இன்னும் எப்படியாகவெல்லாமோ பம்பினத்தைப் பெருமைப்படுத்தியதோடு, 'பாம்பைத் தெய்வமாக வழிபடுபவர்களை அது ஒருபோதும் கடிப்பதில்லை' என்று உறுதிபடச் சொல்லியும் இருக்கிறார்கள் நம்மவர்கள்.

ஆனால்.....

இவர்களின் உறுதிமொழிக்கு மாறாக, இன்றளவும் வாய்ப்பு அமையும்போதெல்லாம், பாம்புகள் மனிதர்களைக் கடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் உயிரிழப்பதும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.

இது குறித்துச் சிந்திக்கும்போது, மனிதர்களில் பலரைப் போல் பாம்புகளும் செய்நன்றி மறந்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது! ஹ... ஹ... ஹ!!!

==========================================================================


திங்கள், 3 ஜனவரி, 2022

இப்படியும் 'சொர்க்கம்' செல்லலாம்!!!

'யோனி பூஜை' செய்தால் மிக எளிதில் சொர்க்கத்திற்குச் செல்ல முடியுமாம். இது வடநாட்டவர் கையாளும் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிற வழிமுறைதான். 

வழி எதுவானால் என்ன, இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும்போதே அங்கு இடம்பிடிப்பது அத்தனை எளிதல்லவே.

இதற்கு, யோனி[பொருள் தெரியாத சின்னஞ்சிறுசுகள் அகராதியில் தேடலாம்]யைப் பூஜித்து, உடல் மனம் ஆகியவற்றின் பிடிகளிலிருந்து விடுபட்டு ஆன்மாவில் ஒன்ற வேண்டும் என்கிறார்கள்.

இவ்வாறு ஆன்மாவுடன் ஒன்றிணைவது[!!!!!] சாத்தியமான பிறகு, அந்த நிலையிலிருந்து சற்றேனும் விடுபட்டுவிடாமல் உடலுறவில் ஈடுபடுதல் வேண்டும். 

இதைச் செய்தால்.....

ஆண் வெளிவிடும் விந்து அவனின் அந்தரங்க உறுப்பு வழியாக வெளியேறுவதற்கு மாறாக, மேல் நோக்கி[???] ஓடுமாம். இதனை, 'ஊர்த்வ ரேதஸ் 'என்கிறார்கள்.

'ஊர்த்வ ரேதஸ்'ஐக் கையாளுவதில் வெற்றி காண்பவர்கள் 'முக்தி' பெறுவது, அதாவது, சொர்க்கம் சேர்வது 100% உறுதி என்கிறது தினமலர்க் கட்டுரை[கட்டுரையின் ஒரு பகுதி] https://krishmani.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/

'இந்த முயற்சியில் வெற்றி கண்டு முக்தி அடைந்தவர்கள் பலர் இருந்தார்கள்; இருக்கிறார்கள்' என்று உறுதிபடச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

"இருக்கட்டும், விந்துவை வெளியேற்றாமல் மேலே ஏற்றுவதற்கும், சொர்க்கத்துக்குப் போவதற்கும் என்னய்யா சம்பந்தம்?"  என்று கேட்டுக் கடுகடுக்க வேண்டாம். பொய்யான தகவல்களைத் 'தினமலர்' ஒருபோதும் தராது என்பதால்.....

இக்கணமே, 'ஊர்த்வ ரேதஸ்' உடலுறவு முறையைச் செயல்படுத்துங்கள். நீங்கள் சொர்க்கம் புகுவது சர்வ நிச்சயம்.

உங்களையெல்லாம் வரவேற்பதற்காக அடியேன் அங்கே காத்திருப்பேன் என்பதை அளப்பரிய ஆனந்தப்பெருக்குடன் சொல்லி இன்புறுகிறேன்!

ஹி... ஹி... ஹி!!!